விமரிசையாகக் கொண்டாட்டப்பட்ட ஆடிப் பெருக்குவிழா

0

இங்கே கிளிக் பண்ணுங்க.. - வேலை பெறுவது எளிது..

காவிரி ஆற்றங்கரைகளில்
விமரிசையாகக் கொண்டாட்டப்பட்ட
ஆடிப் பெருக்குவிழா

ஆடி 18ஐ முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை பெரிய கோவில் புது ஆற்றுப் படித்துறை, திருவையாறு புஷ்ப மண்டப படித்துறை, சுவாமிமலை காவிரி படித்துறை உள்ளிட்ட ஆற்றங்கரைகளில் ஆடிப் பெருக்கு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

தற்போது விற்பனையில் அங்குசம் இதழ்...

புதுமணத் தம்பதிகள் தாலி பிரித்து வழிபட்டனர்.

திருவையாறு காவிரி புஷ்ப மண்டப படித்துறையில் காலை முதலே பெண்கள் குடும்பம் குடும்பமாக வரத் தொடங்கினர். படித்துறையில் பெண்கள் வாழை இலையை விரித்து மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வைத்தனர்.

செம்ம சூப்பரான திரைப்படம்..

4

மேலும் தேங்காய், பழங்கள், மஞ்சள், பனை ஓலையால்; செய்யப்பட்ட காதோலை, கருகமணி மாலை, வளையல், அரிசி, வெல்லம், பேரிக்காய், கொய்யா, மாதுளை, விளாம்பழம் ஆகியவற்றை வைத்து விளக்கேற்றினர்.

அதைத் தொடர்ந்து, மாவிளக்கு, அரிசி, வெல்லம் கலந்த காப்பு அரிசி ஆகியவற்றை வைத்து சாம்பிராணி, ஊதுபத்தி உள்ளிட்ட வாசனைப் பொருள்களை ஏற்றி வழிபாடு செய்ததுடன், மஞ்சள் பிள்ளையாருக்கும் காவிரி தாய்க்கும் தாம்பூலத்தில் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.


இவ் வழிபாடு முடிந்தவுடன், புத்தாடை அணிந்து வந்திருந்த புதுமண தம்பதியினர் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். பின்னர், திருமணத்தின்போது தாங்கள் அணிந்திருந்த மாலைகளை பைகளில் பத்திரமாகக் கொண்டு வந்து அவற்றை காவிரி ஆற்றில் விட்டனர்.

சுமங்கலிப் பெண்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிறை கழுத்தில் கட்டிக் கொண்டனர்.

5
Leave A Reply

Your email address will not be published.