திருச்சி போலிஸ் கமிஷனர் இரவில் நடத்திய அதிரடி ! நேரடி ரிப்போர்ட்!

0

திருச்சி போலிஸ் கமிஷனர் இரவில் நடத்திய அதிரடி !

நேரடி ரிப்போர்ட்!

 

12.13.2020 இரவு 10.30 மணியளவில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்குப் பின்புறம் உள்ள சாலையில் 25 பேர் கொண்ட திருநங்கை கும்பல் நடுரோட்டில் நின்று கொண்டு சாலையில் வருபவர்களிடம் மறித்துக் காசு பறிப்பதும், கொடுக்கத் தயங்குவர்களைக் கெட்ட வார்த்தையில் அர்ச்சனை செய்தும் இவர்களின் அடாவடியில் பயந்து பொதுமக்கள் பயத்தில் ஓட்டம் பிடித்துக்கொண்டிருந்தனர்.

திருநங்கைகள் தனி ராஜியத்தில்

இந்த டெரர் நேரத்தில் ஒரு PATROL வாகனத்தில் வந்த ரோந்து  போலிஸ்கார்கள் சிலர் அங்கே வந்து திருநங்கைகள் பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கச் செய்யும்  அட்டூழியத்தைக் கண்டு சிரித்துக் கொண்டிருந்தனர்.

 

போலிஸ்காரர்கள் வேடிக்கை பார்த்த திருநங்கை கும்பலில் ஒருவர் அந்த மூத்த காவல் அதிகாரியின் காதில் கிசுகிசுப்பாகச் சொல்ல அவர் சிரித்துக்கொண்டே அங்கே என்ன நடக்கிறது என்பதைப் போலிஸ்காரர் மற்றும் PATROL வாகனம் சம்பவ இடத்தில் நடந்ததை விசாரிக்காமலேயே கடந்து சென்று சென்றுவிட்டது.  போலிஸ்காரர்களும் திருநங்கைகளின் இந்த அட்ராசிட்டியை கண்டுகொள்ளாமல் செல்வதையும் பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் செய்வதறியது திகைத்துக்கொண்டிந்தனர்.

திருநங்கைகளிடம் போலிஸ்…

 

இந்த அட்ராசிட்டி குறித்துக் குறித்து நம்மிடம் புகார் தெரிவித்தனர். உடனே நாம்  திருச்சி மாநகரக் காவல் ஆணையரின் கவனத்திற்குப் புகைப்படத்துடன் சரியாக 10.25 மணிக்குக் கொண்டு சென்றோம். உடனே நடவடிக்கை எடுக்கிறேன் என்று பதிலளித்தார்..

 

அடுத்தச் சில நிமிடங்களில் மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர்  இராமசந்திரன்  வாக்கி டாக்கியில் அலார்ட் தகவல் கொடுத்த  அடுத்தடுத்த நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு இரவு பணியிலிருந்த  ஏட்டு திருமுருகன் இருசக்கர வாகனத்தில் வந்து திருநங்கை கும்பலை வளைத்து பிடித்து விசாரித்துக் கொண்டிருந்தார்.  அதன் பிறகு ஏற்கனவே வந்து சென்ற  PATROL  – 1  வாகனம் வந்தது. அதிலிருந்து இறங்கிய போலிஸ்காரர் மற்றும் ஓட்டுநர் இறங்கி  ஏதுவும் தெரியாதது போன்று புதிதாக விசாரிக்கத் துவங்கினார்.

 

இவர்கள்  விசாரித்துக் கொண்டிருந்த  அடுத்த பத்து நிமிடத்திற்குள் இரவு பணியிலிருந்த இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையை ஆரம்பிக்கத் திருநங்கை கும்பலோ நாங்கள் அப்படி ஏதும் செய்யவில்லை மறுக்க ஆரம்பித்தனர்.

போலிஸ் வலையத்தில் திருநங்கைகள்

 

இந்த விசாரணையில் அடுத்து  உதவி ஆணையர் வந்து சேர்ந்து கொள்ள விசாரணை முழு வடிவத்திற்கு வந்தடைந்தது. அதன் விளைவாகச் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையுமே காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

 

விசாரணையின் முடிவில் இரவு 10க்கு மேல் திருநங்கைகள் மத்திய பேருந்து நிலையம் பகுதிகளில் சுற்றிவருவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என்று கண்டிப்புடன் விடுவிக்கப்பட்டனர்  மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்

திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் லோகநாதன் ஐ.பி.எஸ்.

 

இதன் பிறகு சம்பவ இடத்தில் மப்டி காவல் அதிகாரிகள் விசாரிக்க ஆரம்பித்தனர் அவர்களிடம் அங்கிருந்து ஓட்டுநர்கள் சிலர்  12.10.2020 மூன்று பேர் கொண்ட திருநங்கை கும்பல் இரவு 2.30 மணி அளவில் பேருந்து நிலையத்திற்குப் பின்புறம் உள்ள தோல் மருத்துவமனை வழியாகக் கருமண்டபம் செல்லும் சாலையில் ரோட்டில் நடந்து வந்த ஒரு நபரை வலுக்கட்டாயமாக வம்பு இழுத்து அடித்து உதைத்து அட்ராசிட்டி செய்தனர். இதே போன்று தினமும் நடக்கிறது. எங்களால் ஒன்று செய்யமுடிவில்லை நீங்கள் தான் ஏதாவது ஒரு முடிவெடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர்.

தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சி மத்திய பேருந்து நிலையம் பயணிகள் வரவேற்கும் நிலையமாக இருந்து வந்த நிலையில்மத்திய பேருந்து நிலையத்தைச் சுற்றி உள்ள அத்தனை திசைகளில் உள்ள சாலையில் இரவு நேரங்களில்  திருநங்கைகளின் அட்ராசிட்டி தொடர்ந்து கொண் இருக்கிறது.  மத்திய பேருந்து நிலையம் – பொன்னகர் சாலை, மத்திய பேருந்து நிலையம் – அரிஸ்டோ செல்லும் சாலை, மத்திய பேருந்து நிலையம் – சின்ன மிளகுபாறை செல்லும் சாலை, மத்திய பேருந்து நிலையம் – வெஸ்டிரி பள்ளி சாலை, மத்திய பேருந்து நிலையம் – ஒத்தக்கடை சாலை,  மத்திய பேருந்து நிலையம் – பெமினா ஓட்டல் சாலை, மத்திய பேருந்து நிலையம் – மாலைமலர் அலுவலகம் செல்லும் சாலை என அத்தனை திசைகளில் சமீபகாலமாக  வழிப்பறி பகுதியாகவும், ரெட் லைட் பகுதியாகவும், திருடர்களின் கூடாராகமாகும் மாறிக்கொண்டிருக்கிறது. இதைத் தொடர் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோளாக  உள்ளது.

 

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் திருநங்கை கும்பல் பயணிகளிடம் அத்துமீறி நடந்து கொள்வதுடன் அடித்துக் காசு பறிப்பது உடமைகளை மிரட்டி என்கிற பிரச்சனை கவனத்திற்கு வந்தவுடன்  பொதுமக்களின்  நலனில்  அக்கறை கொண்டு  அதிரடி  நடவடிக்கை  மேற்கொண்டு. காவல்துறை என்றும் உங்கள் நண்பன் என்பதை நிரூபித்தார் மாநகரக் காவல் ஆணையர் ஜஜி லோகநாதன்.

– ஜித்தன்

 

 

 

 

.

 

 

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.