குஷ்பு பிஜேபிக்கு சென்றதற்கு காரணம், நிர்பந்தம்மா..?
குஷ்பு பிஜேபிக்கு சென்றதற்கு காரணம் நிர்பந்தம்மா..?
பிரபல தமிழ் பிரபல தமிழ் நடிகையாக உள்ள குஷ்பு, திரைத்துறையை தாண்டி அரசியலிலும் தனது இருப்பை பலப்படுத்தி இருக்கிறார். குஷ்பு இயற்பெயர் (நக்கத்) மேலும் அவர் பிறப்பால் ஒரு இஸ்லாமியர் ஆவார்.
ஆனாலும் குஷ்பு தமிழில் வெளியான பெரியார் படத்தில் மணியம்மை வேடத்தில் நடித்து. தன்னை ஒரு கடவுள் நம்பிக்கை அற்றவராக அடையாளப்படுத்திக் கொண்டார்.
பிறகு திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு பல்வேறு பொறுப்புகளை வகித்திருக்கிறார். மேலும் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய பங்காற்றியவர் குஷ்பு என்பது குறிப்பிடதக்கது.
அந்த சமயத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டார். காங்கிரஸின் செய்தி தொடர்பாளராக செயல்பட்டு வந்தார் குஷ்பு. இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை தெரிவித்து வந்தார். மத்திய அரசை ஆதரித்து கருத்துக்களும் அதே சமயத்தில் கடுமையாக எதிர்த்து விமர்சனங்களை முன்வைத்து வந்தார்.
இந்நிலையில் காங்கிரஸை விட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதிமுகவின் முக்கிய பொறுப்பு குஷ்புக்கு வழங்கப்படலாம் என்றும் கருத்துக்கள் பரவி வந்தன. இந்த நேரத்தில் திடீரென்று குஷ்பு பிஜேபியில் தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறார்.
முதலில் அதிமுகவிற்கே மாறுவதற்கு குஷ்பூ முயற்சித்ததாகவும், ஆனால் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் குஷ்புவை பிஜேபிக்கு செல்ல அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் கசிந்தன.
அதே சமயத்தில் குஷ்புவுக்கு பிஜேபிக்கு செல்ல விருப்பம் இல்லாததால் மறுத்து வந்ததாகவும், ஆனால் தனது கணவர் சுந்தர் .சி வற்புறுத்தலின் பெயரில் பிஜேபியுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிஜேபியில் இணைந்து இருப்பதாகவும் ஆங்காங்கே பேச்சுகள் எழுகின்றன.
இதுபோன்று கட்சி மாறுவது குஷ்புவுக்கு புதிதல்ல. ஆட்சியிலிருக்கும் கட்சிக்கு மாறிக்கொண்டே இருப்பது குஷ்புவின் வழக்கம் என்றும் சிலர் கூறுவதையும் பார்க்க முடிகிறது. இது இப்படி இருக்க குஷ்பு பிஜேபியில் எத்தனை நாள் பயணிக்க போகிறார் என்பது கேள்விக்குறி என்றும் கூறுகின்றனர்.
ஏனென்றால் பிஜேபியில் நமிதா, காயத்ரி ரகுராம் போன்ற நடிகைகள் செயல்பட்டு வரும் நிலையில் குஷ்புவிற்கு எந்த அளவு முன்னுரிமை வழங்கப்படுகிறது என்பது கேள்விக்குறியே.? என்று முக்கிய பிரபலங்கள் கருத்துக்களை கூறுகின்றனர்.