நடிகர் ஆர்யா விருந்தினராக கலந்து கொண்ட ப்ராட்ஸ்லைஃப் ஃபிட்னஸ் ஸ்டுடியோ திறப்பு விழா !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

நடிகர் ஆர்யா விருந்தினராக கலந்து கொண்ட ப்ராட்ஸ்லைஃப் ஃபிட்னஸ் ஸ்டுடியோ திறப்பு விழா – ஓ எம் ஆர் என்று குறிப்பிடப்படும் பழைய மகாபலிபுரம் சாலையில் ப்ராட்ஸ்லைஃப் ஃபிட்னஸ் ஸ்டுடியோ எனும் உடற்பயிற்சி கூடம் தொடங்கப்பட்டிருக்கிறது. இதன் திறப்பு விழாவில் நடிகர் ஆர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.Actor Arya inaugurates Bratzlife Fitness Studio in OMR!

இன்றைய இளைய தலைமுறையினர் தங்களது உடல் ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்க நேரத்தை ஒதுக்கி வருகிறார்கள். அதிலும் தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றும் இளைய தலைமுறையினர் தாங்கள் பணியாற்றும் அல்லது தங்கியிருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று தங்களை உடல் ஆரோக்கியத்திற்கான உடற்பயிற்சிகளை செய்வதில் பெருவிருப்பம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இந்நிலையில் தகவல் தொழில்நுட்ப துறையை சார்ந்த நிறுவனங்கள் அதிகளவில் இருக்கும் ஓஎம்ஆர் சாலையில் சர்வதேச தரத்துடன் கூடிய ப்ராட்ஸ்லைஃப் ஃபிட்னஸ் ஸ்டுடியோ எனும் ஜிம் தொடங்கப்பட்டிருக்கிறது.

துணை முதலமைச்சர் உதயநிதி வாழ்த்து

இதன் திறப்பு விழாவில் காவல்துறை கண்காணிப்பாளர் (பொருளாதார குற்றப்பிரிவு) கே. ஜோஸ் தங்கய்யா, தாம்பரம் மாநகர காவல் துறையின் உதவி ஆணையர் ஆர். ரியாசுதீன், நீலாங்கரை சரக காவல்துறை உதவி ஆணையர் பரத், சென்னை தெற்கு குற்றவியல் குழு காவல் ஆய்வாளர் எஸ். மீனாட்சி சுந்தரம்,உதவி காவல் ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். இவர்களுடன் திரைத்துறையைச் சார்ந்த நட்சத்திர நடிகர்கள் ஆர்யா, ரமேஷ் திலக், அபி ஹாசன், பெசன்ட் நகர் ரவி, நடிகைகள் விஜி சந்திரசேகர், லவ்லின் சந்திரசேகர், தீப்தி, ஷெர்லின் சத் ஆகியோரும், சின்னத்திரை பிரபலங்களான சிது, ஸ்ரேயா ஆஞ்சன், சாய் பிரமோதிதா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Actor Arya inaugurates Bratzlife Fitness Studio in OMR!
Actor Arya inaugurates Bratzlife Fitness Studio in OMR!

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இந்த ஜிம்மின் நிறுவனர் பரத் ராஜ், ‘சீயான்’ விக்ரம், ஆர்யா, ஜெயம் ரவி, சரத்குமார் போன்ற முன்னணி நட்சத்திர நடிகர்களின் பிரத்யேக ட்ரெய்னர் என்பதும், நடிகர்  விஜய் நடிப்பில் வெளியான ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பின் போது சில காட்சிகளுக்காக அவருக்கு பரத் ராஜ் பிரத்யேகமாக பயிற்சி அளித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த உடற்பற்சிகூடத்தில் தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றும் நபர்களுக்கு ஏற்றவாறு பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட அதிவேக இன்டர்நெட் வசதியுடன் கூடிய தனி அறைகள் அமைக்கப்பட்டுள்ளது மேலும் ஐஸ்பாத், ஸ்டீம்பத் போன்ற பல சிறப்பு அம்சங்கள் இந்த ஜிம்ல் இடம்பெற்றுள்ளன.

இதனிடையே ப்ராட்ஸ்லைஃப் ஃபிட்னஸ் ஸ்டுடியோவின் உட்கட்டமைப்பை துபாயில் பல ஆண்டுகளாக இன்டீரியர் டிசைனிங் நிபுணராக பணியாற்றி மற்றும் சென்னையில் உள்ள நியாம் ஸ்டுடியோவின் உரிமையாளருமான நிவேதிதா மோகனின் வழிகாட்டலுடன் பிரம்மாண்டமான பொருட்செலவில் சர்வதேச தரத்துடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் இங்கு பயிற்சிக்காக பொருத்தப்பட்டிருக்கும் அனைத்து உபகரணங்களும் ஸ்பெயின் நாட்டிலிருந்து வெல்கேர் நிறுவ.னத்தின் மூலமாக இறக்குமதி செய்யப்பட்ட உலகத்தரம் வாய்ந்த உபகரணங்கள் ஆகும்

Actor Arya inaugurates Bratzlife Fitness Studio in OMR!
Actor Arya inaugurates Bratzlife Fitness Studio in OMR!

இந்த ஜிம்மில் பிரத்யேக உடற்பயிற்சியுடன், உங்கள் தசைகளை வலுப்படுத்துவதற்கான உடற்பயிற்சியும் வழங்கப்படுகிறது. உங்களது விருப்பத்திற்குரிய பொலிவான தோற்றத்தை பெறுவதற்கான உடற்பயிற்சியும் அளிக்கப்படுகிறது. உடற்பயிற்சியுடன் உங்களது உடல்வாகுக்கு ஏற்ற அளவிலான உணவு பட்டியல், ஊட்டச்சத்து பட்டியல் ஆகியவற்றுக்கான ஆலோசனையும் வழங்கப்படுகிறது. இதனுடன் ஆணழகனுக்கான பயிற்சி, ,பெண்களுக்கான பியூட்டி பேஜென்ட், திருமணமாக இருப்பவர்களுக்கான மேக்ஓவர் பயிற்சி, ஆண்களுக்கான உடல் உறுதி பயிற்சி, தசை வலிமைக்கான பயிற்சி என பிரத்யேக பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.