நகர்ப்புற உள்ளாட்சி -அதிமுக கூட்டணி நிலவரம் -லாபமா நட்டமா ?

0

ஜனவரி 5 க்கு பிறகு தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் துவங்க இருக்கிறது. அதன் பிறகு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது என்ற நிலை உள்ளது. இந்த நிலையில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் நிலைப்பாடு குறித்து அங்குசம் செய்தியில் ஏற்கனவே பார்த்திருந்தோம். இதைத்தொடர்ந்து தற்போது அதிமுக கூட்டணி நிலவரத்தை பார்க்க இருக்கின்றோம்.

ஜெயலலிதா மறைவுக்கு முன்பு வரை ஒன்றரை கோடி தொண்டர்கள், இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி, தமிழ்நாட்டின் தனிப்பெரும் கட்சி என்று எல்லாம் சூளுரைத்துக் கொண்டிருந்தது அதிமுக. ஆனால் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக டெல்லி பாஜகவின் நட்பை எந்த இடத்திலும் கைவிட விருப்பமில்லை. மேலும் டெல்லி பாஜகவின் ஆதரவைதக்க வைத்துக்கொள்ள பாஜக அரசு கொண்டு வந்த பல்வேறு திட்டங்களுக்கு ஆதரவு தந்தால் தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பை சந்தித்தது அதிமுக. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் அதிமுக, பாஜக கூட்டணி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

இப்படி கடந்த கால அனுபவங்கள் இருக்க, தற்போது அதிமுக தலைமையிலான கூட்டணி நிலைப்பாடு குறித்து தன்னுடைய அடுத்த கட்ட நகர்வை முன்னெடுக்க தொடங்கி இருக்கிறது அதிமுக.

கூட்டணியின் முக்கிய கட்சியாக இருந்த பாமக 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது. அதன் பிறகு பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ், அதிமுக கடுமையாக விமர்சித்து கூட்டங்களில் பேசி வருகிறார். இதற்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிச்சாமி தனது கண்டனத்தையும் பதிவு செய்திருக்கிறார். இப்படி அதிமுக, பாமக கூட்டணி முடிவுக்கு வர.

அதிமுக, பாஜக கூட்டணி எந்த அளவிற்கு இருக்கிறது என்று அதிமுக நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைப்பது அதிமுகவிற்கு லாபம் கிடையாது, பாஜகவிற்கு தான் லாபம். மேலும் அதிமுக தோல்விக்கு முக்கிய காரணமாக இருப்பது சிறுபான்மையினருடைய வாக்கு தான். அது அதிமுகவிற்கு கிடைக்காமல் போனதற்கும் பாஜக தான் காரணம். மேலும் பாஜக அரசின் தொடர் நிர்வாக ரீதியான செயல்பாடுகள் இந்தியா முழுக்க எதிர்ப்பு அலையை சம்பாதித்து இருக்கிறது. இந்தியா முழுவதுமே எதிர்ப்பு காணப்படுகிறது. அதே சமயம் தமிழ்நாட்டில் சற்று கூடுதலாகவே எதிர்ப்பு இருக்கிறது. இதனுடைய விளைவு தான் மிகப்பெரிய தோல்வியை அதிமுக சந்திக்க காரணம்.

வரக்கூடிய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் அதிமுக அதிகப்படியான இடங்களில் தோல்வியை சந்திக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதே நேரம் ஒரு சில இடங்களில் வெற்றி பெற்றாலும் பாஜகவிற்கு அது லாபம் தான். ஒன்றுமே இல்லாத இடத்தில் 1 கிடைத்தால் என்ன 10 கிடைத்தால் என்ன அவர்களுக்கு சந்தோஷம் தான் என்று கூறினார்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.