இழுத்தடிக்கும் ஆளுநர் – தொடர்ந்து முயலும் தமிழக அரசு – ஒரு கையெழுத்துக்கு இவ்வளவு அக்கப்போரா ?

0

தமிழ்நாடு அரசும் தமிழக ஆளுநரும் இணக்கமான சூழ்நிலையில் பயணிக்கிறார்கள் என்று வெளியே சொல்லப்பட்டாலும், உண்மை நிலவரம் அப்படி ஒன்றும் இல்லை என்று நடப்பு அரசியலின் நிலவரம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர். மேலும் தமிழக ஆளுநர் சில முக்கியமான அரசாணைகளில் கையெழுத்திடுவதில் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறார். இது தமிழக அரசிற்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனாலும் ஆளுநரை பகைத்துக் கொள்ள விரும்பாத தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஆளுநருடன் நட்புறவை மேம்படுத்த முயற்சி எடுத்து வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் தமிழ்நாடு அரசு தமிழக ஆளுநரின் கையெழுத்திற்காக பல்வேறு அரசு ஆணைகளை அனுப்பி வைக்கிறது. இப்படி அனுப்பப்பட்ட அரசாணைகளில் சில முக்கியமான அரசாணைகளும் இடம் பெற்றிருந்தன.

இவ்வாறு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் தைத் திங்கள் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவிக்க வேண்டிய இரண்டு முக்கிய அரசாணைகள் உடன் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. தலைமைச் செயலகத்தில் இருந்து வந்த எல்லா அரசாணைகளையும் படித்து பார்த்து கையெழுத்துப் போட்ட ஆளுநர், தைத் திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்க வேண்டும் என்று சொல்லப்பட்ட அந்த குறிப்பிட்ட அரசாணையை மட்டும் கிடப்பில் வைத்து விட்டாராம்.

தமிழ்நாடு சட்டமன்றம்

இதைத்தொடர்ந்து கையெழுத்து போடப்பட்ட அரசாணைகள் மட்டும் சட்டமன்றத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறது. ஆனால் தைத் திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்கும் அரசாணை சட்டமன்றத்திற்கு வரவில்லையாம். இதைப் பார்த்த தமிழக முதல்வர் உடனடியாக அமைச்சர் துரைமுருகனை அழைத்து, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைத்து ஆளுநரிடம் விளக்கத்தைக் கொடுத்து அரசாணையை பெற்று வாருங்கள் என்று கூறி அனுப்பி வைத்திருக்கிறாராம்.

துரை முருகனும் ஆளுநரை சென்று சந்தித்து, ஜனவரி 5ஆம் தேதி நடைபெறும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் தொடக்க உரை நிகழ்த்த அளித்ததோடு மட்டுமல்லாமல் அழைப்பிதழையும் வழங்கி இருக்கிறார். மேலும் தைத் திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக ஏன் தமிழ்நாடு அரசு அறிவித்து அரசாணை வெளியிட இருக்கிறது என்பது குறித்து விளக்கம் அளித்திருக்கிறார்.

தமிழ்நாடு ஆளுநர் மாளிகை

விளக்கத்தைக் கேட்டு கொண்ட தமிழக ஆளுநர் நான் விசாரித்துவிட்டு சைன் செய்கிறேன். ஒன்றும் அவசரமில்லை, நான் இப்பொழுது தான் வந்து இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு அமைச்சரை வழி அனுப்பி வைத்திருக்கிறாராம்.

ஆளுநரின் இந்த பதில் தலைமைச் செயலக வட்டாரத்திற்கு மேலும் தர்மா சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறதாம்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.