அனைத்தும் அனைவருக்கும் – நாற்கரப் போர் பேசும் அரசியல் !
அதிகாரம் என்பது செயல்பாடுகளை நெறிமுறைப்படுத்துவதற்கே அன்றி தனிமனித தாக்குதலாக மாறக்கூடாது என்பதையும் சதுரங்க விளையாட்டின் பின்னணியில் இந்த படம் பேசுகிறது.
அனைத்தும் அனைவருக்கும் – நாற்கரப் போர் பேசும் அரசியல் !
V6 பிலிம் பிரைவேட் லிமிடெட் சார்பில் S.வேலாயுதம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘நாற்கரப்போர்’. இயக்குநர் ஸ்ரீவெற்றி இப்படத்தை இயக்குகிறார். ஹெச்.வினோத், ராஜபாண்டி உள்ளிட்ட இயக்குநர்களிடம் இவர் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.
‘இறுகப்பற்று’படம் மூலம் கவனம் பெற்ற நடிகை அபர்ணதி கதாநாயகியாக நடிக்க, படத்தின் மைய கதாபாத்திரமாக ‘சேத்துமான்’ படத்தில் நடித்த அஸ்வின் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ‘கபாலி’ பரியேறும் பெருமாள் புகழ் லிங்கேஷ், வில்லனாக சுரேஷ் மேனன் ஆகியோர் நடிக்கின்றனர். தற்போது இப்படத்தின் டைட்டில் லுக், பர்ஸ்ட் லுக வெளியாகி உள்ளது.
‘நாற்கரப்போர்’ குறித்து இயக்குநர் ஸ்ரீவெற்றி கூறும்போது, “சதுரங்க விளையாட்டை மையப்படுத்தி இந்த படம் உருவாகி உள்ளது. ஏழை-பணக்காரன், உயர் ஜாதி-தாழ்ந்த ஜாதி, அரசியல்வாதி-மக்கள் என இவர்களுக்கு இடையே காலங்காலமாக இருக்கும் பிரச்சினைகளையும், அனைத்தும் அனைத்து மக்களுக்கும் சம அளவில் கிடைக்கும் படியான தொலைநோக்குப் பார்வை இல்லாத வரை இங்கு இவர்களுக்குள்ளான போர் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்ற அரசியலை பேசுகிறது. அதிகாரம் என்பது செயல்பாடுகளை நெறிமுறைப்படுத்துவதற்கே அன்றி தனிமனித தாக்குதலாக மாறக்கூடாது என்பதையும் சதுரங்க விளையாட்டின் பின்னணியில் இந்த படம் பேசுகிறது. தூய்மைப்பணி செய்யும் சமுதாயத்தில் இருந்து வந்த ஒருவன் எப்படி ‘கிராண்ட் மாஸ்டர்’ ஆகிறான்? அதற்காக அவன் சந்திக்கும் அரசியல் ரீதியான, ஜாதி ரீதியான, பிரச்சனைகள் என்ன என்பதை சொல்லும் அழகான ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமாவாக இந்த ‘நாற்கரப்போர்’ உருவாகி உள்ளது” என்கிறார்.
பட ரிலீஸுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.
தொழில் நுட்பக் கலைஞர்கள் விவரம்
ஒளிப்பதிவு-அர்ஜுன் ரவி& ஞானசேகரன்
இசை: தினேஷ் ஆண்டனி
படத்தொகுப்பு -ரஞ்சித் சி கே
கலை — ஸ்ரீமன் ராகவன்
ஆக்ஷன் – பிரபு
பாடல்கள் ; குகை மா.புகழேந்தி
எக்ஸ்கியூட்டிவ்தயாரிப்பாளர்—அருண்மொழித்தேவன்
மக்கள் தொடர்பு ; ஏ.ஜான்
மதுரை மாறன்.