பிறந்த தேதியில் மறைந்த ஆர்எம்வி

ரஜினியை வைத்து அவர் எடுத்த பாட்ஷா படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதன் வெற்றி விழாவில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று ரஜினி பேசியதால் சர்ச்சையானது.

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பிறந்த தேதியில் மறைந்த ஆர்எம்வி

எம்ஜிஆர் கழகத்தின் நிறுவனரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது( 98.) எம்ஜிஆர் விசுவாசிகளின் ஒருவர் ஆர்எம்வீ என்று அழைக்கப்படும் இராம. வீரப்பன்.  புதுக்கோட்டை, மாவட்டம் அறந்தாங்கி அடுத்த வல்லத்திராக்கோட்டை   என்னும் கிராமத்தில்  9 September 1926 பிறந்தார்

அங்குசம் இதழ்.. இலவசமாக படிக்க...

வயது மூப்பு காரணத்தால் ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக ஆர்.எம். வீரப்பன் 2024 ஏப்ரல் 9 அன்று காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

1977ம் ஆண்டு முதல் 1987ம் ஆண்டு வரை தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக விளங்கினார். எம்ஜிஆர் அமைச்சரவையில் முக்கியத்துவம் பெற்றிருந்தார். அரசியலில் தனக்கென பல சிஷ்யர்கள் உருவாக்கினார். இன்றைய ஜாம்பவான்களான ஜெகத்ரட்சகன், திருநாவுக்கரசர், ஏ.சி. சண்முகம் ஆகியோர் இவரது சிஷ்யர்கள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

தமிழகத்தில் மூத்த திராவிட அரசியல் தலைவரும், அதிமுக முன்னாள் அமைச்சருமானவர் ஆர்.எம்.வீரப்பன். இவர், எம்.ஜி.ஆர். கழகத் தலைவருமாவார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சிக் காலங்களில் அமைச்சராகவும் பதவி வகித்தவர். அதிமுக தலைவராக இருந்தபோதிலும், திமுக தலைவர்களுடனும் நட்பு பாராட்டி வந்தவர்

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

எம்.ஜி.ஆர் 1953ல் “எம்.ஜி.ஆர் நாடக மன்றம்” மற்றும் “எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்” என்ற பெயரில் சினிமா நிறுவனம் ஆரம்பித்தார். இந்த இரண்டு நிறுவனத்திற்கும் இராம. வீரப்பனை நிர்வாக பொறுப்பாளராக நியமித்தார். இராம. வீரப்பன் 1963ல் “சத்யா மூவிஸ்” என்ற பெயரில் சினிமா பட நிறுவனம் ஆரம்பித்தார். தென்னிந்திய நடிகர்சங்க செயற்குழு உறுப்பினராக இருந்தார்.

பிரதமர் இந்திரா மறைந்ததும் 1984ம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலோடு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அந்த நேரத்தில் முதல்வர் எம்ஜிஆர் அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். எம்ஜிஆர் சிகிச்சை பெறும் படங்களையே மக்களிடம் பிரச்சாரமாகக் கொண்டு சென்றார். ஆர்எம்வீ.  இவரது தேர்தல் வியூகத்தால் எம்ஜிஆர் இல்லாமலேயே அதிமுக அமோக வெற்றி பெற்றது.

எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ரஜினி, கமலை வைத்து படங்களை தயாரித்தார். ரஜினியை வைத்து அவர் எடுத்த பாட்ஷா படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதன் வெற்றி விழாவில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று ரஜினி பேசியதால் சர்ச்சையானது. அதனால் ஜெயலலிதாவுக்கு  ஆர்எம்வீ  உடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு அதிமுகவிலிருந்து பிரிந்து எம்ஜிஆர் கழகம் என்ற கட்சியை நடத்தி வந்தார்.

திடீரென்று அன்றைய முதல்வர் கருணாநிதியின் அனுதாபியாக மாறி தற்போதைய முதல்வர் ஸ்டாலின் வரை நட்பில் இருந்தவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 9 ந்தேதி தனது 98 -ஆவது வயது பிறந்தநாளை ஆர்.எம்.வீரப்பன் கொண்டாடினார். தி.நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.