ஒருத்தரை போல இன்னொருத்தர் வாழ முடியாது அவசியமும் இல்லை – அமெரிக்கன் கல்லூரியில் எம்.பி.கனிமொழி வீடியோ

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

ஒருத்தரை போல இன்னொருத்தர் வாழ முடியாது அவசியமும் இல்லை…..நீங்களா? உங்களை பறைசாற்றக் கூடியவராக உங்களுடைய தனி கனவுகளை தேர்ந்தெடுக்க கூடியவர்களாக நீங்கள் இருக்க வேண்டும் மதுரை அமெரிக்கன் கல்லூரி விழாவில் கனிமொழி பேச்சு

மதுரை அமெரிக்கன் கல்லூரி நாள் விழா நடைபெற்றது இந்த விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி மதுரை – ராமநாதபுரம் திருமண்டில பேராயர் ஜெய்சிங்பிரின்ஸ் பிரபாகரன், தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் ஆகியேர்கலந்து கொண்டனர் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கனிமொழி எம்பி கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார்.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

அமெரிக்கன் கல்லூரி ஆண்டு விழா
அமெரிக்கன் கல்லூரி ஆண்டு விழா

விழாவில் பேசும்போது :-

3

இந்த கல்லூரியை நான் பலமுறை தாண்டி சென்று இருக்கிறேன் ஒவ்வொரு முறையும் மதுரைக்கு வரும் பொழுது இவ்வளவு அழகான ஒரு கேம்பஸ் இருக்கக்கூடிய கல்லூரியை தாண்டி செல்லும்போது என்றாவது உள்ளே வந்து இங்கே இருக்க கூடிய அழகான கட்டிடங்களை பெருமை வாய்ந்த இந்த மாணவர்களை சந்திக்க வேண்டும் என நினைத்து இருக்கிறேன்.

அண்ணா, தலைவர் கலைஞர் போன்றவர்கள் எல்லாம் இங்கே வந்து சென்ற இந்த கல்லூரியை காண வேண்டும் என்று பலமுறை நினைத்திருக்கிறேன். எத்தனை அற்புதங்களை நம்முடைய பெருமைகளை இங்கே நீங்கள் சேகரித்து வைத்திருக்கிறீர்கள் என்று பார்க்கும் பொழுது அதை எவ்வளவு ஒரு பொக்கிஷமாக இந்த கல்லூரி நிர்வாகம் உருவாக்கி காட்சியாக, உங்களுக்காக அவர்கள் அதை காட்சிப்படுத்தி இருக்கிறார்கள் என்று பார்க்கும் பொழுது என்னுடைய பாராட்டுகளை வாழ்த்துக்களை அவர்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

4

இங்கு இருக்கக்கூடிய பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்டவர்களுக்கு கல்வி கிடையாது என்று மறுக்கப்பட்ட மாணவர்களுக்காக துவங்கப்பட்ட கல்லூரி அமெரிக்க கல்லூரி. தென் தமிழகத்தில் தொடங்கப்பட்ட முதல் கல்லூரிகளில் ஒரு கல்லூரி தான் இந்த அமெரிக்கன் கல்லூரி என்ற பெருமை பெற்ற கல்லூரி.

வீடியோ லிங்

இந்த கல்லூரி அமெரிக்காவிலிருந்து வந்த மத போதகர்கள் இந்த கல்லூரி தொடங்கப்பட வேண்டும் என்று நினைத்தவர்கள் முதல் முதலாக இந்த மதுரைக்கு வந்து மதுரையை பற்றி கடிதம் எழுதிய போது அந்த கடிதத்துல மதுரையை பற்றி சொல்லும் பொழுது இங்கே தெருக்களெல்லாம் ஒழுங்கற்று இருக்கிறது. குறுகலான சாலைகளாக இருக்கிறது. மக்கள் விவசாயம் கால்நடைகள் வளர்ப்பதில் அந்த தொழிலை செய்து கொண்டிருக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். கடுமையாக உழைக்கிறார்கள். ஆனால் ஜாதி என்பதிலே பிரிந்து கிடக்கிறார்கள் ஜாதி சண்டைகள், சச்சரவுகள் அவர்களுக்கு இடையே தொடர்ந்து கொண்டிருக்கிறது. என கடிதம் எழுதி இருக்கிறார்.

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இருந்து ஒடுக்கப்பட்டவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட எத்தனையோ மாணவர்கள் இன்று இந்த இடத்திலே இந்த வளாகத்தில் படிக்கக்கூடிய வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள் என்றால் அந்த பெருமை இங்கு இருக்கக்கூடிய உங்களுடைய கல்லூரிக்கு சேரும் என்பதை நீங்கள் பெருமையோடு கொண்டாட வேண்டும்.

இந்த தமிழ்நாட்டிலே நாம் பெற்றிருக்கக் கூடிய வளர்ச்சி என்பது திராவிட இயக்கம் உருவாகி இருக்கக்கூடிய வளர்ச்சி. நம்முடைய மூதாதையர்கள் சிந்தித்து மக்களுக்காக கொண்டு வந்திருக்கக் கூடிய வளர்ச்சி. எல்லாருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் எல்லாரும் படிக்கக் கூடியவர்களாக படித்தவர்களாக சிந்திக்க கூடியவர்களாக இந்த சமூகத்திலே ஒரு மரியாதை வாழக்கூடியவர்களாக இருக்கக்கூடிய அந்த வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்று ஏற்படுத்தி இருக்கக்கூடிய கட்டமைப்பு தான் இங்கே நாம் அரசியலாக இங்கே நாம் ஒவ்வொரு நாளும் ஆட்சியாக பார்த்துக் கொண்டிருக்கக் கூடிய ஒன்று.

கனிமொழி எம்.பி.
கனிமொழி எம்.பி.

அதிலே மிகப்பெரிய பங்கை ஆற்றி இருக்கக்கூடியது அமெரிக்க கல்லூரி போன்ற பல்வேறு கல்வி நிறுவனங்கள் யார் யாருக்கெல்லாம் படிக்கக்கூடாது படிப்பு உங்களுக்கு மறுக்கப்பட்ட நிலையில்,  நீ படிச்ச என்னாகப் போற என்ற அந்த நிலையை நாம் தாண்டி வந்திருக்கிறோம். இன்றைக்கு யார் வேணாலும் படிச்சிடறோம் படிச்சிட்டு சிலிகான் வேலைக்கு வேலைக்கு போறோம் உலகத்துல இருக்கக்கூடிய எந்த இடத்திற்கு வேண்டுமென்றாலும் நாம் வேலை நிமித்தமாக நம்முடைய கனவுகளை நிஜமாக்குவதற்காக போகக்கூடிய வாய்ப்பை பெற்றிருக்கிறோம்.

ஆனால் இந்த இடத்துக்கு இந்த கல்லூரியில் இங்கே வந்து நீங்கள் அமர்ந்து இந்த வாய்ப்புகளை பெறுவதற்கு எத்தனை போராட்டங்களை நாம் கடந்து வந்திருக்கிறோம் என்பதை நாம் ஒவ்வொரு நாளும் இந்த நிகழ்வின் வழியாக நான் வைக்க விரும்புகிறேன். ரொம்ப நாளைக்கு முன்னாடி நானும் ஒரு நாள் அங்கே இருந்து இருக்கிறேன். மேடையில் இருக்கக்கூடியவர்கள் எப்ப பேசி முடிப்பாங்க கன்சூரன்ஸ் ப்ரோக்ராம் எப்போ ஆரம்பிக்கும் நானும் காத்து கிடந்திருக்கிறேன்.

இந்த தலைமுறை இன்னும்  அதிகமான சிந்தனைகள் இன்னும் அதிகமான தெளிவு பெற்றிருக்கக் கூடிய ஒரு சமூகத்தை ஒரு சமுதாயத்தை ஒரு தலைமுறையை சேர்ந்தவர்கள் நீங்கள். அதனால உங்க கையில இருக்கக்கூடிய டெக்னாலஜியை புரிந்து கொண்டிருக்கக் கூடியவர்கள் எங்களையெல்லாம் எத்தனையோ மடங்கு தாண்டி பல்வேறு சாதனைகளை செய்யக்கூடியவர்கள் இன்னைக்கு எங்களையெல்லாம் விட உங்களுக்கு இருக்கக்கூடிய தெளிவு, அறிவு புரிதல் என்பது பல மடங்கு அதிகமான ஒன்று அதனால இந்த இத்தனை விஷயங்களையும் வைத்துக்கொண்டு உங்களுடைய சாதனை என்ன? உங்களுக்கு பிடித்த வாழ்க்கை என்ன ? நீங்கள் செய்ய நினைப்பது என்ன ? நீங்கள் மாற்ற நினைப்பது என்ன ? சில பேர் பேசிக் கொண்டிருக்கிறார்கள் இந்த டெமோகிராஃபி மாறவே கூடாது.

வீடியோ லிங்

தந்தை பெரியார், தலைவர் கலைஞர் அவர்கள்,  பேரறிஞர் அண்ணா போன்றவர் வாழ்நாளெல்லாம் பாடுபட்டார்கள் என்று இந்த டெமோகிராபிய ஒடச்சு காட்டி நானும் படிப்பேன்னு யாரெல்லாம் ஒதுக்கி வைத்திருந்தாங்களோ அவங்க வந்து படிக்கிறதுக்கு தான் நீங்க நினைச்சா எதையும் செய்ய முடியும்.

அமெரிக்கன் கல்லூரி, தமுக்கம் மைதானத்திலேயே நீங்க போராடிய பொழுது தான் சென்னையில் மாணவர்கள் போராடிய போது தான் ஒன்றிய அரசாங்கம் திரும்பி பார்த்த ஜல்லிக்கட்டுக்கு கொண்டு வந்த சட்டத்தை மாற்றிக் கொண்டது. ஆனால் உங்களுடைய குரல் எதையும் மாற்றும் நம்முடைய அடையாளங்களை மீட்டெடுப்பதாக இருக்கட்டும், மொழியை மீட்டெடுப்பதாக இருக்கட்டும் எதுவாக இருந்தாலும் அது உங்கள் கைகளிலே இருக்கிறது.

உங்களைச் சுற்றி நடக்கக்கூடிய உலகத்தை இந்த நாட்டை இந்த நாட்டில் இருக்கக்கூடிய அரசியலை புரிந்து கொள்ளக் கூடியவர்களாக நீங்கள் இருக்க வேண்டும் அதற்கு உங்களை சுற்றி இருக்கக்கூடிய நிலைகள் என்ன என்பதை நீங்கள் ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்த்தாலே அந்த மாற்றத்திற்கு தலைவர்களாக நீங்கள் மாற முடியும் அதுதான் உங்க கிட்ட இன்னைக்கு நான் வைக்கக்கூடிய அந்த ஒரு சிறு கோரிக்கை.

வீடியோ லிங்

இதை தாண்டி இன்னைக்கு இந்த சமூகம் என்பது பல அழுத்தங்கள் நிறைந்த ஒன்றாக மாறிக் கொண்டிருக்கிறது. எங்களுக்கு இருந்ததெல்லாம் விட உங்களுக்கான அழுத்தங்கள். இந்த சமூகம் உங்களிடம் எதிர்பார்க்கக் கூடிய விஷயங்கள் இன்னும் அதிகமாக மாறிக்கொண்டே இருக்கிறது. ஆனால் உங்களால் அந்த அழுத்தங்களில் இருந்து மீண்டு வர முடியும். அதை தாண்டி நிற்க முடியும், எழுந்து நிற்க முடியும் ஒருத்தரை போல இன்னொருத்தர் வாழ முடியாது அவசியமும் இல்லை. நீங்களா? உங்களை பறைசாற்றக் கூடியவராக உங்களுடைய தனி கனவுகளை தேர்ந்தெடுக்க கூடியவர்களாக நீங்கள் இருக்க வேண்டும்.

நத்திங் இஸ் லாஸ்ட் நம்முடைய சின்ன சின்ன கனவுகளை தொலைத்தால் கூட அதற்காக மனம் உடையாதவர்களாக உங்களுக்கெல்லாம் பிடிக்கும் நினைக்கிறேன் ஒரு பாட்டு இவனுடைய பாட்டு நான் முத்துக்குமார் உடைய பாட்டு
ஒரு நாள் என் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது
மறுநாளும் வந்துவிட்டால் துன்பம் தெரியும் தொடராது
எத்தனையோ கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்
அத்தனை கண்ட பின்பும் பூமி இங்கு பூ பூக்கும்
இங்கே பூக்கக்கூடிய பூக்களாகஅத்தனை சோதனைகளையும் வெற்றிகளாக மாற்றக்கூடியவர்களாக நீங்கள் வாழ வேண்டும் வளர வேண்டும் என்றார்.

-ஷாகுல்

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.