அமரர் அன்பில் பொய்யாமொழியின் 27 ஆம் ஆண்டு நினைவு நாள் ! அன்பில் மகேஸ் மரியாதை!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், திராவிட இயக்க முன்னணித் தலைவர்களில் ஒருவரான அன்பில் தர்மலிங்கம் அவர்களின் புதல்வரும், திமுக இளைஞர் அணி தொடங்கப்பட்ட நாளில் இருந்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்தவருமான, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாநில இளைஞரணி துணைச் செயலாளருமான, அன்பில் பொய்யாமொழி அவர்களின் 27 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில், அவரது திருவுருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் கழக நிர்வாகிகளுடன் மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினார்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இந்நிகழ்வில் மாநகர செயலாளர் மு.மதிவாணன், வண்ணை அரங்கநாதன், சேகரன், சபியுல்லா, பகுதி செயலாளர் மோகன், மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு-பொதுக்குழு உறுப்பினர்கள்,பகுதி,ஒன்றிய,நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதாவது:
“சட்டமன்றம் சட்டமன்றமாக இல்லாமல், சண்டை மன்றமாக மாறியுள்ளது. சட்டமன்றம் சண்டை மன்றமாக மாறக்கூடாது. மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டும்.
முதலமைச்சர், மக்கள் அன்புடனும் நம்பிக்கையுடனும் ஆட்சிப் பொறுப்பை வழங்கியுள்ளதாகக் கூறுகிறார். அந்த நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்கு ‘டூ த பாயிண்ட்’ என்ற வகையில் நேரடியாகப் பதிலளிக்க வேண்டும். ஒவ்வொரு துறைக்கும் அந்தந்த துறை அமைச்சர்களே பதிலளிப்பது பொருத்தமானதாக இருக்கும்.
புதிய அமைச்சர்கள் சட்டமன்றத்திற்கு வந்துள்ளதால், ஆரம்பத்தில் அனுபவக் குறைபாடு இருக்கலாம். ஆனால், எத்தனை நாட்களுக்கு இந்த அனுபவக் குறைபாடு தொடரும் என்ற கேள்வி எழுகிறது.
மானியக் கோரிக்கைகளின்போது முதலில் துறை சார்ந்த சாதக, பாதகங்கள் குறித்து விவாதம் நடத்த வேண்டும். அதன்பிறகே புதிய அறிவிப்புகளை வெளியிட வேண்டும். ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிப்புகள் முறையாகச் செயல்படுத்தப்பட்டுள்ளனவா என்பது அடுத்தகட்ட விவாதமாக இருக்க வேண்டும்.
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள துயரச் சம்பவம் உள்ளிட்ட மக்கள் உயிர் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும்போது, அரசு தரப்பினர் எடுத்துள்ள நடவடிக்கைகளைத் தெளிவாக விளக்க வேண்டும்.
துறை சார்ந்த செயலாளர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் இருப்பதால், சம்பந்தப்பட்ட துறை அமைச்சரே பதிலளிப்பது நம்பகத்தன்மையை ஏற்படுத்தும்.
மேகதாது அணை விவகாரத்தில் அமைச்சர்கள் வெவ்வேறு கருத்துகளைத் தெரிவிப்பதால், டெல்டா விவசாயிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் முதலமைச்சரின் நிலைப்பாடு என்ன என்பது தெளிவாக இருக்க வேண்டும்.
மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவில் அனைத்து கட்சிகளும் ஒன்றாக நிற்கும் நிலையில், தமிழகத்திலும் மாநில உரிமையைப் பாதுகாக்க அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.
PM SHRI திட்டம் தொடர்பாக தமிழகத்திற்கு வர வேண்டிய சுமார் ₹5,109 கோடி நிலுவைத் தொகையை ஒன்றிய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். இந்த நிதி கிடைக்காததால் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் சம்பளம் உள்ளிட்ட விஷயங்களில் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.
PM SHRI நிதி தொடர்பாக ஒன்றிய அரசிடம் தாம் நேரடியாகப் பேசியதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அப்போதைய ஒன்றிய அமைச்சரைச் சந்தித்ததாகவும், ராகுல் காந்தியிடமும் இதனால் ஏற்படும் பாதிப்புகளை எடுத்துரைத்ததாகவும் தெரிவித்தார்.
பட்டியலின மக்களுக்கு புதிய அங்கீகாரமும், புதிய திட்டங்களும் கிடைக்க வேண்டும். வன்னியரசு முன்பு பேசிய கருத்துகளுக்கும், தற்போது சட்டமன்றத்தில் அவர் பேசும் கருத்துகளுக்கும் வித்தியாசம் இருப்பது வருத்தமளிக்கிறது.
லஞ்சம் தொடர்பாக அமைச்சர் முன்பு தெரிவித்த கருத்தை பின்னர் மாற்றிப் பேசியதாகக் குற்றம்சாட்டிய அவர், சட்டமன்றத்தில் கூறப்படும் கருத்துகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றும், அவைக்குறிப்பில் இடம்பெற்றுள்ள கருத்தை நிரூபிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். முதலில் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான பொறுப்புகளை நிறைவேற்றிவிட்டு, அதன் பிறகு இந்திய பிரதமர் அல்லது அமெரிக்க அதிபர் கனவு பற்றி பேசலாம்  அதில் தவறில்லை.
பெண்களுக்கு வழங்குவதாகக் கூறிய ₹2,500 மகளிர் உரிமைத்தொகை, படித்த இளைஞர்களுக்கு வழங்குவதாகக் கூறிய ₹4,000, மீனவர்களுக்கு வழங்குவதாகக் கூறிய ₹2,000 இடைக்கால நிதி உள்ளிட்ட வாக்குறுதிகள் என்ன ஆனது என கேள்வி எழுப்பினார்.
ஆறு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் எனக் கூறிவிட்டு, தற்போது மூன்று சிலிண்டர்கள் என மாற்றியுள்ளதாகவும், இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட வாக்குறுதிகளிலும் அரசு தெளிவான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
மொத்தத்தில், சட்டமன்றத்தில் சச்சரவுகளைத் தவிர்த்து, மக்கள் பிரச்சினைகள், மாநில உரிமைகள் மற்றும் அரசு அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் குறித்து ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டும் என்பதே முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் பேட்டியின் முக்கிய கருத்தாக அமைந்தது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.