500க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள் பங்கேற்ற சர்வதேச யோகா தினம் !

0

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

500க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள் பங்கேற்ற சர்வதேச யோகா தினம்

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் வாழும் அனைத்து வித மக்களும் , யோகாசனங்களை செய்து பயன்பெற வேண்டும் என்பதற்காக அதை சர்வதேச தினமாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடி ஐநா சபைக்கு வேண்டுகோள் விடுத்தார்.

2
500க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள் பங்கேற்ற சர்வதேச யோகா தினம்
500க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள் பங்கேற்ற சர்வதேச யோகா தினம்

அதை ஏற்றுக் கொண்ட ஐநா சபை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கிறது.அதன்படி 21.06.2023 நாடு முழுவதும் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டு பல்வேறு யோகாசனங்களை பயிற்சி செய்து மாணவ மாணவியர் அசத்தினர்.

3
500க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள் பங்கேற்ற சர்வதேச யோகா தினம்
500க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள் பங்கேற்ற சர்வதேச யோகா தினம்

அந்த வகையில், சேலம் மாநகர் குரங்குச்சாவடி பகுதியில் உள்ள, ‘அரைஸ்’ பள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகாசன நிகழ்வு நடைபெற்றது.இதில் பள்ளியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று சூரிய நமஸ்காரம், பத்மாசனம், வஜ்ராசனம் , தடாசனம் உள்ளிட்ட பல்வேறு யோகாசன பயிற்சி மேற்கொண்டனர்.

4

தொடர்ந்து யோகாசனம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர்களால் எடுத்துரைக்கப்பட்டது.

7

– சோழன்தேவ்

Leave A Reply

Your email address will not be published.