ஆசிய போட்டியில் கலந்து கொண்ட திருச்சி வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு!
ஆசிய போட்டியில் கலந்து கொண்ட திருச்சி வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு!
தைவான் நாட்டின் தைபே நகரில் கடந்த 13ம் தேதி முதல் 17ந்தேதி வரை ஆசிய விளையாட்டு போட்டி நடந்தது. இதில், மென்பந்து போட்டியில் 15 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கலந்து கொண்ட 16 பேர் கொண்ட இந்திய அணியில், தமிழக வீராங்கனைகளாக திருச்சியைச் சேர்ந்த ஸ்ரீ காமினி, ஜெனிபர் ஆகியோர் விளையாடினர்.

போட்டியை முடித்து இருவரும், டில்லியிலிருந்து திருக்குறள் எக்ஸ்பிரஸ் மூலம் நேற்று (21.06.2023) திருச்சி வந்தனர். அவர்களுக்கு இரயில் ஜங்ஷனில் பெற்றோர் நண்பர்கள், சகவீரர்கள், பயிற்சியாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் வீராங்கனைகள் கூறியதாவது, நாங்கள் குறுகிய காலத்தில் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டு, ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு விளையாடினோம். அடுத்து வரும் சர்வதேச போட்டியில் கலந்து கொள்வதற்கு அரசு சார்பில் உதவி செய்ய வேண்டும் என்றனர்.
