நான் ரவுடியே கிடையாது ஆனால் கொலை கொள்ளை மட்டும் தான் செய்துள்ளேன் ! ரவுடி வரிச்சூர் செல்வம் கைது ஏன் ?

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

நான் ரவுடியே கிடையாது ஆனால் கொலை கொள்ளை மட்டும் தான் செய்துள்ளேன் !

பிரபல ரவுடி வரிச்சூர் செல்வம் கைது செய்யப்பட்ட பின்னணி என்ன, நான் ரவுடியே இல்லை உங்களைப் போல் நானும் சாதாரண மனிதன் தான் என
சமீப காலங்களில் மீடியாவில் தன்னை விளம்பரப்படுத்திக் கொண்ட பிரபல ரவுடி வருச்சூர் செல்வம் தற்போது அவரது கூட்டாளியை சுட்டு கொன்று ஆற்றில் வெட்டி வீசியதாக வாக்குமூலம் அளித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

1985 ஆம் ஆண்டு தனது தந்தையை தாக்கிய நபரை பழிக்கு பழி வாங்கிய வருச்சூர் செல்வம் அன்று முதல் இன்று வரை பண மோசடி, கட்டப்பஞ்சாயத்து, ஆள் கடத்தல், கொலை மிரட்டல், கொலை முயற்சி, போன்ற பல்வேறு வழக்கு இவர் மேல், நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது,

பிரபல ரவுடி வரிச்சூர் செல்வம்
பிரபல ரவுடி வரிச்சூர் செல்வம்
3

மேலும் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு வரிச்சூர் செல்வத்திடம் கருப்பாயூரணி காவல்துறை மற்றும் கோட்டாட்சியர் தலைமையில் இனி எந்த ஒரு குற்ற செயலிலும் ஈடுபடக்கூடாது என பிரமாண பத்திரம், எழுதி வாங்கியது குறிப்பிடத்தக்கது,

இந்த நிலையில்தான் விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில் (47). மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சூர் செல்வத்தின் கூட்டாளியாக இருந்து பல்வேறு குற்ற செயலில் ஈடுபட்டவர்களின் இவரும் ஒரு நபர் ஆவார்.

4

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கருப்பாயூரணி காவல் நிலையத்திற்கு உட்பட்ட இரட்டை கொலை வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர். அல்லம்பட்டி செந்தில் இந்த கொலை வழக்கில் வரிச்சூர் செல்வம் உட்பட மற்றும் இரண்டு நபர்களை மட்டுமே காவல்துறை கைது செய்து, அல்லம்பட்டி செந்திலை மட்டும் கைது செய்யாமல் இருந்தது காவல்துறை,

அல்லம்பட்டி செந்தில்குமார்
அல்லம்பட்டி செந்தில்குமார்

இந்த நிலையில் தான் இந்த கொலை வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது, அந்த விசாரணையின் போது நீதிபதி மூன்று நபர்களை மட்டும் கைது செய்துள்ளீர்கள், மீதம் உள்ள ஒரு நபரை ஏன் கைது செய்யவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பவே ?

காவல்துறை தரப்பில் அல்லம்பட்டி செந்தில்குமார் காணாமல் போனதாகவும், அவரது மனைவி முருக லட்சுமி விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்ததாக, காவல்துறை தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டது,

இந்த நிலையில் முருக லட்சுமி தனது கணவரை கண்டுபிடித்து கொடுக்குமாறு, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆட்கொணர்வு மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார், இந்த மனு குறித்து மதுரை ஐஜி அஸ்ரா கார்க் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது தொடர்பாக காவல்துறை தரப்பில் அருப்புக்கோட்டை ஏ .எஸ் .பி கருண்காரட் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது, விசாரணையில், காணாமல் போன அல்லம்பட்டி செந்தில் கடந்த 2021 ஜனவரியில் சென்னையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

கொலை செய்யப்பட்ட அல்லம்பட்டி செந்திலின் தொலைபேசியை ஆய்வு மேற்கொண்டதில், வரிச்சூர் செல்வம் மற்றும் அவரது கூட்டாளிகளிடம், கடைசியாக பேசியது தெரிய வந்தது, இந்நிலையில், அருப்புக்கோட்டை ஏ.எஸ்.பி கருண்காரட் தலைமையிலான தனிப்படை போலீசார், வரிச்சூர் செல்வத்தை கைது செய்து.

வரிச்சூர் செல்வத்தை மதுரைக்கு அழைத்துச் சென்ற போலீசார் ரகசிய இடத்தில் வைத்து முறையாக கவனித்து விசாரணை நடத்தியதில், விசாரணையில் கருப்பாயூரணி கொலை வழக்கில், செந்தில் தனக்கு எதிராக மாறிவிடக்கூடாது என்ற எண்ணத்தில் அவரை சுட்டுக்கொன்று வெட்டி தாமிரபரணி ஆற்றில் வீசியதாக போலீசாரிடம், வரிச்சூர் செல்வம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து வரிச்சூர் செல்வத்தை தனிப்படை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் மீண்டும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின்னர் சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வரிச்சூர் செல்வம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

– B. மாரீஸ்வரன்

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.