கிராம கட்டுப்பாட்டை தகர்க்கும் “அயலி”

0

கிராம கட்டுப்பாட்டை தகர்க்கும் “அயலி”

ஆடுகள் வளர்ப்பதை தொழிலாகக் கொண்ட அழகான மலைகிராமம். அக்கம்பக்கத்து கிராமங்களில் இல்லாத ஒரு கட்டுப்பாடு, அந்த ஊரில் கடைபிடிக்கப்படுகிறது. வயது வந்த பெண்கள் மாதவிடாய் நாட்களில் திரும்பிக்கூட பார்க்காமல் ஊரிலிருந்து ஒதுக்குப்புறமாக சென்றுவிடவேண்டும். கரடிகள் உலாவும் அந்தக் காட்டுப்பகுதியில் தீ மூட்டி சமைத்துக் கொள்ளவேண்டும். இரவு ஒதுக்குப்புறமாக இருக்கும் கட்டிடத்தில் படுத்துக்கொள்ளவேண்டும். அவர்கள் கும்பிடும் மல்லேஸ்வரசாமிக்கு பயந்து அப்படியொரு வழக்கத்தை கடைபிடிக்கிறார்கள். மாதவிடாய் காலத்தில் மூன்று நாட்கள் என்றால், குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்கள் 11 நாட்கள் ஊரிலிருந்து ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். இதனால், எந்த நேரத்தில் என்ன ஆபத்து ஏற்படுமோ என்று அக்கிராமத்து பெண்கள் அஞ்சி வாழ்கிறார்கள்.

https://businesstrichy.com/the-royal-mahal/

பல பெண்களுக்கு திருமணமாகி வந்தபிறகுதான் இப்படியொரு வழக்கம் அந்த ஊரில் கடை பிடிக்கப்படுவதே தெரிந்து அதிர்ச்சி அடைகிறார்கள். இதெல்லாம் மாறவேண்டும் என்று அக்கிராமத்திலுள்ள பெண்கள் ஆசைப்படுகிறார்கள்.ஆனாலும், அந்த ஊர் சாமிக்கு பயந்து அச்சப்படுகிறார். மாதவிடாயின்
போது பெண்களை தனிமைப்படுத்துவது தவறு என்று அங்குள்ள பள்ளியின் தலைமை  ஆசிரியர் எவ்வளவோ அறிவுரை
கூறுகிறார்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

ஆனாலும், ஊர் கட்டுப்பாட்டை காரணம் காண்பித்து அம்மக்கள் கேட்க மறுக்கிறார்கள்.
அந்த மக்கள் மனம் மாறினார்களா? மாதவிடாய் காலத்தில் ஒதுக்கிவைக்கப்படும் கட்டுப்பாடு உடைக்கப்பட்டதா? என்பதுதான் ‘அயலி’ வெப் சீரிஸின் மீதிக்கதை என்று நினைத்துவிட வேண்டாம்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஏக்கல்நத்தம் கிராமத்தில் இப்போதும் கடைபிடிக்கப்படும் உண்மைச் சம்பவம் தான் இது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இந்த அவலத்தை  நான்கு மாதங்களுக்கு முன்பு, ஆனந்த விகடன் இதழில் கட்டுரையாக எழுதியுள்ளேன். இப்போது,’அயலி’ வெப் சீரிஸின் கதைக்கு வருவோம். 1990களில் கதை தொடங்குகிறது. வயதுக்கு வந்துவிட்டாலே பள்ளிக்
கூடம் போகக்கூடாது, உடனே, திருமணம் செய்துவைத்து  விடுவார்கள். அந்த ஊர் கோயிலுக்குள் வயது வந்தப் பெண்கள்
நுழையக்கூடாது. இது, அயலி சாமிக்காக கடைபிடிக்கப்படும் ஊர் கட்டுப்பாடு.

இதனால், பெண் குழந்தைகள் 10ம் வகுப்பே படிக்காத அந்த கிராமத்தில் மேற்படிப்பு படித்து டாக்டர் ஆகவேண்டும் என்று ஆசைப்படுகிறாள் மாணவி தமிழ்ச்செல்வி. ஆனால், 9 ஆம் வகுப்பு படிக்கும்போதே வயதுக்கு வந்துவிடுகிறாள். அதற்குப்பிறகு,10 ஆம் வகுப்பு பள்ளிக்கு செல்ல தமிழ்ச்செல்வி என்ன செய்தாள்? அயலி சாமியை வைத்து அந்த
ஊர் பெண்கள் எப்படியெல்லாம்  அடிமையாக்கப் படுகிறார்கள்? அந்த அடிமைத்தனங்களிலிருந்து விடுபாட்டார்களா? என்பதுதான் மீதிக்கதை.

இயக்குனர் முத்துக்குமார்
இயக்குனர் முத்துக்குமார்

‘அயலி’ சடங்குகள் என்கிற பெயரில் இச்சமூகத்தில் தற்போதும் பெண்களுக்கு எதிராக கடைபிடிக்கப்படும் அடக்கு ஒடுக்குறைகளுக்கு எதிராக கிளம்பியிருக்கும் ‘புயலி’.  க்ரைம், த்ரில்லர் கற்பனை கதைகளை ஈஸியாக இயக்கிவிடலாம். ஆனால், கொரோனா முதல்  அலையின் போது அதிகரித்த குழந்தை திருமணங்கள், வேங்கைவயல் போன்ற சமகால சமூக பிரச்சனைகளை எடுப்பதுதான் சவாலானது.  அந்த சவாலில் சதம் அடித்திருக்கிறார் இயக்குனர் முத்துக்குமார். தலைமையாசிரியர் கதாப்பாத்திரம் கொஞ்சம் கருத்தூசி போட்டாலும் தமிழ்ச்செல்வியும், அவரது அம்மா கதாப்பாத்திரப் படைப்பும் பிரச்சார நெடியை வீசாம மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளன.

படம் முழுக்க பல இயல்பான கதாப்பாத்திரங்கள் நம்மோடு ஒன்றிணைந்து விடுகின்றன.’அயலி’கள் ‘செயலி’கள் போல் புது புதிதாக வரணும்.

 -வினி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.