பாஜக – அதிமுக கூட்டணி தொடரும் அறிவிப்பு – டிசம்பர் 4ஆம் தேதி ?

0

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

பாஜக – அதிமுக கூட்டணி தொடரும் அறிவிப்பு டிசம்பர் 4ஆம் தேதி

பாஜகவோடு 2024 மற்றும் 2026இல் நடைபெறும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் கூட்டணி இல்லை என்று அதிமுக அறிக்கை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துவிட்டது. பாஜக மாநிலத் தலைமையும் தேசியத் தலைமையும் தொடர்ந்து அமைதி காத்து வருகின்றன.

2

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கூட்டங்களில் பேசும்போது,“சிறுபான்மையினர் நலம் காப்பதே நம் குறிக்கோள். பாஜகவோடு எந்தக் காலத்திலும் இனிக் கூட்டணி என்பதே இல்லை” என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
ஆனாலும், திமுக உள்ளிட்ட கட்சிகள் இது தற்காலிக அறிவிப்புதான். விரைவில் பாஜக-அதிமுக கூட்டணி தொடரும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். காரணம் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக பிரதமர் வேட்பாளர் மோடி என்றே மறைமுகமாகச் சொல்லி வருவதுதான் சந்தேகத்தை அதிகப்படுத்துகின்றது.

இந்நிலையில், ஊடகங்களில் பாஜகவின் எஸ்.என்.நாகராஜன் மற்றும் இரவி ஆகியோர் கருத்து தெரிவிக்கும்போது,“பாஜக-அதிமுக கூட்டணி தொடர வாய்ப்பு உள்ளது. அதிமுக கூட்டணியிலிருந்து விலகியதற்கு இதுதான் காரணம் என்பதை இதுவரை தெரிவிக்கவில்லை. அண்ணாமலையை மாநிலத் தலைமையிலிருந்து நீக்கவேண்டும் என்றும் அதிமுக கோரவில்லை. 2026இல் சட்டமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்கும் என்பதே அதிமுகவைக் கோபம் கொள்ளவைத்துள்ளது. விரைவில் தேசியத் தலைமை அதிமுகவோடு தொடர்பு கொண்டு, அதிமுகவின் கோபத்தைப் போக்கிவிடும். கூட்டணி தொடரும்” என்றார்கள்.

3
சபீர் அகமது - பத்திரிகையாளர்
சபீர் அகமது – பத்திரிகையாளர்

பத்திரிக்கையாளர் சபீர் கருத்து தெரிவிக்கும்போது,“ 5 சட்டமன்றத் தேர்தலில் தேசியப் பாஜக இப்போது பிசியாக உள்ளது. இதனால்தான் அமைதியாக உள்ளது. டிசம்பர் 3ஆம் தேதி 5 மாநிலச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகும். அதில் பாஜக வெற்றி பெற்றால் அதிமுகவை மிகஎளிதாக கூட்டணியில் பாஜக இணைத்துக்கொள்ளும். ஒருவேளை தோல்வியடைந்தால், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 5 பேர் மீதுள்ள வழக்குகளைச் சுட்டிக்காட்டியும் மிரட்டியும் அதிமுகவைக் கூட்டணியில் பாஜக இணைத்துக்கொள்ளும் வாய்ப்புகளே அதிகம்” என்றார்.

4

கூட்டிக் கழித்து, மொத்தமாகப் பார்த்தால் தாமரையோடு இலை இணைந்துபோவது தவிர்க்கமுடியாததுதானோ…..?

7

– ஆதவன்

Leave A Reply

Your email address will not be published.