மேயர் தேர்தலில் பாஜக தில்லு முல்லு – உச்சநீதிமன்றம் தீர்ப்பு – வெற்றிக் களிப்பில் ஆம் ஆத்மி

- ஆதவன்

0

சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக தில்லு முல்லு  ஆம் ஆத்மி வெற்றிபெற்றதாக உச்சநீதிமன்றம் அறிவிப்பு, சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதாக அறிவித்தது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும் தேர்தல் அதிகாரி குற்றவாளி என்றும் உச்சநீதிமன்றம் இன்று (20.02.2024) உத்தரவிட்டுள்ளது.

சண்டிகர் என்பது ஒன்றிய அரசின் நேரடி கண்காணிப்பில் உள்ள ஒரு யூனியன் பிரதேசம். சண்டிகர் பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களுக்குத் தலைநகர். இரண்டு மாநிலங்களுக்கும் இங்குத்தான் உயர்நீதிமன்றம் உள்ளது என்பது குறிப்பிடத்தகுந்த செய்தியாகும்.

2 dhanalakshmi joseph

சண்டிகர் மாநகராட்சித் தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவில், மொத்தமுள்ள 35 இடங்களில் பாஜக 14 இடங்களிலும், ஆம் ஆத்மி 13 இடங்களிலும் காங்கிரஸ் 7 இடங்களிலும் அகாலிதளம் 1 இடத்திலும் வெற்றி பெற்றன. சண்டிகர் எம்.பி. மாநகராட்சித் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றவர். மேயர் தேர்தலுக்கான மொத்த வாக்குகள் 36 ஆகும்.

ஜனவரி மாதம் 30ம் தேதி நடைபெற்ற சண்டிகர் மேயர் தேர்தலில் பதிவான 36 வாக்குகளில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட, குல்தீப் குமாருக்கு 20 வாக்குகள் கிடைத்தன. பாஜக வேட்பாளர் மனோஜ் சோன்கருக்கு 15 வாக்குகள் கிடைத்தன. அகாலி தளத்துக்கு 1 வாக்கு கிடைத்தது. இருப்பினும், ஆம் ஆத்மி – காங்கிரஸ் கூட்டணி வேட்பாளருக்குக் கிடைத்த 8 வாக்குகள் செல்லாது எனத் தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார். இதனால், மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி – காங்கிரஸ் கூட்டணிக்கு 12 வாக்குகளும் 15 வாக்குகளைப் பெற்ற பாஜக வேட்பாளர் மனோஜ் குமார் சோன்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

- Advertisement -

வெற்றிக் களிப்பில் ஆம் ஆத்மி குல்தீப் குமார்
வெற்றிக் களிப்பில் ஆம் ஆத்மி குல்தீப் குமார்
4 bismi svs

இது பெரும் சர்ச்சையான நிலையில், தேர்தல் அதிகாரியே வாக்குச் சீட்டுகளில் பேனாவைக் கொண்டு எதையோ கிறுக்குவதைப் போன்ற வீடியோக்கள் வெளியானது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. வழக்கில் சண்டிகரில் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளது என்று நீதிபதி கருத்து தெரிவித்தார். மேலும், மறுதேர்தலுக்கு உத்தரவிட நேரிடும் என்றும் நீதிபதிகள் கூறினார். இதனையடுத்துப் பிப்.19ஆம் நாள் பாஜக சார்பு மேயர் தன் பதவியை இராஜினாமா செய்தார். மேலும் ஆம் ஆத்மி கட்சியைச் சார்ந்த 3 மாநகராட்சி உறுப்பினர்கள் பாஜகவில் ‘குதிரை பேரம்’ பாஜகவில் இணைந்தனர்.

இந்நிலையில், இன்று (20.02.2024) தொடர்ந்து விசாரணை நடைபெற்ற வந்த வழக்கில், சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதாக அறிவித்தது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி பெற்றதாகவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தேர்தல் நடத்தும் அதிகாரி, தனது அதிகார வரம்பை மீறித் தவறு செய்திருக்கிறார். வேண்டுமென்றே 8 வாக்குகள் செல்லாது என அறிவித்திருக்கிறார். வாக்குகள் செல்லாது என்பதற்கான முகாந்திரம் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வெற்றி செல்லாது என்றும், தேர்தலை ரத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து, ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் வெற்றி பெற்றதாகவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. மேயர் தேர்தலை நடத்திய அதிகாரி முறைகேடு செய்து ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக மாற்றியுள்ளார் என்று அவர்மீது வழக்கு தொடரப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்தத் தீர்ப்பு பாஜகவுக்குக் கிடைத்த மாபெரும் தோல்வி என்று டில்லி முதல் அமைச்சர், ஆம் ஆத்மியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். இந்தத் தீர்ப்பைக் காங்கிரஸ் கட்சியின் கார்கே வரவேற்றுள்ளார். திமுக தலைவர் முக ஸ்டாலின் பாஜக எப்படித் தேர்தலை நடத்துகின்றது என்பது தெளிவாகியுள்ளது. நாம் தேர்தலில் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த இராகுல்காந்தி, மோடியின் ஆலோசனையின்படியே சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன என்று குற்றம் சாட்டியுள்ளார். பாஜக சார்பில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து எந்தக் கருத்தும் வெளியிடப்படவில்லை.

-ஆதவன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.