குறுக்குவழியில் பாஜக போட்டியின்றி வெற்றி – மக்களாட்சிக்கு பாஜக விடுக்கும் சவால் !

0

குஜராத் – சூரத் தொகுதியில் குறுக்குவழியில் பாஜக போட்டியின்றி வெற்றி காங்கிரஸ் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு – பகுஜன் சமாஜ் மனு வாபாஸ்.  குஜராத்தில் 3ஆம் கட்டத் தேர்தல் மே 7ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு ஏப்ரல் 12ஆம் தேதி தொடங்கியது. 19ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள். 20ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன.

பாஜக சார்பில் குஜராத் மாநிலம் சூரத்தில் பாஜக வேட்பாளராக முகேஷ் தலால் அறிவிக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் சார்பில் நிலஷ் கும்பனி அறிவிக்கப்பட்டார். பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் பியாரேலால் பாரதி அறிவிக்கப்பட்டார். மேலும் 7 சுயேட்சைகள் நாடாளுமன்றத்திற்கு வேட்பு மனு தாக்கல் செய்தனர். ஏப்.20ஆம் நாள் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் நிலஷ் கும்பனியை முன்மொழிந்த 5 பேரில் 3 பேரின் கையெழுத்து போலியானது என்று வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் டம்மி வேட்பாளர் சுரேஷ் பத்சலாவை முன்மொழிந்தவர்களின் கையெழுத்து போலியனவை என்று கண்டுபிடிக்கப்பட்டு அவரின் வேட்பு மனுவும் தேர்தல் நடத்தும் அதிகாரியால் நிராகரிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பகுஜான் சமாஜ் கட்சி வேட்பாளர் மற்றும் 7 சுயேட்சைகள் என 8 பேரும் இன்று (ஏப்.22) ஒரே நாளில் வேட்பு மனுவை வாபஸ் பெற்றுள்ளனர். இதையடுத்து பாஜக சார்பில் போட்டியிட்ட முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றதாக தகவலைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வெற்றி பெற்ற பாஜக வேட்பாளருக்கு மாநில பாஜக தலைவர் சி.ஆர்.ங பாட்டீல் வாழ்த்து தெரிவித்து உள்ளார். குஜராத் பாஜக தலைவர் சிஆர் பாட்டீல் தனது எக்ஸ் பக்கத்தில், “பிரதமர் நரேந்திர மோடிக்கு சூரத் முதல் தாமரையை வழங்கி உள்ளது. சூரத் மக்களவை வேட்பாளர் முகேஷ்பாய் தலால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துகள்” என்று பதிவிட்டு உள்ளார்.

4 bismi svs

“இது நம்பும்படியாக இல்லை என்று காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் மற்றும் மாற்று வேட்பாளர் என இருவரின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 7 சுயேட்சைகள் வேட்பு மனுவைத் திரும்பப் பெற்றுக்கொண்டது சரி என்றாலும் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் ஏன் தன் வேட்புமனுவைப் பெற்றுக்கொண்டார் என்ற கேள்வி எழுகிறது. இதில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பணம் பெற்றுக்கொண்டிருப்பார்கள் என்ற அச்சம் எழுகிறது. தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பாஜக ஆதரவு எடுத்துள்ளனரோ என்ற கேள்வியும் எழுகிறது.

- Advertisement -

இதனிடையே இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்திற்கு சென்று நிவாரணம் பெற உள்ளதாக காங்கிரஸ் வழக்கறிஞர் தெரிவித்து உள்ளார். சண்டிகர் மேயர் தேர்தலில் தொடங்கிய தேர்தல் வெற்றிக்கான குறுக்குவழியை பாஜக நாடாளுமன்றத் தேர்தலிலும் நடைமுறைப்படுத்தியுள்ளதே என்ற ஐயம் எழுகிறது. இது மக்களாட்சிக்கு பாஜக விடுக்கும் சவால். இதனை எதிர்க்கட்சிகள் எப்படி எதிர்கொள்ளப் போகின்றன என்ற கேள்வி எழுகிறது.

-ஆதவன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.