திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியின் சிறை கைதிகளின் கல்விக்கு உதவும் “புத்தக நன்கொடை” நிகழ்ச்சி !
புத்தகங்களை வாசித்து மகிழவும் அறிவை வளர்த்துக் கொள்ளவும், திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி (தன்னாட்சி) அருப்பே நூலகம், பிப்ரவரி 14, 2025 அன்று புத்தக நன்கொடை இயக்கத்தை ஏற்பாடு செய்தது. அறிவுசார் வளர்ச்சியை ஊக்குவிப்பதே இந்த உன்னத முயற்சியின் நோக்கம்!
அருப்பே நூலக இயக்குநர் முனைவர் எம்மானுவேல் அரோக்கியம் சே.ச. மற்றும் நூலகர் முனைவர் எக்ஸ். மெர்சி ஏஞ்சலின் ஆகியோரின் முன்முயற்சியினாலும் தூய வளனார் கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் தாராள உதவியினாலும் செயலர் அருள்முனைவர் கே. அமல் சே.ச. மற்றும் முதல்வர் அருள்முனைவர் எஸ். மரியதாஸ் சே.ச. அவர்களின் முழு ஆதரவினாலும் இந்தப் புத்தக நன்கொடை சாத்தியமானது.

சிறையில் நடைபெற்ற ஒரு சிறப்பு நிகழ்வின் போது, இருநூறுக்கும் மேற்பட்ட பயனுள்ள புத்தகங்களை திருச்சி மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளரிடம் முறையாக ஒப்படைத்தனர். இந்தப் புத்தக நன்கொடை இரண்டு வருடங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
திருச்சி மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளரும் அங்கு ஆசிரியர்களாகப் பணிபுரிபவர்களும், இந்தத் தாராளப் பங்களிப்புக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். இந்த முயற்சி கல்லூரியின் கல்வி, சமூகப் பொறுப்பு மற்றும் சமூக நலனுக்கான தொடர்ச்சியான அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது என்று நன்றியுடன் வாழ்த்தினர்.
— அங்குசம் செய்திப்பிரிவு.