சினிமாவுக்கும் ‘நீட்’ வைத்த சென்சார் போர்டு! –‘ அஞ்சாமை’ டைரக்டர் சொன்ன உண்மை !

0

*சினிமாவுக்கும் ‘நீட்’ வைத்த சென்சார் போர்டு! –‘ அஞ்சாமை’ டைரக்டர் சொன்ன உண்மை! பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்த எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வினியோக உரிமை வாங்கி வெளியிடும் படம் ‘அஞ்சாமை’. இதனை திருச்சித்ரம் சார்பில் டாக்டர் திருநாவுக்கரசு தயாரித்துள்ளார். மோகன் ராஜா, லிங்குசாமி உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த எஸ்.பி.சுப்புராமன் இதனை இயக்கியுள்ளார்.

விதார்த், வாணி போஜன், ரகுமான், கிருத்திக் மோகன், பாலசந்திரன் ஐஏஎஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப்படத்திற்கு கார்த்திக் ஒளிப்பதிவு செய்ய, பாடல்களுக்கு ராகவ் பிரசாத் இசையமைக்க, கலா சரண் பின்னணி இசையமைத்துள்ளார். வரும் 7ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதனை முன்னிட்டு அஞ்சாமை டீசர் வெளியீடும் பத்திரிகையாளர் சந்திப்பும் சென்னையில் நடைபெற்றது.

கலைஞர் பிறந்தநாள்

கலைஞர் பிறந்தநாள்

அஞ்சாமை டீசர் வெளியீடு
அஞ்சாமை டீசர் வெளியீடு

இந்த நிகழ்வில் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசும்போது, “இந்தப் படத்தில் பேசக்கூடிய விஷயம் இப்போதும் கூட நம் சமூகத்தில் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது என்பதால் நிச்சயம் ஒரு பேசு பொருளாக இந்தப் படம் இருக்கும்’ என்றார்.

- Advertisement -

பாலச்சந்திரன் ஐஏஎஸ் பேசும்போது, “இந்தப் படம் சட்டத்திற்கும் நியாயத்திற்கும் இடையில் நடக்கும் போராட்டத்தை சொல்கிறது.. சட்டம், நியாயத்தை பரிந்துரைக்கவில்லை என்றால் நியாயத்தின் பக்கம் நிற்கவில்லை என்றால் சமுதாயத்தில் என்ன நடக்கும் என்கிற சமகால பிரச்சனையைப் பற்றி பேசுகிறது”. என்றார்

டைரக்டர் சுப்புராமன்
டைரக்டர் சுப்புராமன்

இயக்குநர் சுப்புராமன் பேசும்போது,

“இந்தப் படம் நடந்ததே காலத்தின் கட்டாயம் என்று தான் நினைக்கிறேன். படத்தின் தயாரிப்பாளர் திருநாவுக்கரசு ஒரு டாக்டர் மட்டுமல்ல.. மன நல மருத்துவர், பேராசிரியர், எழுத்தாளர், பேச்சாளர், சமூக சிந்தனையாளர், தமிழ் ஆர்வலர் என பல பரிமாணங்களில் இருப்பவர். அவரை எல்லாம் எளிதாக திருப்திப்படுத்தவே முடியாது. அப்படிப்பட்டவரிடம் இருந்து நான் பாஸ்மார்க் வாங்கி இருக்கிறேன் என்றால் அதை பெரிய சந்தோஷமாக நினைக்கிறேன். அவருடைய சிந்தனையும் என்னுடைய சிந்தனையும் ஏதோ ஒரு இடத்தில் இணைந்ததால் தான் இந்த படம் நடந்திருக்கிறது.

ட்ரீம் வாரியர்ஸ் இந்தப் படத்தை கையில் எடுத்ததே அஞ்சாமைக்கு கிடைத்த முதல் வெற்றி. எல்லா பெற்றோரும் தனது குழந்தை ஒரு சான்றோனாக வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். அப்படி சான்றோன் ஆக்குவதற்கு கல்வி ரொம்ப முக்கியம். அந்த கல்வி தற்போது எந்த நிலையில் இருக்கிறது, அதற்காக பெற்றோர் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதைத்தான் வாழ்வியலுடன் கலந்து ரத்தமும் சதையுமாக இந்த படம் பேசி இருக்கிறது. இந்தப் படம் பெற்றோருக்கான, மாணவர்களுக்கான, நமக்கான படம்.. யாருக்கும் எதிரான படம் அல்ல,, மக்களுடைய வலியை சொல்லி இருக்கிறோம்” என்றார்.

வாணி போஜன்
வாணி போஜன்

*நாயகி வாணி போஜன், “அஞ்சாமை எனக்கு ரொம்பவே முக்கியமான படம். நமக்கு ரொம்பவே நெருக்கமான, உயிருக்கு உயிரானவர்களைப் பற்றி அடிக்கடி விசாரிப்போம். அப்படி ஒரு உயிருக்கு உயிரான படம்தான் அஞ்சாமை. இந்த படத்தை ரொம்பவே நேசித்திருக்கிறேன். 100% என்னுடைய உழைப்பை கொடுத்திருக்கிறேன் என நம்புகிறேன்”.

4 bismi svs

நாயகன் விதாத் பேசும்போது, “இந்தப் படத்தை பண்ணியதற்காக நான் பெருமைப்படுகிறேன். இந்தப் படம் பார்க்கும்போது அனைவருமே தங்களை இதனுடன் தொடர்புபடுத்தி கொள்வார்கள். இந்தப் படத்தில் நடித்ததை எனது கடமையாக நினைக்கிறேன்.” என்றார்.

விதார்த்
விதார்த்

தயாரிப்பாளர் டாக்டர் திருநாவுக்கரசு “நான் அடிப்படையில் ஒரு சைக்கியாட்ரிஸ்ட் டாக்டர். பொதுவாகவே சைக்கியாட்ரிஸ்ட்டுக்கு பேசத் தெரியாது. ஆனால் பேசினீர்கள் என்றால் கேட்கத் தெரியும். சமூகத்தில் இருக்கும் அவலங்களை தினசரி பார்த்துப் பார்த்து பழகியவர்கள் நாங்கள். அது போன்று சில விஷயங்கள் மனதை பாதிக்கும் போது இதற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றிக் கொண்டே இருக்கும். என்னுடைய மகன்கள் இருவரும் பணம் மீதான ஆசை இல்லாதவர்கள். செலவே இல்லாமல் தங்களது படிப்பை முடித்தவர்கள்.

அந்த வகையில் அவர்களுக்கான பணம் என்னிடம் இருந்தது. அதை வைத்து நீங்கள் நினைத்ததை செய்யுங்கள் என்று உற்சாகப்படுத்தினார்கள். நான் வருடத்திற்கு ஒன்று இரண்டு புத்தகங்கள் எழுதுவேன். புத்தக கண்காட்சியில் எனக்கென தனி ஸ்டால் போடுவார்கள். உளவியல் சம்பந்தமான படங்களை எடுக்க விரும்பும் இயக்குநர்கள் பலர் என்னை வந்து சந்தித்து ஆலோசிப்பார்கள். அப்படி இரண்டு மூன்று முறை என்னை வந்து பார்த்தவர்தான் இயக்குநர் சுப்புராமன்.

அப்படி ஒரு நாள் காலையில் செய்தித்தாளில் நான் ஒரு செய்தியை பார்த்ததும் உடனடியாக சுப்புராமனை அழைத்து நாட்டில் இப்படி எல்லாம் நடக்கிறது. இதையெல்லாம் நீங்கள் படமாக எடுக்க மாட்டீர்களா என்று கேட்டேன். அவருக்கும் அதே அலைவரிசை இருந்தது. இந்த செய்தியை மட்டும் வைத்து கதை பண்ணுங்கள்.. உண்மையை மட்டும் சொல்லுங்கள்.. நான் படம் தயாரிக்கிறேன் என்று கூறினேன். நான் 50 வருட காலமாக மருத்துவக் கல்வியில் ஆசிரியராக இருந்திருக்கிறேன். இதில் மருத்துவக் கல்வி எப்படி போய்க்கொண்டிருக்கிறது என மனம் நொந்த காலங்களும் உண்டு. பெருமைப் பட்ட காலங்களும் உண்டு.

புதியவர்கள் என்றாலும் எனர்ஜிடிக்கான டீம் இது. நாயகன் விதார்த் மூலமாக எஸ்.ஆர் பிரபுவிடம் சில நிமிடங்கள் மட்டுமே பேசினேன். இந்த படத்தை வெளியிட அவர் தான் சரியான நபர் என அவரிடம் ஒப்படைத்து விட்டு அமெரிக்கா கிளம்பி சென்று விட்டேன். நீட்டை எதிர்த்தோ, ஆதரித்தோ இந்த படத்தில் சொல்லவில்லை. நீட்டில் உள்ள உண்மைகளை இதில் சொல்லி இருக்கிறோம். நான் படித்த காலகட்டத்தில் எந்த மருத்துவக் கல்லூரியில் படித்தேன் என்று என் தந்தைக்கு கூட தெரியாது. ஒரு சட்டம் இயற்றும்போது அது மக்களுக்கு நல்லது என்று தான் செய்கிறார்கள். ஆனால் அது மக்களுக்கு எவ்வளவு பிரச்சனையை கொடுக்கிறது என்பதை அந்த மட்டத்தில் இருப்பவர்களால் உணர முடிவதில்லை. ஆனால் என்னை போன்றவர்களால் அதை எளிதில் உணர முடிகிறது. அதை வெளியே சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் இந்த படத்தை எடுத்தோம்.

தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு
தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு

தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு, “நம் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் குழந்தைகளுக்காகவே வாழ ஆரம்பிப்போம். அவர்களது பள்ளிப்படிப்பு முடிந்து கல்லூரிப் படிப்பு ஆரம்பிக்கும்போது பல பெற்றோர்கள் நினைப்பது என்னுடைய பையன் டாக்டராக வேண்டும் என்பதுதான். அப்படிப்பட்ட மருத்துவத்தில் இப்போது ஒரு புதிய முறை மாறும் போது மக்கள் அந்த மாற்றத்தை எப்படி அணுகுகிறார்கள் என்பதை இந்த படத்தில் அழகாக சொல்லி இருக்கிறார்கள். படத்தின் இயக்குனர் சுப்புராமன் ரியாலிட்டி, ஃபேண்டஸி இரண்டையும் அழகாக கலந்து இந்த படத்தில் கொடுத்திருக்கிறார். சினிமா பற்றிய அனுபவம் இல்லாமல் ஒரு புதிய டீமை வைத்து ஒரு படத்தை தயாரித்து, அதை நல்லபடியாக வெளியிடுங்கள் என தயாரிப்பாளர் டாக்டர் திருநாவுக்கரசு என்னிடம் பொறுப்பை ஒப்படைத்ததை பெருமையாக நினைக்கிறேன்” என்று கூறினார்.

பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் அளித்து இயக்குநர் சுப்புராமன் பேசும்போது, “இந்தப் படம் நீட்டுக்கு ஆதரவா எதிர்ப்பா என்பதெல்லாம் விஷயம் இல்லை. மக்கள் படும் வலியை இந்த படத்தில் கூறி இருக்கிறோம். படம் பார்த்துவிட்டு ஆதரவா, இல்லையா என்பதை நீங்கள் முடிவு செய்யுங்கள். நீட் குறித்த படம் என்பதால் சென்சாரில் நாங்கள் இந்த படத்தை எடுத்ததற்கான புள்ளி விவரங்கள், தரவுகளை கேட்டார்கள். அதை பக்காவாக நாங்கள் கொடுத்தோம். அவையெல்லாம் சரியாக இருந்ததால் சென்சாரில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. இதுவரை அரசியல்வாதிகள், பெற்றோர்களின் பார்வையில் தான் நீட் பற்றி பேசப்பட்டு வரும் நிலையில் ஒரு பள்ளி மாணவனின் மூலமாக அந்த வலியை சொல்ல வைத்திருக்கிறோம்” என்றார்.

அஞ்சாமை டீசர் வெளியீடு
அஞ்சாமை டீசர் வெளியீடு

தயாரிப்பாளர் டாக்டர் திருநாவுக்கரசிடம், நீங்கள் சந்திக்கும் உங்களது நோயாளிகளிடமிருந்து ஏராளமான கதைகள் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கும்போது எதற்காக செய்தித்தாளில் வந்த சம்பவத்தை மையமாக வைத்து கதையை உருவாக்க சொன்னீர்கள் என்று கேட்கப்பட்ட போது, “இன்று செய்தித்தாள்களில் தான் அவ்வளவு அவலங்கள் இருக்கின்றன. நான் சிறு வயது பையனாக இருந்தபோது என்னுடைய அண்ணன் என்னை செய்தித்தாள்களில் வந்த விஷயங்களை படிக்கச் சொல்லி கேட்பார். ஆனால் இன்று என் பேத்தியை இந்த செய்திகளை படிக்க சொல்லி கேட்க முடியுமா ? படிக்க படிக்க அவலங்கள் தான் இருக்கின்றன. நல்ல படங்களை மக்களிடம் கொண்டு செல்வதற்கு கூவிக் கூவித் தான் அழைக்க வேண்டி இருக்கிறது. மோசமான விஷயங்கள் இன்பத்தை தரும்.. நல்ல விஷயங்கள் மகிழ்ச்சியை தரும்.. மகிழ்ச்சியை தருவதற்கு நிறைய சிரமப்பட வேண்டும்” என்றார்.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.