தூர்வாரும் பணிகள் : முதல்வர் ஸ்டாலின் ஆய்வு!

0

அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே ... தொடர்பு எண் - 9488842025 அங்குசம் இதழ் டிசம்பர் 1-15 (2023) இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள்

தூர்வாரும் பணிகள் :
முதல்வர் ஸ்டாலின் ஆய்வு!

தஞ்சை மாவட்டம் ஆலக்குடியில் முதலைமுத்துவாரி, விண்ணமங்கலம் வாய்க்கால் ஆகியவற்றில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

2

காவிரி டெல்டா மாவட்டங்களில் ரூ.90 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் கடந்த ஏப்ரல் 27ம் தேதி துவங்கப்பட்டு, நடைபெற்று வருகின்றன.

அதன் ஒருபகுதியாக தஞ்சை மாவட்டத்தில் ரூ.20.45 கோடி மதிப்பில் 1068.45 கி.மீ. நீளத்திற்கு 189 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

3

இத் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்றிரவே தஞ்சாவூர் வந்து பயணியர் மாளிகையில் தங்கினார்.


தூர்வாரப்பட்ட பணிகள் குறித்து பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் இன்று காலை ஆலோசனை நடத்தினார்.

4

அதன் பின்னர், தஞ்சாவூர் அருகே ஆலக்குடி கிராமத்தில் முதலைமுத்துவாரியில் ரூ3.5 கி.மீ. தூரத்திற்கு ரூ20 லட்சம் செலவில் தூர்வாரப்பட்ட பணியையும், விண்ணமங்கலம் சி பிரிவு வாய்க்காலில் 920 மீட்டர் தூரம் ரூ.34,000 மதிப்பீட்டில் தூர்வாரப்பட்ட பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Leave A Reply

Your email address will not be published.