பணி நிறைவு நேரத்தில் சிக்ஸர் அடித்த தலைமை செயலாளர் இறையன்பு !
சிறப்பான கடிதம் ❤️ இறையன்பு சாருக்கு பாராட்டுகள் 🎉🎉 அவரது பணிநிறைவு நாள் நாளை . அதற்கு முன்பாக இன்று பள்ளிக்கல்வித் துறை இயக்குநருக்கு இப்படி ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார்.
பணி நிறைவு நேரத்தில் சிக்ஸர் அடித்த தலைமை செயலாளர் இறையன்பு !
சிறப்பான கடிதம் ❤️
இறையன்பு சாருக்கு பாராட்டுகள் 🎉🎉
அவரது பணிநிறைவு நாள் நாளை . அதற்கு முன்பாக இன்று பள்ளிக்கல்வித் துறை இயக்குநருக்கு இப்படி ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார். கடித செய்தி நடைமுறைக்கு வரவேண்டும்.
களத்தில் இருக்கும் ஆசிரியர்கள் இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இதை ஒரு சடங்காக இல்லாமல் உண்மையான வார்த்தைகளாக ஏற்று கல்வித்துறை காது கொடுக்க வேண்டும்.
ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர பயிற்சிகளில் வாசிப்பை ஊக்குவிக்க, வளர்க்க பயன்படுத்திக் கொண்டால் மாற்றங்கள் வரலாம்.
மாணவர்களை தங்கள் வகுப்பறைகளில் தொடர்ந்து வாசிக்க வைக்கும் ஆசிரியர்கள் ஆங்காங்கே இருக்கின்றனர். அவர்களைப் பயன்படுத்திக் கொள்ள கல்வித்துறை முன்வர வேண்டும்.
இதையும் படிங்க:
* 5000 கோடி மெகா வசூல் நியோமேக்சின் தில்லாலங்கடி பிசினஸ்!
* ஐபிஎஸ் அதிகாரியைக் காப்பாற்ற ‘பலிகடா’ ஆக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்ஐ!
பள்ளி நூலகங்களில் இருக்கும் புத்தகங்களைப் பயன்படுத்தவும் புதிய புத்தகங்களை பள்ளிகளுக்கு வழங்கவும் தொடர் பணிகள் நடக்க வேண்டும்.
எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வழங்கப்படும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு என்ற மதிப்பீட்டு முறையில் (CCE-Continuous and Comprehensive Evaluation) வாசிப்புக்கான மதிப்பீட்டை வழங்கும் முறையை சேர்த்து நடைமுறைப்படுத்த வேண்டும்.
அப்போதுதான் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வீட்டில் புத்தகங்கள் வாசிப்பதை அனுமதித்து ஊக்கப்படுத்துவார்கள்.
நன்மைகள் விளையட்டும்.❤️
உமா