சட்ட விரோத குவாரிகளை எதிர்த்த வக்கீலுக்கு போலிஸ் கொடுத்த பரிசு என்ன தெரியுமா ?

காவல்துறை உடை அணிந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? ஏன் இப்படி பண்றீங்க என்று கடிந்து கொண்ட நீதிபதி...   கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை (SP) வரும் 05-07-2023 அன்று கட்டாயம் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.

0

சட்டவிரோத கல்குவாரிகள் எதிர்ப்புக்கு கிடைத்த பரிசு ! வக்கீலை ரவுடிப் பட்டியலில் சேர்த்த கரூர் போலீசு !

தமிழகத்தில் கல்குவாரிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளை தொடர்ந்து அம்பலப்படுத்திவரும், சட்டவிரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளரும், கந்துவட்டிக்கு எதிரான கூட்டமைப்பு பொறுப்பாளருமான வழக்கறிஞர் ந.சண்முகத்தை ரவுடி என வகைப்படுத்தி தனியே குற்றப்பதிவேட்டை கரூர் போலீசார் பராமரித்து வருகிறது என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

https://businesstrichy.com/the-royal-mahal/

இவ்விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர், இரா.சா.முகிலன் விரிவான கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முகிலன் - தோழர்
முகிலன் – தோழர்

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

அந்த அறிக்கையில், ”தோழர். சண்முகம் அவர்கள் மீது, 2020-ல் அதிமுக ஆட்சியில் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் அவர்கள், ராஜவாய்க்கால் நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றாமலேயே, அகற்றியதாக கூறியது பற்றி கூட்டத்தில் தவறான தகவல் தெரிவித்ததன் மீது விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் சுட்டி காட்டியதற்காகவே, அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தார் என வழக்கு போட்டு கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தோழர். சண்முகம் அவர்கள்மீது 2020-ல் அதிமுக ஆட்சியில் போடப் பட்ட பொய்யான வழக்கை, உயர் நீதிமன்றம் ரத்து செய்ய கோரி வழக்கு போடப்பட்டு இருந்த நிலையில் 2021-ல் உயர் நீதிமன்றம் அந்த வழக்கை ரத்து செய்தது.
… கனிமக் கொள்ளையை பற்றி பேசினாலே உயிர் இருக்காது, பல்வேறுவிதமான தாக்குதலுக்கும், விபத்து என்ற பெயரில் உயிர் பறிக்கப்படும் என்ற அபாய நிலைதான் கரூர் மாவட்டத்தில் பல ஆண்டுகளாக நிலவி வருகிறது. சமூக செயல்பாட்டாளருக்கு மட்டுமல்ல, அதிகாரிகளுக்கும் இதே நிலைதான்.

விவசாயி ஜெகநாதன் படுகொலை
விவசாயி ஜெகநாதன் படுகொலை

காட்டுமுன்னூர் பால விநாயகா கல்குவாரியில் டிஆர்ஓ சிறைவைக்கப் பட்டதும், பாலவிடுதி உதவி ஆய்வாளர் மீது கனிமக் கொள்ளையர்கள் டிராக்டர் ஏற்றி கொல்லப் பார்த்ததும், விவசாயி ஜெகநாதன் படுகொலை செய்யப்பட்டதும் தான் தான் கரூர் மாவட்ட வரலாறு.

ஆனால் தோழர். சண்முகம் அவர்கள் தனது உயிரைப் பற்றி கவலைப் படாமல், இயற்கையின் மீதான பெரும் அக்கறையோடு சட்டவிரோத கல்குவாரிகளை பற்றியும், ஆற்றுமணல் கொள்ளை பற்றியும், மாவட்டம் முழுக்க நடக்கும் அனைத்து வகை கனிமக் கொள்ளையை பற்றியும், டாஸ்மாக் முறைகேடு பற்றியும் கரூர் மாவட்ட ஆட்சியரிடமும், காவல்துறை, வருவாய்த்துறை, கனிமம் என அனைத்து துறையினருக்கும் சமூக சொத்தை பாதுகாக்க அன்றாடம் ஆதாரபூர்வமாக புகார் கொடுத்து வந்தார்.

வழக்கறிஞர் சண்முகம்
வழக்கறிஞர் சண்முகம்

மேலும் கந்துவட்டிக்கு எதிரான கூட்டமைப்பு பொறுப்பாளராக இருந்து தொடர்ந்து பாதிக்கப்படும் மக்களுக்கு சட்டப்படி துணை நின்று வந்தவர் தோழர். சண்முகம் அவர்கள். அதனால் கரூர் மாவட்ட காவல்துறையே கந்துவட்டிக்கு எதிரான நிகழ்ச்சியில் அவரை சிறப்பு அழைப்பாளராக அழைத்து நிகழ்ச்சி நடத்தினர்.

ஆனால், மண்ணுக்காகவும் , மக்களுக்காகவும் இடையறாது செயல்பட்டு வந்த சட்டவிரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் கரூர் சண்முகம் மீது திடீரென எந்த ஒரு வழக்கும் நிலுவையில் இல்லாத நிலையில், வழக்கே இல்லாத கரூர் வழக்கறிஞர் சண்முகம் மீது கடந்த ஆகசுடு- 2021ல் (HS: 3/2021 என) தினமும் கண்காணிக்கப்பட வேண்டிய ரவுடிப் பட்டியலில் கரூர் மாவட்ட நிர்வாகம் சேர்த்துள்ளது.

இது முழுக்க முழுக்க சட்டவிரோதமானது. வெட்கக்கேடானது. கரூர் மாவட்டத்தில், கனிமவளக் கொள்ளையர்கள், கந்துவட்டி கொள்ளையர்கள், சட்டவிரோத மதுக் கொள்ளையர்கள், போலி லாட்டரி கொள்ளையர்கள் எல்லாம் அதிகாரத்தில் உள்ளவர்களோடு கைகோர்த்து திரிவது அன்றாடம் அனைவருக்கும் தெரியும் நிலையில், மண்காப்பு போராளிக்கு காவல்துறை இவ்வாறு செய்வது ஆளும் அரசுக்கு பேரவமானதாகும்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

கரூர் குவாரி
கரூர் குவாரி

தினமும், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட வருவாய்த்துறை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளிடம் நேரிலும் – அலைபேசி வழியாகவும் பேசி வந்த தோழர்.சண்முகம் அவர்கள் மீது ரவுடி பட்டியல் சேர்த்து குற்ற வரலாற்றுப் பதிவேடு (HISTRY SHEET) என காவல்துறை செய்தது ஓராண்டுகளாக யாருக்கும் தெரியவில்லை.

தோழர்.சண்முகம், வழக்கறிஞராக பதிவு செய்ய பார் கவுன்சிலில் விண்ணப்பித்து இருந்த போது தான் இந்த ரவுடிக் பட்டியல் சேர்த்து குற்ற வரலாற்றுப் பதிவேடு (HISTRY SHEET) என காவல்துறை தொடங்கி இருப்பது தெரிய வந்தது. உடனே கரூர் வழக்கறிஞர் சண்முகம் அவர்கள் மீது ரவுடிப் பட்டியலில் சேர்த்ததை ரத்து செய்ய வேண்டும் என 22-10-2022 சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்ட நிலையில் இன்று வரை அவரை ரவுடிப் பட்டியலில் வைத்து அராஜகம் செய்து வருகிறது கரூர் மாவட்ட காவல்துறை.

சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவை, நடைமுறைப்படுத்த மறுக்கும் கரூர் மாவட்ட காவல்துறை மற்றும் நிர்வாகத்தை எதிர்த்து கரூர் வழக்கறிஞர் சண்முகம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து, 22.06.2023 வியாழன் அன்று விசாரணைக்கு வந்தது.

சுந்தரவதனம் IPS
சுந்தரவதனம் IPS

மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் தொடர்ந்து எவ்வித நெருக்கடிக்கும் அஞ்சாமல் இடையறாது செயல்பட்டு வரும், சட்டவிரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் கரூர் சண்முகம் மீது அரசு தரப்பில் பல்வேறு ஆதாரமற்ற பொய்யான தகவல்கள் கூறப்பட்டு வருவதால், அது அனைத்தும் நீதிமன்றத்தில் இல்லை என நிரூபிக்கப்பட்ட இருக்கிறது.

இந்த நேரத்தில் கரூர் போலிசார் கடைசி நேரத்தில் சீலிடப்பட்ட கவரில் 2022ம் ஆண்டு ஒரு நிருவனத்தை மிரட்டி பணம் பறித்ததாக புகார் வந்து உள்ளது. இதை தொடர்ந்து அவருடைய வங்கி கணக்குகள் அனைத்தையும் கண்காணித்து வருகிறோம் என்று பதில் மனு தாக்கல் செய்து உள்ளனர். உடனே நீதிபதி 22ம் ஆண்டு வந்த புகாரில் ஏன் கைது செய்யவில்லை, காவல்துறை உடை அணிந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? ஏன் இப்படி பண்றீங்க என்று கடிந்து கொண்ட நீதிபதி…   கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை (SP) வரும் 05-07-2023 அன்று கட்டாயம் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:

* ஐபிஎஸ் அதிகாரியைக் காப்பாற்ற ‘பலிகடா’ ஆக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்ஐ!

* 5000 கோடி மெகா வசூல் நியோமேக்சின் தில்லாலங்கடி பிசினஸ்!

சட்டவிரோத கல்குவாரி உரிமையாளருக்கும் – அரசு மணல் குவாரி என்ற பெயரில் மணல் மாஃபியா சேகர் ரெட்டி கூட்டாளியான திண்டுக்கல் ரத்னம் கும்பல் கரூரில் நன்னியூர் – மல்லம்பாளையத்தில் காவிரி ஆற்றுமணல் சட்டவிரோதமாக கொள்ளையடிக்க காவல்துறையும் – மாவட்ட நிர்வாகமும் பாதுகாப்பு; தாய்மண் காப்பவர்களுக்கு ரவுடி என பட்டியல் என்பது எந்தவகையிலும் அறமும் அல்ல. ஏற்றுக்கொள்ள முடியாதது.” என கரூர் போலீசாரின் நரித்தனமான நடவடிக்கையை அம்பலமாக்கியிருக்கிறது, அந்த அறிக்கை.

சண்முகம் மீது போடப்பட்ட ரவுடி பட்டியலுக்கான குற்ற வரலாற்று பதிவேட்டை ரத்து செய்ய வேண்டும்; ரவுடி பட்டியலுக்கான பதிவேடு தயாரித்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்திருக்கிறது, தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம்.

– ஆதிரன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.