குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க ஆண்டு விழாவில் கோழி பிரியாணியும் கொலை முயற்சி புகாரும் – 4 பேர் மீது வழக்கு பதிவு !

0

குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க ஆண்டு விழாவில்  அடிதடி மோதல்.! கோழி பிரியாணியும் கொலை வழக்கு புகாரும்! தலைமறைவான நபர்கள்!

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க 46-வது ஆண்டு விழா திருச்சியில் செப்8 ஆம் தேதி மாலை‌ சீனிவாசா ஹாலில் நடைபெற்றது. விழாவில், திருச்சிராப்பள்ளி குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் வெங்கட் வரவேற்றார்.

தலைவர் முல்லை சுரேஷ் தலைமை தாங்கினார். அரசு வழக்கறிஞர்கள் சவரிமுத்து, மோகன், திருச்சி பார் அசோசியேசன் தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் கண்ணன், பெண் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ராஜேஸ்வரி, செயலாளர் ஜெயந்திராணி, சிட்டி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் புஷ்பராஜ், செயலாளர் முத்துமாரி, திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க பொருளாளர் கிஷோர்குமார் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் முன்னிலை வகித்தனர்.

கோழி பிரியாணி விருந்தில் கொலை முயற்சி வழக்காக பதிவானது வழக்கறிஞரிடம் அனலை உண்டு பண்ணி இருக்கிறது.மூத்த வழக்கறிஞர்கள் அனைத்து வழக்கறிஞர்களுக்கும்

சிறப்பு விருந்தினர்களாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் முரளிசங்கர், எஸ்.ஸ்ரீமதி, திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி கே.பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் உட்பட பலர் பேசினார்கள்.

ஐகோர்ட்டு நீதிபதி கே.முரளிசங்கர் பேசும் போது, வழக்கறிஞர்கள் சங்க விழாவிற்கு வருகை புரிந்தோர்க்கு விருந்தளிக்கும் வகையில் கோழி பிரியாணி தால்சா சிக்கன் கிரேவி ஏற்பாடு செய்திருந்தனர்.

நீதிபதிகள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே சிலர் உணவருந்த சென்றார்கள் உணவருந்த செல்லும் இடத்தில் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது வாக்குவாதம் முற்றி அடிதடி சண்டையாக மாறி பொருளாளர் வழக்கறிஞர் கிஷோர் மீது தால்ச்சாவை ஊற்றியும் அடித்தும் தாக்கினார்கள். அப்பொழுது கிஷோர் தற்காத்துக் கொள்வதற்காக சாப்பாட்டு டேபிள் மீது ஏறி தன்னை தாக்கிய நபர்களை எவர்சில்வர் வாளி கொண்டு தடுத்து கொண்டார். அப்பொழுதும் விடாமல் பிளாஸ்டிக் சேர் கொண்டு வீசி தாக்கினார்கள். கண்ணியமாக நடக்க வேண்டிய ஆண்டு விழா கலவர பூமியாக மாறியது.

வழக்கறிஞர்கள் சண்டை நடந்து கொண்டிருக்கும் வேளையிலே காவலுக்கு வருகை புரிந்த போலீசார் கதவடைத்து வேறு யாரும் உள்ளே நுழைந்து விடாத வண்ணம் தடுத்து நிறுத்தினர். அதே நேரத்தில் விழா கூட்டரங்கில் மூத்த வழக்கறிஞர் டி.ஸ்டானிஸ்லாஸ்-க்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.நிர்மல்குமார் வழங்கி சிறப்புரை ஆற்றினார். நிறைவாக துணைத்தலைவர் பிரபு நன்றி கூறினார்.

வழக்கறிஞர்கள் ஆண்டு விழாவில் நடைபெற்ற அடிதடி சண்டையில் வழக்கறிஞர் கிஷோர் வழக்கறிஞர் சிவக்குமார், ஜெகன் என்ற ஜெகதீசன், வீரமணி, ஹரி மற்றும் இருவர் மீது கொலை முயற்சி புகார் அளித்தார். விசாரணை நடைபெற்று வரும் சூழலில் சிலர் தலைமறைவாகி உள்ளனர்.

 

 

 

டேபிள் மீது ஏறி தன்னை தாக்கிய நபர்களை எவர்சில்வர் வாளி கொண்டு தடுத்து கொண்டார்.
டேபிள் மீது ஏறி தன்னை தாக்கிய நபர்களை எவர்சில்வர் வாளி கொண்டு தடுத்து கொண்டார்.

இது குறித்து அங்குசம் இதழ் சார்பாக வழக்கறிஞர் கிஷோரிடம்  பேசுகையில்.. , வழக்கறிஞர் சிவகுமார் உடன் ஆந்திரா கர்நாடகாவில் படிக்கக்கூடிய வழக்கறிஞர் அல்லாத நபர்களும் கூட்டத்திற்கு வந்தார்கள் விழா முடியும் முன்பே சாப்பிடும் இடத்தில் வாக்குவாதம் செய்து வாய் சண்டை அடிதடி சண்டையாகி தலை, உதடு, கையில் காயம் ஏற்பட்டு திருச்சி புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன் என்றார்.

கோழி பிரியாணி விருந்தில் கொலை முயற்சி வழக்காக பதிவானது வழக்கறிஞரிடம் அனலை உண்டு பண்ணி இருக்கிறது.

மூத்த வழக்கறிஞர்கள் அனைத்து வழக்கறிஞர்களுக்கும் விருந்திற்கு பிரியாணி செய்திருந்த வேளையில் இப்பிரச்சனை தேவை இல்லாதது என்றனர் அதுவும் உயர் நீதிமன்ற நீதிமன்ற. நீதிபதிகள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே வழக்கறிஞர்கள் நடந்து கொண்ட விதம் பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகின்றது என்றனர்.

– வெற்றி

Leave A Reply

Your email address will not be published.