திருச்சி ஆர்.சி நடுநிலைப்பள்ளி ஆசிரியைக்கு “ஞானச்சுடர்” விருது !
திருச்சி ஆர்.சி நடுநிலைப்பள்ளி ஆசிரியைக்கு “ஞானச்சுடர்” விருது
திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கம் சார்பில் தில்லை நகர் 80 அடி சாலையில் உள்ள ராம் ரெஸ்டாரண்டில் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாணவர்களின் நல்வளர்ச்சிக்காக கற்றல் கற்பித்தல் பணியில் முழுமையாகத் தம்மை ஈடுபடுத்தி சிறப்பாகப் பணியாற்றி வரும் திருச்சி ஆர்.சி நடுநிலைப்பள்ளி ஆசிரியை திருமதி இ.ஹெலன் கிறிஸ்டினா அவர்களின் கல்விப்பணியைப் பாராட்டி “ஞானச்சுடர் விருது” வழங்கப்பட்டது.

திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்க சாசனத் தலைவர் லயன் முகமது ஷமி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மாவட்ட முதல் துணை ஆளுநர் பொறியாளர் சவரிராஜ் இந்த விருதினை வழங்கிப் பாராட்டுரை வழங்கினார். பேராசிரியர்கள், பொறியாளர்கள், லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.
– யுகன் ஆதன்