சமயபுரம் பஞ்சாப் வங்கியை கொள்ளையடித்த தில்லாலங்கடி முருகன் !

0

திருச்சி லலிதா ஜிவல்லரி நகைக்கடை கொள்ளையில் பிடிப்பட்ட கொள்ளையனுக்கு வங்கி கொள்ளையில் தொடர்பு.

சமீபத்தில் திருச்சி அருகே உள்ள சமயபுரம் டோல்கேட் பகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வாடிக்கையாளா்களின் லாக்கரை உடைத்து 5 கோடி ரூபாய் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்டது.

சமயபுரம் அருகே உள்ள நம்பா் 1 டோல்கேட் பகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கி செயல்பட்டு வந்தது. கடந்த ஜன-28 தேதி சனி மற்றும் ஞாயிற்றுகிழமை விடுமுறையை அடுத்து பணியாளா்கள் மீண்டும் வேலைக்கு வந்தனா். அப்போது முன்பக்கம் வங்கி வழக்கம் போல் இருந்தது.

வங்கி ஊழியர்கள் கதவை திறந்து வங்கியினுள் சென்று பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. வங்கியின் சுவற்றில் ஒரு ஆள் நுழையும் அளவிற்கு துளையிட்டு இருப்பதை பார்த்து பதட்டமடைந்தனர். அதன்பின் வங்கியை சுற்றிப்பார்த்து சோதனையிட்டபோது கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனா். இதனைத் தொடா்ந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் மோப்ப நாயுடன் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அதில் கொள்ளையர்கள் துளையிட்டு நுழைந்த பகுதியான வங்கியின் பின்புறம் உள்ள பள்ளியின் சுவர் வழியாக ஓட்டை போட்டு, வங்கிக்குள் நுழைந்த கொள்ளையர்கள், கேஸ் வெல்டிங் மூலம் லாக்கர்களை உடைத்து கொள்ளையடித்துள்ளனர்.

கொள்ளையர்கள் நுழைந்தபோது வங்கியில் உள்ள அலாரம் ஒலிக்கவில்லை. எனவே, அலாரத்தின் மின் இணைப்பை கொள்ளையர்கள் துண்டித்திருக்கலாம் என்று கூறப்பட்டது. வங்கியில் உள்ள சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் கொள்ளையர்களை கண்டுபிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.

அதனடிப்படையில் கடந்த அக்-2 தேதி திருச்சியில் லலிதா ஜிவல்லரி நகைக்கடை கடையின் முகமூடி அணிந்து, சுவர் துளையிட்டு, மிளகாய் பொடி தூவி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதன்மூலம் இவ்வழக்கில் சிக்கிய முக்கிய குற்றவாளியான முருகனை நேற்று அக்-12 போலீசார் பிடித்து விசாரணை செய்தனர், அதில் வங்கிக்கொள்ளை தொடர்பாகவும் விசாரணை நடைப்பெற்றது அதிலிலும் முருகனுக்கு பெரும்பங்கு இருப்பது தெரியவந்தது.

இதனால் திருச்சி காவல் துறையினர் முருகனை வைத்து ஆடு, புலி ஆட்டத்தை ஆட ஆரம்பித்து விட்டனர். சிக்கிய ஆடினை வைத்து புலியை பிடிக்கும் விதமாக பின்னே இருக்கும் கருப்பாட்டினை பிடிக்க தீவிர விசாரணை நடைப்பெறுகிறது.

சிக்கியது ஒரு தலை சிக்கப்போவது பெரிய தலை என்று இந்த கொள்ளைக்கு பின்னே யார் இருக்கிறார்கள் என்று துலங்க காவல்துறை வட்டாரங்கள் ஆரம்பித்துவிட்டனர்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.