தண்ணீருக்கு அடியில் தங்க நகை மிரளவைத்த மிராகெல் திருடன்
சமீபத்தில் தமிழ்நாட்டையே அதிர்ச்சிகுள்ளாக்கி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த சம்பவம் திருச்சியில் பிரபல நகைக்கடையான லலிதா ஜுவல்லரியில் நகைகள் திருட்டுப்போனது.
கடந்த அக்- 2 தேதி திருச்சி லலிதா ஜுவல்லரியில் பல கண்காணிப்புக் கேமராக்களும், கடையை சுற்றி காவலர்களும் இருந்து கடைசியில் கண்ணில் மண்ணை தூவிவிட்டு நள்ளிரவில் சுவற்றில் ஓட்டை போட்டு பல கோடி மதிப்புள்ள தங்க நகைகளையும், வைர நகைகளையும் திருடிச்சென்றது ஒர் மர்மகும்பல். இதுக்குறித்து திருச்சி மாநகர போலீசாருக்கு கிடைத்த ஆதாரங்களும், துப்புகளையும் வைத்து அக்கும்பலை பிடிக்க தனிப்படையமைக்கப்பட்டது. நான்கு திசைகளில், நான்கு கோணங்களில் பிரிந்து தனது புலனாய்வை ஆரம்பித்தது டிசி மயில்வாகனம் தலைமையிலான தனிப்படை.
இந்த நிலையில் திருச்சி மாவட்ட எஸ்பிக்கு கிடைத்த ரகசிய தகவலின் நேற்று அக்-12 காலை முருகனை ரகசியமாக அழைத்து வந்த பெங்களுர் போலீசார் திருவரம்பூரில் முருகன் தங்கியிருந்த இடத்திற்கு அழைத்துசென்று அங்கு மறைத்து வைத்திருந்த நகைகளை கைப்பற்றி மீண்டும் காரில் பெங்களுர் சென்றுக்கொண்டிருப்பதாக அடிப்படையில் ஐ.ஜி. வரதராஜீலு உத்தரவின் பெயரில் பெரம்பலூர் வேப்பந்தட்டை அருகே ரகசியமாக சென்ற முருகன் மற்றும் பெங்களுர் போலீசார் ஆகியோரை பெரம்பலூர் ஆயுதப்படை மைதானத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடைப்பெற்றது.
இதற்கிடையில் நகைக்கொள்ளை தொடர்பான விசாரணை குறித்து திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்.
அந்த செய்திக்குறிப்பில் திருவாரூரைச் சேர்ந்த மணிகண்டன் கைது செய்து 4 கிலோ 250 கிராம் நகைகள் கைப்பற்றியும் திருடுவதற்கு பயன்படுத்திய இருசக்கரவாகனம் ஒன்றையும் கைப்பற்றினார்கள். கனகவள்ளி என்பவரை கைது செய்து 450 கிராம் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இவருவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் 1கோடியே 76 இலட்சத்து 25,000 ரூபாய் ஆகும்.
மேலும் இதில் தொடர்புடைய சுரேஷ் முருகனை தேடிய நிலையில் சுரேஷ் திருவண்ணமலை செங்கம் கோர்ட்டில் சரணடைந்தார், மேலும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் திடீரென முருகன் பெங்களூர் 2வது A.C.MM. சிட்டி சிவில் கோர்ட்டில் மற்றோரு வழக்குக்காக சரணடைந்தான். அதனடிப்படையில் நீதிபதி 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்ட நிலையில் அதனையடுத்து அங்குள்ள பொம்மனஹள்ளி பெங்களூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் 11.10.2019 முதல் 16.10.2019 வரை போலீசார் 6 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க இதில் முருகன் கொடுத்த தகவலின் பேரில் பெங்களூர் போலீசார் நேற்று அக்-12 காலை திருச்சி வந்தனர்.
திருச்சி தனிப்படை போலீசார் உடன் சேர்ந்து முருகன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திருச்சி திருவரம்பூர் பூசைதுறை காவேரி படுக்கை அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள 12 கிலோ நகைகளை கைப்பற்றினர். இந்த நகைகள் பெங்களூர் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டு பின்பு திருச்சி நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் என்று செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.