திருவாரூர் முருகன் – கொள்ளையனா ? ஜென்டில்மேன் கொள்ளையனா ?
திருவாரூர் முருகன் – கொள்ளையனா ? ஜென்டில்மேன் கொள்ளையனா ?
ஒருபக்கம் பார்த்தால் நல்ல செயல் மறுபக்கம் ஊக்குவிப்பதாகவும் புரியும் நல்லது நடந்தால் சரி …
லலிதாஜூவல்லரியில் கொள்ளையடித்ததில் சிக்கிய முருகன் சராசரி கொள்ளையன் அல்ல. ஜென்டில்மேன் படத்தில் அர்ஜுன் பல இடங்களில் இருக்கும் பணத்தை கொள்ளையடித்து ஏழைகளுக்கு உதவி செய்வதை போலவே இந்த முருகனும் வாழ்ந்திருக்கிறார்.
பணம் குவிந்து கிடக்கும் இடத்தில் இருந்து அதை எடுத்து இல்லாதவர்களுக்கு கொடுக்கும் வேலையை செய்து வந்திருக்கிறார். இதுவரை பல இடங்களில் கொள்ளையடித்து உள்ள முருகன் தனது கிராமத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட குடும்பங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்.
ஏராளமான குழந்தைகளின் படிப்பு செலவை இவர்தான் கவனித்து வருகிறார்.தன் குடும்பம் உறவினர்கள் மட்டுமல்லாது கஷ்டப்படும் யார் கேட்டாலும் பணத்தை அள்ளிக் கொடுப்பதில் முருகன் பாரிவள்ளல் என்று தெரியவந்திருக்கிறது. இரண்டு குழந்தைகளை தத்துஎடுத்து வளர்த்து வருகிறார்.

இதுவரை பல கொள்ளை வழக்குகள் மட்டுமே இவர் மீது நிலுவையில் உள்ளன. ஆனால் எந்த #உயிரையும் கொலை செய்ததில்லை என்ற தகவலும் கிடைத்திருக்கிறது.💪 மக்கள் பணத்தை எடுத்து தன் வீட்டில் பதுக்கும் அரசியல்வாதிகள் மத்தியில் ஊர் நலன் காக்க பணம் தேடி அலையும் விசித்திர மனிதன் இவர் இவரை கொள்ளையன் என்பதா? அல்லது நெஞ்சை கொள்ளை கொள்பவன் என்பதா? என்கிற விவாதமே பொது மக்கள் மத்தியில் நடைபெறுகிறது.