முதலமைச்சரை ஏமாற்றும் அரசு அதிகாரிகள்! மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்….
மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதரத்திற்காக உலக வங்கி ஒதுக்கீடு செய்த 1761 கோடி ரூபாயை மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டிக்கு ஒதுக்கீடு செய்ய கோரியும், NGOக்கு ஒதுக்கி அதிகாரிகள் மோசடி செய்வதாக கூறி மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் மதுரையில் ஆர்ப்பாட்டம்….
முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகள் துறையில் நிதி மோசடி செய்து முதலமைச்சரை அதிகாரிகள் ஏமாற்றுகின்றனர். இது அரசு அதிகாரிகள் ஆட்சியாக மாறியுள்ளது – மாற்றுத்திறனாளிகள் குற்றச்சாட்டு.
உலக வங்கி நிதியை NGO க்களுக்கு வழங்கி முறைகேடு செய்து ஏசி ஹோட்டலில் சாப்பிடுவது, ஏசி காரில் செல்வது என மாற்றுத்திறனாளிகளின் பணத்தை வீணாக்குகிறார்கள் – மாற்றுத்திறனாளிகள் நாங்கள் பிச்சையடுக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளோம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தவுள்ளோம் – பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க மாநில தலைவர் குமார் பேட்டி.*
மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதரத்திற்காக உலக வங்கி ஒதுக்கீடு செய்த 1761 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியை மாற்றுத்திறனாளிகள் சுயமாக வேலை செய்வதற்கும் வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்வதற்கும் ஒதுக்கீடு செய்யாமல் மாற்றுத்திறனாளிகள் அல்லாத மாற்றுத்திறனாளிகளை இணைத்து நடத்தக்கூடிய தொண்டு நிறுவனங்களுக்கு (NGO) மற்றும் NGO பள்ளிகளுக்கு வழங்க ஒதுக்கீடு செய்து அவர்கள் மூலமாக லாபம் பெறுவதற்காக மாற்றுத்திறனாளித்துறை அதிகாரிகள் செய்வதாக கூறியும்.
உலக வங்கி ஒதுக்கீடு செய்த நிதியை் புதிய மாற்றுத்திறனாளிகளுக்கான மேம்பாடு என கூறி அதிகாரிகள் நிதியை மோசடி செய்துவருவதாக கூறியும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு மற்றும் பார்வையற்ற மாற்றத்திறனாளிகள் நல சங்கத்தின் சார்பில் மாற்றத்திறனாளிகள் நலத்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு எதிராகவும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தின் மாநில தலைவர் குமார்…._
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகள் துறையில் நிதி மோசடி செய்து முதலமைச்சரை அதிகாரிகள் ஏமாற்றுகின்றனர். இது அரசு அதிகாரிகள் ஆட்சியாக மாறியுள்ளது, உலக வங்கி நிதியை NGO க்களுக்கு வழங்கி முறைகேடு செய்து ஏசி ஹோட்டலில் சாப்பிடுவது, ஏசி காரில் செல்வது என மாற்றுத்திறனாளிகளின் பணத்தை வீணாக்குகிறார்கள் – மாற்றுத்திறனாளிகள் நாங்கள் பிச்சையடுக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளோம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தவுள்ளோம் என்றார்.
— ஷாகுல், படங்கள் :ஆனந்தன்.