மூட்டை மூட்டையாக புகையிலை கடத்தல் ! மடக்கி பிடித்த போலீஸ்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சி மாவட்டம், முசிறி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியார் பாலம் அருகில் முசிறி காவல் நிலைய ஆய்வாளர் திரு.செல்லத்துரை மற்றும் காவல் ஆளிநர்கள் 30.01.2025-ம் தேதி மதியம் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது,

அவ்வழியாக வந்த Maruti Swift Car, TN 31BQ8093-ஐ நிறுத்திய போது அதிலிருந்த இரண்டு நபர்கள் கன்னட மொழியில் முன்னுக்கு பின் முரனாக பேசியதால் சந்தேகம் அடைந்து காரின் பின் இருக்கையில் பார்த்த போது மூட்டை மூட்டையாக ஏதோ பொருட்கள் இருந்ததால், அவர்களை காரில் இருந்து இறங்க சொன்ன போது,

இனிய ரமலான் வாழ்த்துகள்

கார் ஒட்டுநர் காரை வேகமாக எடுத்து பேரிகாட்டில் மோதி விட்டு அங்கிருந்து தப்பி சென்ற வரை பின்தொடர்ந்து முசிறி செல்லம்மாள் பள்ளி அருகே மடக்கி பிடித்து விசாாரிக்க எதிரிகள் A-1 பிரஜ்வால டி கவுடா 20/25 த/பெ தனன் ஜெயா, காயத்திரிபுரம், மைசூர், A-2 உமேசா 24/25 த/பெ மச்சே கவுடா, K.R. பேட்டை, மாண்டியா, கர்நாடகா ஆகியோர் திருச்சியில் உள்ள நபர்களுக்கு தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கொடுக்க வந்ததாக அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில்,

 

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

உங்கள் விளம்பரம் இலட்சக்கணக்கான வாசகர்களை சென்றடைய....

A3-மணிராஜ் 36/25 த/பெ முனியாண்டி, தச்சங்குறிச்சி, லால்குடி, திருச்சி, A4-தங்கமாயன் 55/25 த/பெ பெரிய கருப்பண், பாலகிருஸ்ணபுரம், திண்டுக்கல் மாவட்டம், A5-சனந்த் குமார் 26/25 த/பெ முருகன், அம்மாபாளையம், சேலம், A6-பாலாஜி 35/25 த/பெ முருகேசன், அயோத்திபட்டினம், சேலம், A7-மயில்வாகனன் 41/25 த/பெ சண்முகநாதன், சிறுதையூர், லால்குடி, திருச்சி ஆகியோரை அடையாளம் 30/25, U/s 275, 123 BNS & 6 r/w 24(1) of COTPA Act -6 படி கைது செய்யப்பட்டு 30.01.2025-ம் தேதி நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செ. செல்வ நாகரெத்தினம், இ.கா.ப அவர்களின் பரிந்துரையின் படி மேற்படி எதிரிகள்-3 மணிராஜ் மற்றும் 4-தங்கமாயன் ஆகியோர் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் 01.03.2025-ம் தேதி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மேலும், இது போல் ஏதேனும் சமூக விரோத செயல்களில் யாரேனும் ஈடுபடுவதாக தெரிய வந்தால் பொதுமக்கள் காவல் கண்காணிப்பாளரின் உதவி எண் 8939146100-க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் கொடுப்போரின் பெயர் விலாசம் ரகசியம் காக்கப்படும் என காவல் துறை அறிவித்துள்ளது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.