கலக்கத்தில் நிர்வாகிகள் -குழப்பத்தில் தலைமை – சிக்கலில் தேமுதிக !

0

தேமுதிக சமீபத்தில் நடந்து முடிந்த அனைத்து தேர்தல்களிலும் பெரிய அளவிலான பின்னடைவுகளை சந்தித்து வருகிறது. இதனால் தேமுதிகவின் தலைமை என்ன முடிவு செய்வது என்ற குழப்பமான மனநிலையோடு அடுத்தடுத்து செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்னும் சில நாட்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் ஒவ்வொரு மாவட்ட தேமுதிக நிர்வாகிகளும் தலைமை என்ன முடிவு செய்ய போகிறது என்ற கேள்விகளோடு காத்திருக்கின்றனர்.

மேலும் நடந்து முடிந்த ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்ததற்கு காரணம் சரியான கூட்டணி அமையாததால் தான், இந்தநிலையில் வரக்கூடிய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி இல்லாமல் அணுகுவது கட்சிக்கு மேலும் பலவீனத்தை ஏற்படுத்தும் இதனால் கூட்டணியோடு களம் கண்டு கொஞ்சம் தொகுதிகள் கிடைத்தாலும் அதில் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பாவது இருக்கும், அல்லது தோல்வியடைந்தாலும் சொல்லத்தக்க அளவிற்கு வாக்குகளாவது கிடைத்திருக்கும் என்று தலைமைக்கு மாவட்ட நிர்வாகிகள் பலரும் ஆலோசனை தெரிவித்து வருகிறார்களாம்.

இப்படி மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை தேமுதிக தலைமையின் கவனத்திற்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறதாம். இதை தொடர்ந்து தேமுதிக தலைமை நிர்வாகிகள் சொல்வதையும் தவிர்த்துவிட முடியாது என்றும், அதே சமயம் கட்சியின் கவுரவத்தை விட்டுவிட்டு சீட்டுக்காக கூட்டணிக்கு சென்றாலும் கேட்கும் இடங்கள் கிடைக்குமா என்ற சந்தேகம் உள்ளதாலும் அடுத்த நகர்வை எப்படி மேற்கொள்வது என்ற குழப்பத்தோடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முதல்கட்ட பணியைத் தொடங்குவதற்கு திட்டமிட்டிருக்கிறது தேமுதிக என்று தலைமைக்கு நெருக்கமான நிர்வாகிகள் கூறினர்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.