அமைச்சர் செந்தில்பாலாஜி பெற்றோர்களிடம் அமலாக்கத்துறை விசாரணை !

0

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்ததாக கூறி அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் கரூர் மாவட்டம் மண்மங்களத்தை அடுத்த ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் அவரது தாய் பழனியம்மாள், தந்தையர் வேலுச்சாமி வசித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் மணியளவில் அங்கு கேரளா பதிவு எண் கொண்ட காரில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேர் 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மற்றும்  சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

செந்தில்பாலாஜி
செந்தில்பாலாஜி

ஏற்கனவே இந்த வீட்டிற்கு பல முறை வருமான வரித்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைகள் நடைபெற்ற நிலையில் மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

– நௌஷாத்

 

– இதையும் வாசியுங்கள்

அமைச்சரை துரத்தும் கரூர் பைனான்ஸ் தம்பியை விரட்டும் “கோகுல்!”

அமைச்சரை துரத்தும் கரூர் பைனான்ஸ் தம்பியை விரட்டும் “கோகுல்!”

Leave A Reply

Your email address will not be published.