கடமை தவறிய காவலர்கள் இப்போது கம்பி எண்ணுகிறார்களாம்

0

கடமையை மறந்ததால் கம்பி எண்ணும் காக்கிகள்

4 bismi svs

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சீசன் களைகட்டத் தொடங்கியுள்ளது. இதையொட்டி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. அவர்கள் தங்குவதற்கு வசதியாக ஏராளமாக லாட்ஜ்கள், ரிசார்ட்கள் உள்ளன. இதை பயன்படுத்தி பாலியல் தொழிலும், இதற்கான புரோக்கர்களும் அங்கு கொட்டமடிக்கின்றனர். குற்றால சீசன் பணிக்காக நெல்லையில் இருந்து ஆயுதப்படை காவலர்கள் பலர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அருவிக்கரை, பஜார்  உள்ளிட்ட முக்கிய இடங்களில் ‘ஷிப்ட்” அடிப்படையில் 24 மணி நேரமும் பணியில் இருப்பார்கள். கடந்த சில தினங்களுக்கு முன் அங்குள்ள லாட்ஜ்ஜில் பாலியல் தொழில் நடப்பதாக தகவல் கிடைத்தது, சீசன் பணிக்காக வந்த இரு ஆயுதப்படை காவலர்கள் அங்கு சென்றனர்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                             அவர்கள் தங்கள் கடமையை மறந்து ஓசியில் அனுபவித்ததுடன் அவர்களிடம் இருந்த பணத்தையும் கறந்து விட்டனர். தகவல் அறிந்;த மாவட்ட எஸ்பி அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். கடமை தவறிய காவலர்கள் இப்போது கம்பி எண்ணுகிறார்களாம். பாதுகாப்பிற்கு செல்லும் காவலர்களே அத்துமீறுவதால் லாட்ஜ்களில் தங்கும் சுற்றுலா பயணிகள் அச்சப்படுகின்றனர்.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.