மிளகாய் மாலை …  நெல் மணி மாலை … விதம் விதமாய் வேட்பு மனு தாக்கல் !

ஓட்டுக்குப் பணம் வாங்கினால் மக்களை அடிமையாக்கி தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள் எனக் கூறி மிளகாய் மாலையுடன்

0

மிளகாய் மாலை …  நெல் மணி மாலை … விதம் விதமாய் வேட்பு மனு தாக்கல் !

கோயம்புத்தூர், திருநெல்வேலி, திருச்சி மற்றும் தென்காசி உள்ளிட்ட நாடாளுமன்றத் தொகுதிகளில் வேட்பாளர்கள் மிகவும் வித்தியாசமான முறையில் வேட்புமனுத் தாக்கல் செய்த நிகழ்வு காண்போருக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர்: கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளரான நூர்முகமது என்பவர், ஓட்டுக்குப் பணம் வாங்கினால் மக்களை அடிமையாக்கி தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள் எனக் கூறி மிளகாய் மாலையுடன் வேட்புமனுத் தாக்கல் செய்ய ஊர்வலமாக வந்தார்.

இதேபோல, கோவை மாவட்டம் செல்வபுரத்தைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளரான துரைசாமி என்பவர், நடனமாடிக் கொண்டும் மற்றும் முருகா முருகா என்று தொடர்ந்து பாடிக்கொண்டும் வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்திருந்தார்.

- Advertisement -

- Advertisement -

திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளரான அதிசய பாண்டியன் என்பவர், தலையில் பச்சை துண்டை அணிந்து நெல்லுக்கு ஆதார விலையாக 4,000 ரூபாய் வழங்க வேண்டும் எனக் கூறி கழுத்தில் நெல் மணிகளை மாலையாக அணிந்து, மாட்டு வண்டியில் நூதன முறையில் வருகைதந்து, நெல்லை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான கார்த்திகேயனிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

4 bismi svs

திருச்சி: கடைகளிலும், பொது இடங்களிலும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 10 ரூபாய் நாணயங்களைக் கொண்டு வந்து நூதனமான முறையில் திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்புமனுவைத் தாக்கல் செய்ததாகத் தெரிவித்துள்ளார் சுயேச்சை வேட்பாளரான ராஜேந்திரன்.

தென்காசி: தென்காசி நாடாளுமன்றத் தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இசை மதிவாணன், தென்காசி புதிய பேருந்து நிலையத்திலிருந்து மாட்டு வண்டியில் கையில் வேலுடன் நூற்றுக்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சி தொண்டர்களுடன் வழிநெடுக கோஷங்கள் எழுப்பி ஊர்வலமாக வந்து வேட்புமனுவைத் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கமல் கிஷோரிடம் வழங்கினார்.

தஞ்சாவூர் : தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஹிமாயூன் கபீர், கடந்த இரண்டு நாட்களாக வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்  மருத்துவரின் முறையான ஆலோசனை மற்றும் அனுமதியும் பெற்று, நேற்று மார்ச் 26) வேட்புமனுத் தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்தார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “எனது உடல்நிலையை விட, நாட்டின் சூழ்நிலை மிக மோசமாக உள்ளது. ஆகவே, உடல் நிலையைப் பொருட்படுத்தாமல் வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்டு மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெறச் செல்கிறேன்” என்று தெரிவித்தார்.

இயற்கை விவசாயி தங்கராசு என்பவர், தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் பானையுடன் வேட்பு மனுத் தாக்கல் செய்ய வந்துள்ளார். “குளிப்பது முதல் குடிப்பது வரை காவிரி தண்ணீர் தான், கர்நாடக அரசு காவிரியைத் தடுக்கிறது, இங்குள்ளவர்கள் யாரும் காவிரியை மதிக்கவில்லை. அதனால் காவிரிக்கு ஒரு ஆலயம் கட்ட வேண்டும், மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்க வேண்டும் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்க வலியுறுத்தியும் பானையில் பணத்தை சேகரித்து வேட்பு மனுத் தாக்கல்” செய்ய வந்ததாக கூறினார்.

கே.எம்.ஜி.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.