ஒரு ஞானத் தகப்பனின் தேர்ந்த நல்லுரை…….

0

 

ஒரு

ஞானத் தகப்பனின்

தேர்ந்த நல்லுரை…….

 

திராவிட முன்னேற்றக்

கழகத்தின் தலைவராக

இரண்டாவது முறையாகவும்

பணியாற்றிட

பொறுப்பேற்றிருக்கிறார்

முத்துவேலர்

கருணாநிதி

ஸ்டாலின்.

 

இப்போது அவர்

தமிழக முதல்வரும்

கூட.

 

அதனாலேயே அவர்

திமுக கட்சித் தலைவராகப்

பொறுப்பேற்றவுடன்

ஆற்றிய உரையானது…

 

மிக முக்கியத்துவம்

வாய்ந்ததாகக்

கருதப்பட வேண்டிய

கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

 

எங்கோ எவராலோ

எழுதி டைப் செய்த

காகித உரை அல்ல அது.

 

கலைஞரிடம்

ஒரு வார்த்தை கடனாகப்

பெற்றுச் சொன்னால்…

 

கடிதோச்சி மெல்ல எறியும்”

கவன் கலையை

இப்போது தான்

கைவரப் பெற்றுள்ளார்

கலைஞரின் ஸ்டாலின்.

 

தங்கு தடையில்லாத

தொய்வில்லாத

முப்பத்தியிரண்டு நிமிட

உரையின் வாயிலாக…

 

முன்னர் ஒரு காலத்தில்

சுடலை… சுடலை…

என்று அவரை

எகத்தாளம்

செய்தவர்களின்

மனங்களில்

சுடு கணைகளை வீசியுள்ளார்

திருக்குவளை பேரனார்.

 

கட்சியில் புதிய

பொறுப்பேற்றவர்கள்

 

கட்சியில் பொறுப்பு கிடைத்திடப்

பெறாதவர்கள்

 

அனைவரையும்

அரவணைத்துப்

பேசிய உரையானது

 

ஒரு

ஞானத் தகப்பனின்

நல்லுரை போன்றது.

 

 தி.மு.கழகக் கட்சியினர்

ஒவ்வொருவருக்கும்

 

கழகமும்

தமிழகமும்

அவர்களின்

இரண்டு கண்களைப் போன்றது.”

 

எனக் குறிப்பிட்டது

அவரது உரையின் உச்சம்.

 

மேலும்

இன்றைய உலகில்

ஆன்ட்ராய்டு போன்

எனப்படும்

அலைபேசிகள்

வெறும் பேசிகள்

மட்டுமல்ல…

 

செல்போன்கள்

அவரவர்க்கும்

உரித்தான

மூன்றாவது கண்”

என்றும்

முத்தாய்ப்பாக

எடுத்துரைத்தார்.

 

அந்த

மூன்றாவது கண் தான்…

 

அமைச்சர்கள்

கழகப் பொறுப்பாளர்கள்

போன்றோர் சிலரது

ஆணவத் திமிர்

பேச்சினை…

பெண்ணோ ஆணோ

அவர்களிடம்

அத்துமீறும்

செயல்பாடுகளை…

 

இந்தப்

பரந்த உலகில்

ஒவ்வொருவரது

உள்ளங்கைகளில்

அடைக்கலமாகிப்

போன அலைபேசிகளில்

அவ்வப்போது

தொடர்ச்சியாக

ஒலி மற்றும் ஒளிக்

காட்சிகளாக

ஒளிர்ந்து கொண்டே

இருக்கிறது.

 

இளங்கோவடிகளின்

சிலப்பதிகார வரிகளைக்

குறிப்பிட வேண்டிய

இடத்தில் சுட்டிக் காட்டிப்

பேசியது

எட்டிக்காய் கசப்பே

என்றாலும்

ஏற்றுக் கொள்ளக் கூடியதே.

 

திமுக என்றாலே

அவர்களது மேடைப்

பேச்சுகள் தான்.

 

பொதுக்கூட்டச்

செயல்பாடுகள்

வெற்றிடத்தினை

இனிமேலாவது

இட்டு நிரப்புங்கள்

என்று மெல்லவே

இடித்துரைத்துள்ளார்.

 

கட்சிப் பொறுப்பில்

இருப்பவர் முதல்

இலாகா அமைச்சர் பொறுப்பில்

இருப்பவர்கள் வரை…

 

சிலரது

பேச்சுகளும்

பொது இடங்களில்

இங்கிதம் ஏதுமின்றி

நடந்து கொள்வதும்

 

தனது தூக்கத்தைத்

தட்டிப் பறித்துக்

கொண்டு போனது

என்று வெளிப்படையாகப்

பேசியுள்ளது…

 

முத்துவேலர்

கருணாநிதி ஸ்டாலின்

அவர்கள்…

 

பொதுக்குழு கூட்டம் வாயிலாகப்

பொது வெளியில்

தனது கட்சியினர்

மீது சுழற்றிய

சாட்டையாகவே

அமைந்து போனது.

 

தனது உறக்கத்தைக் களவாடிச்

சென்ற

கண்ணியவான்களின்

செயல்கள்

பேச்சுகள் குறித்து

வெளிப்படையாகச் சொன்ன போது…

 

அரங்கில்

அமர்ந்திருந்த

அதற்கானக் குறிப்பிட்ட

அமைச்சர்கள் கூட…

 

முதல்வரும்

கட்சித் தலைவருமானவர்

வேறு யாரையோ”

சொல்கிறார்

என்பது போல

வெள்ளந்தியாகச்”

சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

 

அது அவர்களது

உச்சபட்ச நடிப்பின்

உச்சக் கட்டம் ஆகும்.

 

திமுகழகம் எனும்

பேரியக்கம் ஆனது

திடீர் மழையில்

முளைத்த

திடீர் காளாண் அல்ல.

 

அந்தக் காலங்களில்

கட்சியினை வளர்த்த

தலைவர்கள், மேடைப்

பேச்சாளர்கள்

உட்பட பலரும்

முப்பது பைசாவுக்கு

பட்டை சாதம் வாங்கிச்

சாப்பிட்டுப் பசியாறி இந்தக்

கழகத்தினை

வளர்த்தது எல்லாம்

பழைய வரலாறு.

 

முக்கியமாக இதனை

கழக அமைச்சர்

பெருமக்களுக்கும்

கட்சிப் பொறுப்பில்

இருப்பவர்களுக்கும்

 “பாடமாக”ப் புகட்டுங்கள்.

 

சில அமைச்சர் பெருமக்களிடம்

படிந்துள்ள பழைய

பண்ணையார்த் தனம்

பழைய மிட்டா மிராசுத்

தனங்களை

கசப்பு மருந்துகள்

ஏதாவது தந்தாவது

முற்றிலுமாக

ஒழிக்கப் பாருங்கள்.

 

கட்சியையும்

ஆட்சியையும்

கட்டாயமாகக் காப்பாற்றிக்

கொள்ள

வேண்டுமெனில்…

 

அந்தச் சாட்டையை

சுருட்டி வைத்திருக்காமல்

தேவைப்படும்

நேரத்தில் எல்லாம்

மிகவும் துணிந்து…

 

தனியறையில் அழைத்து

வைத்தாவது

மைச்சர்கள் மீதும்

கட்சியினர் மீதும்

அந்த சாட்டையைச்

சுழற்றுங்கள்

ஸ்டாலின் அவர்களே.

 

அப்போது தான்

நீங்கள் திமுக

எனும் கட்சிக்கு

மட்டுமல்லாது

தமிழகத்துக்கும்

ஒரு ஞானத் தகப்பனாக

நிலை பெற முடியும்.

 

@ ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.