மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் – 1

0
மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் – 1
அன்பிற்கினியவர்களுக்கு… வணக்கம்…
இன்று முதல் திருச்சி மாவட்ட எழுத்தாளர்களைத் தொகுக்கும் பணி இனிதே ஆரம்பமாகிறது.

 

மலைக்கோட்டை மாவட்ட வளரும் எழுத்தாளர் ந. க. தீப்ஷிகா. ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். இந்தச் சின்னஞ் சிறு பிராயத்துக்குள்ளேயே ‘வானவில்’ என்கிற முதல் நூலையும், ‘களிறும் கன்றும் காட்டினிலே’ என்கிற இரண்டாவது நூலையும் வெளியிட்டுள்ளார்.
திருச்சியில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் திருச்சி மாவட்ட எழுத்தாளர்கள் அரங்கில் இவரது இரண்டு நூல்களும் இடம் பெற்றிருந்தன.
சிறந்த கதை சொல்லியாகவும், ஓவியம் தீட்டுபவராகவும், பறை இசைப்பவராகவும், நாடகம், பாட்டு, பரதம், சிலம்பம் என பல்துறை ஆற்றல் கொண்டவராய் உள்ளார்.
‘வளரும் படைப்பாளர் விருது’ ‘பல்கலைச் செல்வர் விருது’ ‘இளம் கலையரசு விருது’ என விருதுகளும் பரிசுகளும் பாராட்டுகளும் பெற்றவர்.
மேலும் மேலும் வளர்ந்தோங்கி மிகச் சிறந்த எழுத்தாளுமையாக வலம்வர வாழ்த்துகிறோம். வாழ்த்துகள் தீப்ஷிகா
4 bismi svs
– பாட்டாளி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.