24 ஆண்டு சம்பளத்தை திரும்பக் கேட்குது அரசு ஆசிரியை வழக்கு!
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசி ரியை மார்கரட் விமலி என்பவர் ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அதில் அவர், ’24 ஆண்டுகளாக ஆசிரியையாக அரசு பள்ளியில் பணியாற்றி வருகிறேன். பணியில் சேரும்போது நான் கொடுத்த சான்றிதழ் தவறானது என்று கூறி நான் பணியாற்றி பெற்ற 24 ஆண்டு ஊதியம் ரூ.74 லட்சத்தை திரும்ப அரசுக்கு செலுத்தும்படி தற்போது தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியுள் ளது. அதுவும் ஐகோர்ட் ஏற்கனவே, எனக்கு சாதகமாக தீர்ப்பு அளித்தும் அதிகாரிகள் அதை கண்டுகொள்ளாமல் இப்படி ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளனர். எனவே அரசு உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.
இந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து, வழக்குதாரர் பெற்ற ஊதியத்தை வசூலிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட் டார். மேலும், வழக்குக்கு பதில் அளிக்கும்படி பள்ளிக்கல்வித்துறை செயலர், தொடக்க கல்வித் துறை இயக்குனர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.