விருதுநகரில் போலி மது பாட்டில்கள் கஞ்சா விற்பனை!
விருதுநகர் பி.ஆர்.சி.டிப்போ அருகில் தேசிய நெடுஞ்சாலையில்,போதை பொருள் தடுப்பு நடவடிக்கையாக விருதுநகர் மாவட்ட கலால் உதவி ஆணையாளர் கணேசன், மதுவிலக்கு அமல் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம், அருப்புக்கோட்டை கோட்ட கலால் அலுவலர் சின்னத்துரை, சாத்தூர் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் சித்ரகலா ஆகியோர் இணைந்து போலி மது பாட்டில்கள் மற்றும் கஞ்சா விற்பனை தடுப்பு நடவடிக்கையாக வெளி மாநிலங்களில் இருந்து வரும் தனியார் மற்றும் அரசு பேருந்துகளை சோதனை செய்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் சமீப காலமாக வெளிமாநில மது பாட்டில்கள் மற்றும் கஞ்சா பயன்பாடு அதிகமாக இருப்பதால், இந்த திடீர் வாகன சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-மாரீஸ்வரன்.