உலக பத்திரிகை சுதந்திர நாள் நல்வாழ்த்துகள் !
உலக பத்திரிகை சுதந்திர நாள் நல்வாழ்த்துகள்! சர்வதேச ஊடக கண்காணிப்பு மையமான REPORTERS WITHOUT BARDERS அமைப்பு 180 நாடுகளில் நடத்திய ஆய்வின்படி பத்திரிகையாளர்கள் பாதுகாப்பை பொறுத்த வரை இந்தியா 161 வது இடத்திற்கு சறுக்கி இருப்பது பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள் நாளுக்கு நாள் இங்கு அதிகரித்து வருவதையும், அதைத் தடுக்க வேண்டிய கடமை அரசாள்வோருக்கு இருப்பதையும் CHENNAI PRESS CLUB
இந்த இனிய நாளில் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறது.
எனவே, சமீப காலமாக உண்மையை வெளிக்கொண்டுவரும் பத்திரிகையாளர்கள் மீது தொடரும் தாக்குதல்களுக்கு முடிவு கட்டும் முகமாக பத்திரிகையாளர்கள் பாதுகாப்புச் சட்டத்தை விரைந்து கொண்டுவர மத்திய, மாநில அரசுகளை தமிழக பத்திரிகையாளர்களின் பேரமைப்பான CHENNAI PRESS CLUB வலியுறுத்துகிறது.
ஊடகன் என்று உன்னதம் கொள்வோம்.
உண்மை – அது எமதுரிமை என்று பெருமிதம் அடைவோம்!
அனைவருக்கும் இனிய உலக பத்திரிகை சுதந்திர தின நாள் நல்வாழ்த்துகள்..!
தகவல் : சென்னை பிரஸ் கிளப் (CHENNAI PRESS CLUB)