பிரபஷனல் கூரியர் பெயரில் பலே மோசடி ! கண்டுகொள்ளுமா கூரியர் நிர்வாகம் !

3

”ஹலோ நான் நான் ஸ்டேட் பாங்க் ஹெட் ஆபிசில் இருந்து பேசுது. ஓ.டி.பி. சொல்லு”னு பான்பராக் நெடி வீச டிசைன் டிசைனா யோசிச்சி ஆட்டைய போடுறதுல வடக்கன்ஸ்-களை அடிச்சிக்க முடியாது, போல. காவல்துறையில் ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. அந்தஸ்தில் பணியாற்றும் போலீசு அதிகாரி ஒருவரையே திக்குமுக்காட செய்துவிட்டார்கள். அந்த போலீசு அதிகாரி தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட அனுபவத்தை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. கே.மாணிக்கவாசகம்.
ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. கே.மாணிக்கவாசகம்.

புரபஷனல் கூரியர் சேவையைப் பயன்படுத்தி, பக்கத்து மாவட்டத்தில் உள்ள முகவரிக்கு புத்தகம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். மூன்று நாட்களாகியும் புத்தகம் போய்ச் சேராத நிலையில், இணையத்தின் வழியே ட்ராக் செய்து பார்க்கும் வசதியைப் பயன்படுத்தி பரிசோதித்திருக்கிறார். ஒரு குறிப்பிட்ட இடத்தில் மேற்படி பார்சல் இருப்பதை உறுதிசெய்தவர், மேலதிக விவரங்களை அறிய அவர்கள் வழங்கிய எண்ணில் தொடர்பும் கொண்டிருக்கிறார்.

இரண்டு ரூபாய் சேவைக்கட்டணம் செலுத்துமாறு, எதிர்முனையில் பேசியவரின் பேச்சு மற்றும் அணுகுமுறையிலிருந்து சந்தேகம் அடைந்து சுதாரித்திருக்கிறார். வடக்கன்ஸ் கேட்டதுபோல, வெறும் ரெண்டு ரூபாய்தானே என்று அனுப்பியிருந்தால் இந்நேரம் அவரது வங்கிக் கணக்கில் இருப்பாக இருந்த வாழ்நாள் சேமிப்பு அத்தனையும் இழந்திருப்பார்.

- Advertisement -

ஒருமுறை, அவரது முழுமையான முகநூல் பதிவை படித்துவிடுங்களேன்.

“1) நான் கடந்த 29.04.2024 அன்று தஞ்சாவூர் #ProfessionalCourierService அலுவலகத்திலிருந்து , பக்கத்து மாவட்டமான புதுக்கோட்டைக்கு ஒரு புத்தக பார்சல் அனுப்பினேன். ஆனால், அந்தப் பார்சல் மூன்று நாட்கள் ஆகியும் உரிய முகவரிதாரருக்கு டெலிவரி செய்யப்படவில்லை. இத்தனைக்கும், அதில், முகவரிதாரரின் முழு முகவரி விபரம், மொபைல் எண்கள் அனைத்தும்கொடுக்கப் பட்டிருந்தது.

(2) ஆகவே, அந்த பார்சலின் Present Status பற்றி உறுதி செய்து கொள்வதற்காக, GOOGLE ல் கொடுக்கப்பட்டிருந்த Professional Courier Tracking என்ற பக்கத்தை Login செய்து பார்த்த போது, கீழே கொடுக்கப்பட்டுள்ள இமேஜில் உள்ளது போல், “Holding Area Pudukkottai” என்று காட்டியது. அதன் அருகிலேயே, “For any delivery related issues, CONTACT US” என்ற Provision ஒன்றையும் காட்டியது. நான் தாமதம் குறித்து Clarification செய்வதற்காக “Contact Us “ என்ற Provision-ஐத் தொட்டேன்.

(3) உடனே, மறுமுனையில் ஒருவர் “Yes Sir” என்றார்.

நான், “புதுக்கோட்டை Professional Courier Service-ல் ஒரு பார்சல் மூன்று நாட்கள் டெலிவரி செய்யப்படாமல் Holding Area Pudukkottai என்று மட்டும் Tracking System-ல் காட்டுகிறது,” என்றேன்.

அந்த லிங்
அந்த லிங்

(4) அதற்கு மறு முனையில் பேசிய நபர், “ பின்கோடு மாறியிருந்தால் லேட் ஆகும். நான் உங்கள் WhatsApp க்கு ஒரு லிங்க் அனுப்புறேன். நீங்க அதை ஓப்பன் செய்து அதில் உள்ள எண்ணுக்கு, சர்வீஸ் சார்ஜ் இரண்டு ரூபாய் மட்டும் GPay செய்யுங்கள். சரியான பின்கோடைக் கண்டுபிடித்து டெலிவரி செய்வதற்குத்தன் அந்த இரண்டு ரூபாய் சர்வீஸ் சார்ஜ் வசூலிக்கப்படுகிறது ,” என்று ஹிந்தி கலந்த ஆங்கிலத்தில் பேசினார். “சர்வீஸ் சார்ஜ் இரண்டு ரூபாய் GPay செய்யுங்கள்” என்றதுமே, எனக்கு அவர் மீது சந்தேகம் தட்டியது.

(5) மேலும், அவர் ஆங்கிலம் பேசிய தொனியைக் கேட்டதுமே, ‘ஆஹா..! நம்ம வடக்கன்ஸ் எவனோ தொழிலைப் போட ஆரம்பித்துவிட்டான்,’ என்பதை உணர்ந்து கொண்டு , “Are you speaking from North India? “ என்று கேட்டேன். அதற்கு அவன், அதே ஹிந்தி-ஸ்லாங்கில்“ I am speaking from south India” என்றான்.

4 bismi svs

(6) அதை அவன் சொன்ன விதத்தைக் கேட்டதும், ‘ சரிதான்! இது எவனோ Fraud செய்யும் வடக்கன்ஸ் கும்பல்தான்’ என்பது உறுதிப்பட்டது. உடனே, அவனது போன் தொடர்பை துண்டித்துவிட்டு, அடுத்து, தஞ்சாவூரில் உள்ள Professional Courier Service அலுவலகத்துக்குத் மொபைலில் தொடர்பு கொண்டு, “ Google-ல் உங்களது , Professional Courier Tracking Service-பக்கத்தைப் பயன்படுத்தினால், அதனுள், ஒரு வடக்கன் வந்து இரண்டு ரூபாய் சர்வீஸ் சார்ஜ் அனுப்பச் சொல்கிறான். உங்கள் நிர்வாகத்துக்கு இது தெரியுமா?”என்று கேட்டேன்.

(6) அதற்கு அவர் சொன்ன பதில், “ஆமாம் சார்! நிறைய இடத்தில் இது மாதிரி இரண்டு ரூபாய் சர்வீஸ் சார்ஜ்னு சொல்லி GPay மூலம் வசூல் செய்துவிட்டு, அப்புறம், அந்த Customer அக்கவுண்டில இருந்த பணத்தையும் அப்படியே ஆட்டையப் போடுறாங்கன்னு நிறைய கம்ளைண்ட் வந்த்திருக்கு சார்..। “ என்றதுதான் இன்னும் Highlight.

(7) இந்தியா முழுவதும் இயங்கிவரும் Professional Courier Service, அவர்கள் பெயரில் நடக்கும் இம்மாதிரி இணையதள Scam-ஐக் கண்டுபிடித்து அந்த Fraud வடக்கன்ஸ்களை ஒடுக்குவதற்கு IT Act சட்டப்படியும், இதர IPC சட்டப்படியும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவர்கள் கடமையல்லவா?

(8) அப்படிச் செய்யாமல், நடவடிக்கை எடுக்கவேண்டிய Professional Courier நிர்வாகமே, “ஆமாம் சார்! இப்படித்தான் எல்லா இடத்திலும் செய்யிறானுங்க! என்ன செய்வது?” என்று பொதுமக்களிடமே புலம்பினால் போதுமா?

(9) ஒரு பெரும் நிறுவனத்தை நடத்திவரும் Professional Courier Service நிர்வாகம், இம்மாதிரி இணையதள ஏமாற்று வடக்கன்ஸ்களை ஒடுக்கும் சக்தி கொண்ட அமைப்பையும் கொண்டிருக்க வேண்டும்.” என்பதாக தனது முகநூலில் பதிவு செய்திருக்கிறார், ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. கே.மாணிக்கவாசகம்.

இந்த விவகாரம் தொடர்பாக, புரபஷனல் கூரியர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜிடம் பேசினோம். விசயத்தைக் கேட்டுக்கொண்டவர், “அது தவறான லிங்க். அதுபோல் நாங்கள் எதுவும் கட்டணம் வசூலிப்பதில்லை. நார்த் இண்டியன்ஸ் இதே வேலையா செய்திட்டிருக்காங்க. எங்களது கவனத்திற்கு வந்து ஏற்கெனவே கம்ப்ளையிண்ட் செய்து நடவடிக்கை எடுத்திருக்கிறோம். சென்னையில் உள்ள சாப்ட்வேரை கையாளும் நிர்வாகியிடம் பேசுங்கள்.” என்றார்.

நாமும் தொடர்ந்து முயற்சித்தும் நமது அழைப்பை அவர் ஏற்று பதிலளிக்கவும் இல்லை. வாட்சப் வழி அனுப்பியிருந்த தகவலுக்கும் அவர் மறுமொழி அனுப்பவில்லை.

தமிழகத்தில் கூரியர் சேவையில் பல ஆண்டுகளாக இயங்கிவரும் ஒரு முன்னணி நிறுவனமான புரபஷனல் கூரியர் நிறுவனத்தின் பெயரில் நடைபெறும் இந்த மோசடியை, அந்த நிறுவனம்தான் தனது சொந்தப் பொறுப்பில் தடுத்து நிறுத்த வேண்டும். மாறாக, ஆமாம் அப்படித்தான் நடக்கிறது என்று தார்மீக அடிப்படையில் தவறை அங்கீகரித்துக் கொள்வதென்பது அவர்களின் நாணயமான பதிலாக வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், வாடிக்கையாளர்தான் விழிப்புணர்வாக இருக்க வேண்டுமென்று, பொறுப்பை வாடிக்கையாளர் தலையில் சுமத்திவிட்டு கைநழுவி செல்லும் அந்நிறுவனத்தின் அணுகுமுறை சிக்கலுக்குரியது.

Professional Courier
Professional Courier

மிக முக்கியமாக, இதில் கவனிக்கத்தக்கது, அந்த தவறான இணைப்பில் வாடிக்கையாளர் பற்றிய அனைத்து விவரங்களும் சரியாக இடம்பெற்றிருக்கிறது என்பதுதான். எந்த தேதியில், எங்கே புக் செய்திருக்கிறோம்? மேற்படி பார்சல் எந்த இடத்தில் இருக்கிறது? என்பதெல்லாம் மிகச்சரியாக இந்த இணைப்பில் காண்பிக்கப்படுகிறதென்றால், அவ்வளவு நுட்பமாக உங்களது தரவுகளைத் திருடியிருக்கிறார்கள் என்றுதானே, அர்த்தம். ஆக, வாடிக்கையாளனைவிட அந்நிறுவனத்தின் பொறுப்பான அதிகாரிகள் அல்லவா, இத்தகவலை கேட்ட மாத்திரத்தில் அலறியடித்துக்கொண்டு புகார் செய்ய போலீஸ் ஸ்டேஷன் ஓடியிருக்க வேண்டும். ஆனால், இவை எதையும் அலட்டிக்கொள்ளாமல் ஆமாம் அப்படித்தான் செய்கிறார்கள் என்ன செய்வதென்று கையைப் பிசைவதை எப்படி எடுத்துக் கொள்வது?

ஒன்று, சரியான இணைப்பா? தவறான இணைப்பா? என்று இணைய இணைப்புக்கான முகவரியை பார்த்து புரிந்துகொள்ளும் அளவிற்கு புரபஷனல் கூரியரின் வாடிக்கையாளர்கள் தொழிற்நுட்ப அறிவை பெற்றிருக்க வேண்டும்.

அல்லது, எதிர்முனையில் பேசுபவரின் அணுகுமுறையை வைத்து, பேசுபவன் பிராடு அல்லது இல்லை என்பதை உறுதிபடுத்திக் கொள்ளும் அளவுக்கான உளவியல் தெரிந்தவனாக இருக்க வேண்டும்.

இரண்டும் இல்லாதவன், அவன் கேட்டபடி இரண்டு ரூபாயை அனுப்பி வைத்துவிட்டு அக்கவுண்டில் இருந்த மொத்தப்பணத்தையும் இழந்துவிட்டு போலீஸ் ஸ்டேஷனாக அலைய வேண்டும்.

-ஆதிரன்.

5 national kavi
3 Comments
 1. சிந்தா says

  புரபஷனல் கூரியர் நிறூவனமோ அல்லது வேறு கூரியர் நிறுவனமோ கூரியர் புக் செய்யும் போது ஒரு ரசீது தருவார்கள் அதில் கூரியர் சேர்ந்ததா இல்லையா என்பதை அறிய அவர்களின் அதிகாரப்பூர்வமான இணையதள முகவரி மற்றும் வாடிக்கையாளர் சேவை மைய முகவரி வழங்கப்பட்டிருக்கும். வாடிக்கையாளர்கள் இத்தகைய அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக தங்கள் கூரியரை ட்ராக் செய்வதன் மூலம் தவறான லிங்க வழி சென்று அவதியுறும் நிலை வராது.
  புரபஷனல் கூரியர் நிறுவனத்தின் அதிகார இணையதள பக்கத்தில் இது போன்ற பிராடுத்தனங்களுக்கு எதிரான எச்சரிக்கை செய்தியும் வெளியிட பட்டுத்தான் இருக்கிறது.

  http://Www.tpcglobe.co.in. என்ற இணைய முகவரியில் இதை காணமுடியும்.

 2. சிந்தா says

  புரபஷனல் கூரியர் நிறூவனமோ அல்லது வேறு கூரியர் நிறுவனமோ கூரியர் புக் செய்யும் போது ஒரு ரசீது தருவார்கள் அதில் கூரியர் சேர்ந்ததா இல்லையா என்பதை அறிய அவர்களின் அதிகாரப்பூர்வமான இணையதள முகவரி மற்றும் வாடிக்கையாளர் சேவை மைய முகவரி வழங்கப்பட்டிருக்கும். வாடிக்கையாளர்கள் இத்தகைய அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக தங்கள் கூரியரை ட்ராக் செய்வதன் மூலம் தவறான லிங்க வழி சென்று அவதியுறும் நிலை வராது.
  புரபஷனல் கூரியர் நிறுவனத்தின் அதிகார இணையதள பக்கத்தில் இது போன்ற பிராடுத்தனங்களுக்கு எதிரான எச்சரிக்கை செய்தியும் வெளியிட பட்டுத்தான் இருக்கிறது.

  http://Www.tpcglobe.com என்ற இணைய முகவரியில் இதை காணமுடியும்.

 3. சுரேஷ் says

  எனக்கும் இதை போன்று ஒரு சம்பவம் நடந்தது.
  என்னிடம் ஒரு ரூபாய் மட்டும் அனுப்பச்சொல்லி மிக வேகமாகவும் விவேகமாகவும் பேசினான் எனக்கு மனதில் ஒரு நெருடல் இருந்ததினால் நான் சற்று யேசித்து அனுப்பவில்லை.
  மறுபடியும் உடனே வேறு ஒருவன் பேசினான் ஹிந்தியில் உடனே ஒரு ரூபாய் அனுப்புங்கள் டெலிவரிக்குஏற்பாடு செய்வதாகசொன்னான்.
  உடனே நான் கொரியர் அனுப்பிய ஆபீஸ்ற்கு சென்று விசாரித்தேன். சார் அனுப்பியிராதீங்க இதே போல் நிறைய சீட்டிங் செய்கிறாரர்கள் என்று சொன்னார்கள்.
  இது போன்ற பிரச்சனைகளுக்கு proffesional courier நிர்வாகம் தான் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். திருடர்களை வளரவிடுவது நல்லது அல்ல.

Leave A Reply

Your email address will not be published.