வழக்கு நிலுவையில் உள்ள நிலத்தை வளைத்த காங்கிரஸ் எம்பி மகன் 😡

0

வழக்கு நிலுவையில் உள்ள நிலத்தை வளைத்த காங்கிரஸ் எம்பி மகன்

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா, எரதிமக்காள்பட்டியை சேர்ந்த பள்ளி தாளாளர் கோவிந்தராஜ், அவரது மனைவி செண்பகவல்லி, சீதாலட்சுமி, தேனியை சேர்ந்த சௌந்தரபாண்டியன்  ஆகிய 4 பேரும் சேர்ந்து 1985 ஆம் ஆண்டு சர்வே நம்பர் 419 / 4, 32 செண்ட் நிலம், சர்வே நம்பர் 420, 37 சென்ட் நிலம் 475/1,18 சென்ட் நிலம் என மொத்தம் 87 சென்ட் நிலத்தை ஒன்றாக சேர்ந்து வாங்கினர். நான்கு பேர் சேர்ந்து வாங்கிய நிலத்தை கோவிந்தராஜ் மற்றும் செண்பகவல்லி ஆகிய இருவரும் பாகப்பிரிவினை செய்து தரவேண்டும் என்று 2018ஆம் ஆண்டு நீதிமன்றத்தின் மூலம் வழக்கு தொடுத்தனர்.

பிரின்ஸ்

இந்த வழக்கு தேனி உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2021ஆம் ஆண்டு முன்னாள் காங்கிரஸ் எம்பி ஆணின், இரண்டாவது மகன் மற்றும் சென்னை திருவல்லிக்கேணி திமுக மேற்கு மாவட்ட இளைஞர் அணியை சேர்ந்தவரும் உதயநிதி ஸ்டாலினின் நிழலாக தன்னைக் காட்டிக்கொள்பவருமான இம்ரான் கான், வழக்கு நிலுவையில் உள்ள நிலத்தை வாங்கி பத்திர பதிவு செய்துள்ளார்.

செண்பகவள்ளி, கோவிந்தராஜன்

நான்கு பேருக்கு சொந்தமான நிலத்தை நீதிமன்றம் மூலமாகவே பாகப்பிரிவினை செய்துதர வேண்டும் என்று கூறி வழக்கு தொடுத்த கோவிந்தராஜ், மனைவி செண்பகவல்லி ஆகிய இருவர் மட்டும் சேர்ந்து, தேனி சார்பதிவாளர் உஷாராணி துணையோடு தேனி, பிசிபட்டியைச் சேர்ந்த இடைத்தரகர் பிரின்ஸ் என்பவர் மூலமாக நிலத்தை முறைகேடாக பத்திரப் பதிவு செய்துள்ளனர்.  இந்த பிரின்ஸ் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எனவே நான்கு பேருக்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்து வாங்கிய பத்திரபதிவை ரத்து செய்ய வேண்டும் என்று தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும் தேனி மாவட்டம் சார்பதிவாளர் உஷாராணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உஷாராணி, ஆண்டிபட்டி சார்பதிவாளராக பணிபுரிந்த போது 2 ஏக்கர் 43 சென்ட் நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்த வழக்கில், சார்பதிவாளர்  உஷாராணி மற்றும் எழுத்தர் மகாதேவன் உள்பட 5 நபர்கள் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆண்டிப்பட்டியில்  சார்பதிவாளராக பணிபுரிந்த போது முன்னாள் அரசு தரப்பு வழக்கறிஞர் ஒருவருடன் கூட்டணி சேர்ந்து கொண்டு பல்வேறு மோசடி செய்து பத்திரபதிவு செய்துள்ளார் என்றும்  அந்த வழக்கறிஞர் மீது ஏற்கனவே பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகள் இருப்பதாக ஆண்டிபட்டி பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் நிரந்தர மற்றும் தற்காலிக பணியாளர்கள் தினம் தினம் புலம்பி தவித்து வருகின்றனர். குற்றச்சாட்டு குறித்து உஷாராணியிடம் கேட்ட போது, “பொய்யான குற்றச்சாட்டு. பத்திரப்பதிவில் எந்த தவறும் நடக்கவில்லை” எனக் கூறி முடித்துக் கொண்டார்.

-ஜெயபால்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.