திருச்சி மாநகராட்சி மாமன்றத்தில் எந்த சமுதாயத்திற்கு எத்தனை உறுப்பினர்கள்?

0

திருச்சி மாநகராட்சி மாமன்றத்தில்

எந்த சமுதாயத்திற்கு

எத்தனை உறுப்பினர்கள்?

தமிழக அரசியல் களத்தின் தேர்தல் தொடக்க காலங்களில், ஒவ்வொரு அரசியல் கட்சிகளிலும், வேட்பாளராக தேர்வாகிட, போட்டியிடும் வேட்பாளருக்கு அப்பகுதியில் உள்ள மக்கள் செல்வாக்கு, பொருளாதார பலம், கட்சியின் மீதான விசுவாசம், நற்பெயர் உள்ளிட்டவைகள் தகுதியாக பார்க்கப்படும்.

ஆனால் இவையனைத்தையும் தாண்டி அந்த வேட்பாளர் எந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதும் ஒரு முக்கியத் தகுதியாக பின்னர் பார்க்கத் தொடங்கியது கட்சித் தலைமை. வேட்பாளர் தேர்வில் முதல் தகுதியாக, “அவர் என்ன சமுதாயம்” என்ற கேள்வி முன் வைக்கப்படுகிறது.

ஓட்டு போடும் வாக்காளர்களும், “அவர் நம் சமுதாயத்தை சேர்ந்த வேட்பாளர்” என்ற அடிப்படையிலான வாக்குகள் பதிவாகும் நிலைக்கும் இன்று தமிழக அரசியல் களம் தள்ளப்பட்டிருக்கின்றது.

சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் 59 வார்டுகளையும், அதிமுக 3 வார்டுகளையும், அமமுக ஒரு வார்டு, சுயேட்சைகள் 2 வார்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். வெற்றி பெற்றவர்கள் எந்தெந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பது குறித்து இங்கே ஒரு பட்டியலை முன்வைத்துள்ளோம்.

 

கள்ளர் -17,

பட்டியல் இனத்தவர் – 9,

வெள் ளாளர் – 8,

நாயுடு – 5,

கோனார் – 5,

செட்டியார் – 4,

முத்தரையர் – 3,

கவுண்டர் – 2,

வன்னியர் – 1,

சௌராஷ்டிர – 1,

உடையார் – 1,

ஆசாரி – 1,

மருத்துவர் 1

என 58 மாமன்ற உறுப்பினர்களும், 7 பேர் இஸ்லாமிய வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி மாநகராட்சியைச் பொறுத்தவரை தனிவார்டு என்பது 7 ஆகும். ஆனால் 9 பேர் வெற்றி பெற்றிருப்பது வரவேற்பிற்குரியதாகும். அதாவது பொது வார்டில் 2 பட்டியல் இனத்தவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

நடைபெற உள்ள மண்டலத் தலைவர்களுக்கான தேர்தலில் ஆளுங்கட்சியால் பரிந்துரைக்கப்படும் நபர்கள் மூவர் கள்ளர் இனத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.