டிடிவி தினகரனுக்காக உயிரை கொடுத்து வேலை செய்வேன் பிரபல பெண் டான்ஸ் மாஸ்டர் நெகிழ்ச்சி!
தமிழ் சினிமாவின் பிரபல பெண் நடன இயக்குநர்களில் ஒருவர் கலா. கலைஞர் தொலைக்காட்சியில் ‘மானாட மயிலாட’ நடன நிகழ்ச்சி மூலம் தமிழகம் முழுக்கப் பிரபலமானவர் கலா.
இந்நிலையில், டிடிவி தினகரன் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் நடன இயக்குநர் கலா தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து கலா கூறுகையில், நான் ஆறு மாதமாக வேறொரு வேலையில் இருந்தேன். என் நண்பர்களுடன் கலந்தாலோசித்த போது தினகரனின் நேர்மையான பேச்சு எதையும் நேரடியாகச் சொல்லும் குணம் உள்ளிட்டவைகள் என்னை கவர்ந்தன. மனதுக்கு ஒருவரைப் பிடிக்க வேண்டும். நான் 30 ஆண்டுகளாக சினிமா துறையில் இருக்கிறேன். எப்படி வேலை செய்வேன் என்பது அனைவருக்கும் தெரியும். கட்சியில் என்ன பணி கொடுத்தாலும் உயிரைக் கொடுத்து வேலை செய்வேன் என்றார்.
அதேபோல், நடிகர் ராஜசேகர் மற்றும் கூல் சுரேஷ் ஆகியோரும் டிடிவி தினகரன் முன்னிலையில் அமமுகவில் தங்களை இணைத்து கொண்டனர்.