திருச்சியின் அடையாளம் (8) – கல்வி சாம்ராட் – ஆடிட்டர் கே.சந்தானம்
திருச்சியின் அடையாளம் – கல்வி சாம்ராட் – ஆடிட்டர் கே.சந்தானம்
திருச்சியில் வாழ்ந்த பிரபலங்கள் வரிசையில் திருச்சி மாநகரில் வாழ்ந்த கல்வியாளர்களில் ஒருவராக விளங்கியவித்யா சேவா ரத்னம் ஆடிட்டர் கே.சந்தானம் தஞ்சை மாவட்டம் திருவெண்காட்டில் 1930ம் ஆண்டு பிப்ரவரி 3 ம்தேதி பி.குஞ்சிதபாதம் அய்யர், ருக்மணீ அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தவர் சந்தானம் .அவரது குழந்தைபருவத்திலேயே திருச்சி தென்னூரில் குடியேறினர். அவர் தேசியக் கல்லூரியில் உயர் கல்வி பயின்ற போதுஅக்கல்லூரியின் முதல்வர் சாரநாதன், பேராசிரியர் ராமையர் ஆகியோர் அவருடைய தேதிய உணர்ச்சிக்கு மேலும்உரமிட்டனர். அப்போது முதலே கதர் ஆடையை உடுத்த தொடங்கி வாழ்நாளின் இறுதி வரை கதர் ஆடையைஉடுத்திய பெருமைக்குரியவர் தேதியவாதியாக வாழ்ந்தவர் சந்தானம்.
தேசியக் கல்லூரியில் இன்டர் மீடியட்டும், ஜோசப் கல்லூரியில் பி.காம். படித்து பின்னர் சி.ஏ.தேர்ச்சி பெற்றுஆடிட்டராக தொழில் தொடங்கினார். ஆடிட்டர் பணியில் கணக்குப் புத்தகங்களில் இரு ஸ்தானங்களை சேர்ந்தார்போல் கூட்டும் ஆற்றல் பெற்ற அவர் ஒரு போதும் கால்குலேட்டரை பயன்படுத்தியதில்லை, தன்னுடைய ஆடிட்டர்பணியில் திறம்படப் பணிபுரிந்து பேரும், புகழும் பெற்றவர்.
இதைத் தொடர்ந்து 1954ம் ஆண்டு முதல் 1975 ம் ஆண்டு வரை தேதியக் கல்லூரியில் பகுதிநேர ஆசிரியராகப்பணியைத் துறந்து தேசிய கல்லூரியின் நிர்வாக் குழுவில் உறுப்பினரானார், பின்னர் அதே ஆண்டு டிசம்ப 1ம் தேதிநிர்வாகக் குழுவின் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அது முதல் தொடர்ந்து கடந்த 2004ம் ஆண்டு வரைசெயலாளராகப் பணியாற்றிய அவர், அக்கால கட்டத்தில் கல்வி நிறுவனங்களின் மேம்பாட்டிற்காக செய்த பணிகள்பல, நிர்வாகக் குழுவில் சிறப்பாக பணியாற்றிய அவர் கடந்த 2000ம் ஆண்டு செயலாளர் பதவியில் 25 ஆண்டுகளைக்கடந்து வெள்ளி விழாவும் கண்டார்.
தேசியக் கல்லூரியின் பல்துறைகளில் புதிய பாடப் பிரிவுகளையும், முதுகலை பட்டப் படிப்புகளையும் தொடங்கியஅவர், மாலை நேர கல்லூரியைத் தொடங்கி அதன் மூலம் நிதி நிலையை மேம்படுத்தினார். தேசியக் கல்லூரிஉயர்நிலைப்பள்ளிக் கட்டடங்களை புதிதாக எழுப்பி மேம்படுத்திய சந்தானம் தேசியக் கல்லூரியின் பொன்விழா, வைரவிழா, பவள விழா மூன்றையும் மிகச் சிறப்பாக கொண்டாடி அதனை ஒட்டிப் புதிய கட்டடங்கள் கட்டிகல்லூரியின் புகழ் பரப்பினார்.
அவர் செயலாளராக பதவி வகித்த காலத்தில் ஏற்கனவே இருந்த கல்வி நிறுவனங்கள் தவிர ஶ்ரீமதி இந்திரா காந்திகல்லூரியை 1990 ல் ஜெயந்திரா மெட்ரிக் ,மகளிர் மேல்நிலைப்பள்ளி ,1998ல் சாரநாதன் பொறியியல் கல்லூரி என்றபுதிய 3 கல்வி நிறுவனங்களைத் தொடங்கி சிறப்புற நடத்தினார். அவரது நிர்வாகம் மகாத்மா காந்தி நூற்றாண்டுவித்யாலயா என்ற பெயரில் ஒரு CBSE பள்ளியையும் தென்னூரில் நிறுவி அங்கு அனைத்து வசதிகளையும்ஏற்படுத்தியுள்ளார்.
மகளிருக்காக ஒரு தனிக் கல்லூரி நிறுவி அவர்களைத் தன் சொந்த காலில் நிற்கும் நிலைக்கு உயர்த்த வேண்டும் என்கிற எண்ணம் அவருக்குபிறந்தது. அதன் காரணமாக உதித்தது தான் 1984ல் தொடங்கப்பட்ட இந்திராகாந்தி மகளிர் கல்லூரி இக்கல்லூரிகுறுகிய காலத்தில் பெரும் வளர்ச்சி பெற்று டாக்டர் கே.மீனா தலைமையில் பற்பல புதுப் புது பாடப் பிரிவுகளுடன்நன்கு இயங்கி 4 ஆயிரம் மாணவிகள் 200 க்கும் மேற்பட்ட பேராசிரியர்களையும் உள்ளடக்கி வெள்ளி விழாவைநோக்கிப் பீடு நடை போட்டு வருகிறது.
ஆடிட்டர் சந்தானம் தேசியக் கல்லூரியில் நிர்வாக குழுவின் செயலாளர் பதவி தவிர சுயநிதி பொறியியல் கல்லூரி கூட்டமைப்பின் தலைவர், அரசு நிதி உதவி பெறும் கல்லூரி நிர்வாகங்களின் கூட்டமைப்பின் துணை தலைவர், சேஷாயி பாலிடெக்னிக்கின் செயற்குழு உறுப்பினர். ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அதனை சார்ந்த இதர நிறுவனங்களின் நிர்வாகக் குழு உறுப்பினர், பாரதிய வித்யாபவன் திருச்சி கிளையின் ஸ்தாபக செயலாளர், திருச்சி புரட்க்டிவிடி கவுன்சில் செயலாளர், அத்வைத சபா நெடுங்கால உறுப்பினர், தலைவர் என பல்வேறு பதவிகளை வகித்தார்.
அடிப்படையில் காங்கிரஸ்வாதியான இவர், மறைந்த தலைவர்களான மூதறிஞர் ராஜாஜி, பெருந்தலைவர் காமராஜ், மற்றும் கருப்பையா மூப்பனார் ஆகியோரோடு நெருங்கிய தொடர் கொண்டிருந்தார், இவர் மூலம் வளர்ச்சி கண்ட சாரநாதன் பொறியில் கல்லூரிக்கு இவரது மூத்தமகன் ரவீந்தரன் செயலாளராகவும், இந்திராகாந்தி கல்லூரி செயலாளராக கடைசி மகன் குஞ்சிதபாதமும், தேசியக்கல்லூரி செயலாளராக இவரது நண்பரும் பிரபல வழக்கறிஞருமான ரகுநாதனும், இன்னோரு மகனான வைத்தியநாதன் உதவி செயலாளராக இருந்து நிர்வாகம் செய்து வருகிறார்,
இப்படி திருச்சியில் உள்ள வாழ்நாள் முழுவதும், காங்கிரஸ்வாதியாகவும், ஆன்மீகவாதியாகவும், ஆடிட்டராகவும், கல்விதந்தையாகவும் வாழ்த்த ஆடிட்டர் சந்தானம் உடல்நலக்குறைவால் கடந்த 2007 ஏப்ரல் 27ம் தேதி இறந்தார்.
அவருயை பிறந்தநாள் பிப்ரவரி 3ம் தேதி வருகிற இந்த வாரத்தில் அவரை பற்றிய குறிப்புகளை அங்குசம் செய்தி இதழ் வாயிலாக இன்றைய தலைமுறையினருக்கு அறிமுகம் செய்து வைப்பதில் பெருமை கொள்கிறோம்.
அடுத்த இதழில் இன்னொரு ஆளுமையு