இந்திய ஜனநாயக கட்சியின் – தேசம் காப்போம் தமிழை வளர்ப்போம் – மார்ச் 2 தேதி பிரம்மாண்டமான மாநாடு ஏற்பாடு !

0

வருகின்ற மார்ச் மாதம் 2 தேதி நடக்க இருக்கின்ற இந்திய ஜனநாயக கட்சியின் மாநாட்டிற்காக பணிகள் சிறப்பாக நடைபெறுகிறதா என்று அக்கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் பாரிவேந்தன் மாநாட்டு திடலை பார்வையிட்டார். தேசம் காப்போம் தமிழை வளர்ப்போம் என்ற தலைப்பில் வருகின்ற மார்ச் 2 தேதி ஒரு பிரம்மாண்டமான மாநாடு நடைபெற உள்ளது. அதற்கான பணிகள் குறித்து  டாக்டர் பாரிவேந்தன் அவர்கள் சிறுகனூரில் அமைந்துள்ள மாநாடு நடைபெற உள்ள இடத்தை நேரில் சென்று பார்வையிட செல்லும் பொழுது போக்குவரத்துக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க மாநாட்டு வருகின்ற சுமார் 2000 வாகனங்களை அதாவது பேருந்து , வேன், மற்றும் கார் ஆகிய வாகனங்களை திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்களுக்கும் அதில் செல்லும் வாகனங்களுக்கும் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் மாநாட்டிற்கு வருகின்ற வாகனங்களை திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் சுமார் 10 பார்க்கிங் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் சென்னையிலிருந்து வருபவர்களுக்கு செல்லும் வகையிலும் திருச்சி சுற்றுவட்டார பகுதியில் சென்று வரும் வகையிலும் ஏதுவாக இருக்க சாலைகளில் இருபுறமும் பார்க்கிங் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . அந்த பார்க்கிங் வசதியை நிறுவனத் தலைவர் டாக்டர் பார்வேந்தர் அவர்கள் பார்வையிட்டார் . அதனைத் தொடர்ந்து மாநாட்டு திடலுக்கு வந்து மாநாட்டிற்கான வேலைகள் எவ்வாறு நடைபெறுகிறது என்று நேரில் பார்வையிட்டார்.

2 dhanalakshmi joseph
4 bismi svs

அப்பொழுது அவருடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயசீலன் முதன்மைச் செயலாளர் சத்யநாதன் முதன்மை அமைப்பு செயலாளர் எஸ் எஸ் வெங்கடேசன் மற்றும் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் சி கே எம் கனகராஜ்,தலைமை செயற்குழு உறுப்பினர் அன்பு துறை,துணைப் பொதுச் செயலாளர் நெல்லை ஜீவா மாவட்ட செயற்குழு உறுப்பினர் நாராயணன் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தார்கள். பின்பு மாநாட்டில் வேலை செய்யும் பணியாளர்களை சந்தித்து வேலை சிறப்பாக செய்து உள்ளீர்கள் என்று அவர்களை பாராட்டினார்.

பின்பு செய்தியாளரை சந்தித்த டாக்டர் பாரிவேந்தர் கூறியதாவது: வருகின்ற மார்ச் இரண்டாம் தேதி மாநாட்டிற்கு சுமார் மூன்று லட்சம் மக்கள் திரளாக வருவார்கள் என்றும்அதற்கான திடலை கட்சியுடன் தொண்டர்களும் தலைவர்களும் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த மாநாட்டில் இந்திய ஜனநாயக கட்சியின் வருகையும் சக்தியையும் அண்டை மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லும் அளவிற்குமிகவும் பிரம்மாண்டமாக இருக்கும். இந்திய ஜனநாயக கட்சி தலைவர்களிடம் பிஜேபி மாநில தலைவரும் மத்திய அமைச்சர்களும் இந்த மாநாடுட்டில் கலந்து கொள்வார்கள் என்றாா்.

- Advertisement -

- Advertisement -

இந்த பிரமாண்ட மாநாடு வாயிலாக இந்திய ஜனநாக கட்சியை சேர்த்த நிறுவனத் தலைவர்  அல்லது அந்த கட்சியை சேர்ந்தவர்கள் பெரம்பலூரில் போட்டி போட உள்ளார்கள். பெரம்பலூர் தொகுதியை கைப்பற்ற வேண்டும் என்பதும் குறிக்கோளாக கொண்டு இந்த மாநாடு நடைபெறுகிறது. . இதை வைத்து இந்திய ஜனநாயக கட்சியை தமிழ்நாட்டில் எப்படி வலுப்பெற்று இருக்கிறது எல்லா சமுதாயத்திலும் ஊடுருவி சென்றுள்ளது என்பதற்காக ஒரு வாய்ப்பாக இந்த மாநாடு அமையும் .  இந்திய ஜனநாயக கட்சியிலிருந்து யார் நின்றாலும் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்பதைஉறுதியாகவும் நம்பிக்கையாகவும் நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என்று கூறினார்.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.