செயின்ட் ஜோசப் கல்லூரிப் பேராசிரியருக்கு “ஞானச்சுடர்” விருது !

0

செயின்ட் ஜோசப் கல்லூரிப் பேராசிரியருக்கு “ஞானச்சுடர்” விருது

திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கம் சார்பில் தில்லை நகர் 80 அடி சாலையில் உள்ள ராம் ரெஸ்டாரண்டில் முப்பெரும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத்துறை உதவிப் பேராசிரியர் எழுத்தாளர் முனைவர் ஜா.சலேத் அவர்களின் எழுத்துப்பணி, ஆய்வுப்பணியைப் பாராட்டி “ஞானச்சுடர் விருது” வழங்கப்பட்டது.

ஞானச்சுடர் விருது !
ஞானச்சுடர் விருது !

திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்க சாசனத் தலைவர் லயன் முகமது ஷமி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மாவட்ட முதல் துணை ஆளுநர் பொறியாளர் சவரிராஜ் இந்த விருதினை வழங்கிப் பாராட்டுரை வழங்கினார். 37 நூல்களின் ஆசிரியரான முனைவர் ஜா‌.சலேத் இந்த ஆண்டில் பெறும் ஆறாவது விருது என்பது குறிப்பிடத்தக்கது.

விழா நிறைவில் விருது பெற்ற பேராசிரியருக்கு லயன் சங்க நிர்வாகிகள் டாக்டர் ராஜாராம், பொறியாளர். தங்கராஜ், இராஜேந்திரன் , ரவி, தமிழ்ச்செம்மல் வீ‌.கோவிந்தசாமி, திரு. இராஜராஜன், கவிஞர்கள், பொறியாளர்கள், லயன் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் தங்கள் பாராட்டுதல்களைத் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.