கனிமொழி – திருச்சி சிவா – ஸ்டாலின் நடந்தது என்ன ?

0
டிசம்பர் 24 ஆம் தேதி திமுக தலைமை நிலையமான அறிவாலயத்தில் நடத்தப்பட்ட மாசெக்கள், எம்பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நாடாளுமன்ற பொறுப்பாளர்கள் கூட்டம் தேர்தல் ஆலோசனைக்காக நடந்தது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும், எம்பியுமான திருச்சி சிவா சற்றே கோபமாகி பாதியிலேயே வெளியேறிவிட்டார் என்ற தகவல் திமுகவில் பரவி வருகிறது.
2 dhanalakshmi joseph
 அவருக்கு பேச வாய்ப்பளிக்கப்படவில்லை என்பதே இதன் காரணம் என்றும் சொல்கிறார்கள். ஆனால் பேச வாய்ப்பு அளிக்கப்படாததற்கு என்ன காரணம் என விசாரித்தால் விஷயம் டெல்லி வரை செல்கிறது.
“நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கஜா புயல் பற்றி தான் பேசுவதற்காக மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடுவிடம் முன்கூட்டிய அனுமதி பெற்றிருக்கிறார் சிவா. இது தெரியாமல் கனிமொழியும் கஜா பற்றி பேச தயாராகிவிட்டார். கடைசிநேரத்தில்தா சிவா ஏற்கனவே அனுமதி கேட்டிருப்பது கனிமொழிக்குத் தெரிந்திருக்கிறது.
- Advertisement -

- Advertisement -

அப்போது, ‘நீங்க என்கிட்டையே முன்னாடியே சொல்லியிருக்கலாமே?’ என்று சிவாவிடம் கேட்டாராம் கனிமொழி. அதாவது மாநிலங்களவை திமுகவுக்கு கனிமொழிதான் தலைவர். அந்த தோரணையில் கேட்கவில்லை என்றாலும் சற்று பணிவாகத்தான் கேட்டிருக்கிறார் கனிமொழி. ஆனால் அதற்கு சிவா மிகவும் கோபமாகிவிட்டாராம்.
‘உங்ககிட்ட எல்லாத்தையும் கேக்கணும்னு எனக்கு அவசியம் இல்லை. நான் உங்களை விட சீனியர்’ என்று கனிமொழியிடம் எகிறிவிட்டாராம் சிவா. இதை கனிமொழி அப்படியே விட்டுவிட்டார்.
சில நாள்கள் கழித்து இந்தக் கூட்டத்துக்காக அறிவாலயம் வந்த சிவாவை தன் அறைக்கு அழைத்த தலைவர் ஸ்டாலின், ‘சிவாண்ணே கொஞ்சம் கோபத்தைக் குறைச்சுக்கங்க. எல்லா இடத்துலயும் கோபத்தைக் காட்டமுடியுமா? கனி யாருனு நினைச்சீங்க. அவங்க தலைவர் பொண்ணு’ என்று கோபமாகப் பேசியிருக்கிறார் ஸ்டாலின். இந்த பின்னணியில்தான் கூட்டத்தில் பேசவும் சிவாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாம். அதனாலேயே பாதியில் கூட்டத்தில் இருந்து வெளியேறிவிட்டார் திருச்சி சிவா”என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்.
இந்தச் செய்தி குறித்து திருச்சி சிவாவுக்கு ஆதரவான ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு விளக்கம் வெளியிடப்பட்டிருக்கிறது. கலைஞரின் காதலன் கலைநிதி என்ற அந்த ஃபேஸ்புக் பக்கத்தின் முகப்பு படமாக திருச்சி சிவாவே இருக்கிறார்.
‘கஜா புயல்‘’ பாதிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் பேசக் கழகத்தின் மூத்த உறுப்பினர் அண்ணன் ‘திருச்சி சிவா’ அவர்கள், மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்களிடம் முன்னதாகவே அனுமதி பெற்றிருந்த நிலையில், நாடாளுமன்றக் குழுத் தலைவர் ‘கனிமொழி’ அவர்கள், “நானும் அதுகுறித்துத்தான் பேச இருக்கிறேன். நாடாளுமன்றக் குழுத் தலைவர் என்ற முறையில் நீங்கள் ஏன் என்னிடம் முன்னரே சொல்லவில்லை” என்று சிவா அண்ணனிடம் கேட்டதாகவும், “நான் சீனியர், உங்களிடமெல்லாம் சொல்ல வேண்டிய அவசியமில்லை” என்று அண்ணன் கோபமாகப் பேசியதாகவும் செய்திகள் உலா வருகின்றன.
4 bismi svs
அவர்கள் இருவருக்கும் நடந்த இந்த விவாதம் நான்கு பேர் பார்க்கும் அளவில் பொது வெளியில் நடைபெறவில்லை. நாடாளுமன்ற அறைக்குள் நடைபெற்றவை. அந்த அறைக்குள் என்ன நடைபெற்றது என்பது தொடர்புடைய அவர்களைத் தவிர, பிறருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பிறகு, எப்படி வெளிவந்தன இந்தச் செய்திகள்? நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மேலும் பல கற்பனை உருவங்கள் சேர்த்துக் காற்றில் உலவவிட்ட கயவர்கள் யார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இதன் மூலம் டெல்லியில் நடந்த சம்பவத்தை தலைவர் ஸ்டாலினிடம் சொன்னது கனிமொழிதானா என்று மறைமுகமாகக் கேள்வி எழுப்புகிறார்கள்.
மேலும் தொடர்ந்து, “டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி இவ்வளவுதானா அல்லது இதற்கு மேலும் வெளிவராத நிகழ்ச்சிகள் ஏவையேனும் நடந்தனவா என்பதையும் செய்திகளாகச் சொல்வார்களா?
இந்த நிகழ்ச்சி தொடர்பாக, தளபதி அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் திருச்சி சிவா அவர்களை அறிவாலயத்துக்கு அழைத்து, “கனிமொழியை யாரென்று நினைத்தீர்கள்? அவர் தலைவரின் மகள் என்பதை மறந்துவிடாதீர்கள்” என்று கண்டிக்கும் தொனியில் பேசியதாகவும் ஒரு செய்தி.
கண்ணியமிக்க நம் கழகத் தலைவர், தன் கழகத்து மூத்த உறுப்பினரை இவ்வாறு கண்டிக்கும் தொனியில் பேசியிருந்தால் அதை அவரே வெளியே சொல்லியிருக்க வாய்ப்பு இல்லை. அதேபோல தன் தலைவர் தன்னைப் பேசியதை அண்ணனும் வெளியே சொல்லியிருக்க வாய்ப்புகளும் குறைவு.

 

இரண்டு பேர் மட்டுமே அறைக்குள் உட்கார்ந்து பேசியவை அம்பலத்துக்கு வந்தது எப்படி? கழகத்தின் கண்ணியத்தைச் சீர் குலைக்கும் வகையில் இப்படி ஒரு கட்டுக்கதையைச் செய்தியாக்கி அதில் குளிர்காய நினைக்கும் குறுமதியாளர்கள் எவர்? அண்ணனுக்குப் பொதுக்குழுக் கூட்டத்தில் பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதால் பாதியில் வெளியேறிச் சென்றதாகச் செய்தி வருகிறதே, வெளியேறும்போது யாரிடம் அண்ணன் அப்படிச் சொல்லிவிட்டு வெளியேறினார்.
நடந்த நிகழ்ச்சிகள் நான்கு சுவர்களுக்குள் நடைபெற்றிருக்க, தொடர்புடைய அவர்களுக்கு அல்லாமல் வேறு எவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நடந்த நிகழ்ச்சிகளைத் திரித்துப் பொய்யான புதியதொரு கதையை உருவாக்கி இதன்மூலம் அண்ணனின் புகழை மங்கச் செய்யலாம் என்று புத்தியற்று அலைபவர்கள், இதுபோன்ற செய்திகளால் களங்கம் நேரப்போவது அண்ணனுக்கு மட்டுமல்ல; தலைவரின் புதல்வி கனிமொழி அவர்களுக்கும், தலைவர் வழி நின்று கழகத்தைக் காத்து வரும் தளபதிக்கும், நம் தலைவர் வியர்வையும் குருதியும் சிந்தி வளர்த்த நம் இனமான கழகத்துக்கும்தான் என்பதை மறந்து பதவிக்காகப் பரணி பாடும் கண்ணியமற்ற கீழ்த்தரமான செயல்களைச் செய்வதை விடுத்துக் கழகத்தின் நலனுக்கான பணிகளைச் செய்வதே நல்லது” என்று அந்த நீண்ட பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்தப் பதிவு அறிவாலயத்தில் மீண்டும் விவாதப் பொருளாகிவிட்டது.
“திருச்சி சிவா சொல்லாமல் இந்தப் பதிவை இவ்வளவு விரிவாக எழுதியிருக்க முடியாது. இந்த ஃபேஸ்புக் பக்கத்தை நடத்துவது யார் என்று திமுக ஐடி விங்கிடம் விசாரிக்கச் சொல்லியிருக்கிறார் தலைவர்” என்று அறிவாலய வட்டாரத்தில் சொல்கிறார்கள்.
மேலும், “சிவா கோபப்பட்டு பேசிய தகவல் வெளிவந்ததால் தலைவருக்கும், கனிமொழிக்கும், கழகத்துக்கும்தான் களங்கம் நேரும் என்று எழுதியிருப்பது தலைமையை மேலும் சூடாக்கியிருக்கிறது. அன்று தலைவர் ஸ்டாலின் கோபமாக திருச்சி சிவாவை அழைத்து, ‘என்ன சிவா… பிளட் பிரஷர் அதிகமாயிடுச்சா? நல்ல டாக்டரா போய் பாருங்க’ என்று ஆரம்பித்து கடுமையாக பேசினார். அதன் மூலம் ஏற்பட்ட பிரஷரால்தான் கட்சிக்கும், தலைவருக்கும், கனிமொழிக்கும் களங்கம் நேரும் என்று திருச்சி சிவாவுக்கு ஆதரவான அந்த ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியிருக்கிறார்களோ?” என்று கூறுகிறார்கள் அறிவாலயத்தில்.
முடிய வேண்டிய சர்ச்சையை திருச்சி சிவா மீண்டும் தொடர வைத்திருக்கிறார்.
5 national kavi
Leave A Reply

Your email address will not be published.