பரிதாப நிலையில் லால்குடி கோர்ட்
குடிநீர் நோ…
கழிப்பிட வசதி நோ….
செத்துப்பிழைக்கும் லிப்ட் பயணம்
திருச்சி மாவட்டத்தில், லால்குடி பல வரலாறு சிறப்புகள் கொண்ட ஒரு முக்கிய தொகுதியாகும். பேரூ ராட்சியாக இருந்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள லால் குடியில் செயல்படும் நீதிமன்றம் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் செயல்படுவது வழக்கு றைஞர்களிடையே மிகுந்த சிரமத்தை உண்டாக்கி வருகிறது என்ற தகவல் அறிந்து நாம் அங்கு சென்றோம். லால்குடியில் பல வருடங்களாக இயங்கி வந்த நீதிமன்றம் பழமையான கட்டிடம் என்ப
தாலும் இடிந்து விழும் தருவாயில் இருந்ததால் நீதிமன்றத்தை தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்ற முடிவு எடுக்கப்பட்டு, லால்குடியிலிருந்து திருச்சி செல்லும் சாலையில், குடோன் பயன்பாட்டிற்கென கட்டப்பட்ட ஒரு தனியார் கட்டிடத் தில் வாடகை அடிப்படையில் மாற்றப்பட்டு, கடந்த 2017ம் ஆண்டு நீதியரசர் சுரேஷ்குமார் திறந்து வைத்தார்.
தற்போது இக்கட்டிடத்தில் குற்றவியல் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், மாவட்ட கூடுதல் உரிமையியல் நீதிமன்றம் செயல்படுகின்றன. இந்நீதிமன்றத்தில் சுமார் 50 நீதிமன்ற பணியாளர்கள் பணிபுரிவதோடு 50 முதல் 60 வரையிலான வழக்கறிஞர்கள், 150க்கும் மேற்பட்ட வழக்காடிகள் தினமும் வந்து செல்கின்றனர்.
சுமார் 250க்கும் மேற்பட்டோர் தினமும் வந்து செல்லும் இந்நீதிமன்ற வளாகத்தில் குடிநீர் வசதி, பார்க்கிங் வசதி, போதுமான பொதுக் கழிப்பிட வசதி கிடையாது. போதிய பராமரிப்பு இல்லாத ஆண், பெண் இருவருக்கும் தலா ஒரு கழிப்பிடம். மூன்று மாடிகளைக் கொண்ட இக்கட்டிடத்தில் படிகள் செங்குத்தாகவும், குறுகலாகவும் இருப்பதால் முதியோர்கள், மாற்று திறனாளிகள் மற்றும் உடல்நலன் குன்றியோர் மேலேறிச் செல்வது மிகுந்த சிரமமான செயலாகும். இங்கு இயங்கும் வரும் லிப்ட் சரியாக வேலை செய்வதும் இல்லை.
இது குறித்து வழக்கறிஞர் அமிர்தராஜன் கூறுகையில், 200க்கும் மேற்பட்டோர் வந்து செல்லும் இந்த புதிய கோர்ட் வளாகத்தில் பார்க்கிங் வசதி கிடையாது. டூவீலரை வச்சிட்டு ஒரு அவசரத்திற்குக் கூட வெளியில் எடுத்து செல்ல முடியவில்லை. மூன்று மாடி கொண்ட இந்த கட்டடத்திற்கு லிப்ட்டுன்னு ஒன்னு இருக்கு. அது பேருக்குத்தான் லிப்ட். மாசத்துல குறைந்தபட்சம் 15 நாள் வேலை செய்யாது. மீதி நாட்களில் அந்த லிப்டில் பயணம் மேற்கொள்ளும்போது உயிரைக் கையில் பிடித்துத்தான் பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரகாஷ் என்ற வழக்கறிஞர் லிப்டில் மாட்டிக்கொண்டார். லால்குடி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து, அவர்கள் லிப்டின் மேல்பகுதியை உடைத்து வழக்கறிஞரை மயக்க நிலையில் மீட்டுள்ளனர். லால்குடிக்கு விரைவில் சொந்த நீதிமன்ற கட்டிடம் வர வேண்டும் என்பது தான் சரியான தீர்வு” என்றார்.
வழக்கறிஞர் கோபிநாத் கூறுகையில், “கொரோனா நோய்த் தொற்று காலத்தில் இது போன்ற குறுகலான கட்டிடத்தில் நீதிமன்றம் இயங்குவது நோய்த்தொற்று அதிகமாக காரணமாகிறது. வழக்கா டிகள் உட்காரவும் ஏன் நிற்கவும் கூட போதிய இடம் கிடையாது.
இதற்கு ஒரே தீர்வு லால்குடி நீதிமன்றம் சொந்தக் கட்டிடத்தில் இயங்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம் மற்றும் வழக்கறிஞர்களின் விருப்பமாக உள்ளது” என்றார்.
-பாரதி மோகன்