இந்தியாவிலே முதல்முறையாக அரசு மருத்துவமனையில் ஈரல் மாற்று அறுவைச் சிகிச்சை எப்படி நடந்தது தெரியுமா ?
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 29 ஆம் தேதி அந்தப் பெண் எனக்கு போன் செய்து, “நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன். உங்களுக்கும்
இதையடுத்து அதிகமாக உயிரிழப்பு ஏற்படும் இரைப்பை குடல் இயல் பிரிவைதொடங்கி, அதில் ஈரல் மற்றும் கணையம் அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்வதுஎன்று முடிவெடுத்தோம். அதிகமாக உபயோகப்படுத்தப்படாமல் இருக்கும் ஒரு வார்டை சிரமப்பட்டு பெற்றோம். அந்தத் துறைக்கென்று நர்சுகள் இல்லை. அதற்குப் பதிலாக ஒப்பந்த அடிப்படையில் நர்சுகளை எடுக்கும்படி கூறினார். உடனே, நர்சுகள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தை தொடங்கியது. இதில் தனியார் மருத்துவமனை ஆதரவாளர்களும் இருந்தார்கள்.
நர்சுகள் சங்கத் தலைவர் என்னிடம் வந்தார். நன்றி சொல்லி அழுதார். நான், அவரிடம் சொன்னேன்… “சிஸ்டர், நீங்கள் உங்கள் மருமகனை பற்றி சிந்திக்கிறீர்கள். நான் தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மருமகன்களை பற்றி நினைக்கிறேன்.”
இரண்டு மாதங்களாக அவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை என்றேன். உடனே அடுத்த நாள் காலை 9 மணிக்கு வந்து சந்திக்கும்படி கூறினார். போனேன். மருத்துவமனைக் கட்டிட திறப்புவிழாவுக்கு வரவேண்டும் என்று கேட்டேன்.
இந்த நிலையில்தான் நான் முதல்வர் கலைஞரை சந்தித்தேன். அவரிடம் விவரத்தை தெரிவித்தேன். அவர் உடனே அப்போதைய தலைமைச் செயலாளர் ஸ்ரீபதியை அழைத்து கவனிக்கச் சொன்னார். அவர், நான்கு மணிநேரம் ஆய்வு செய்தார்.