கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தி.மு.க மருத்துவர் அணி மருத்துவமுகாம் !

0

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தி.மு.க மருத்துவர் அணி மருத்துவமுகாம் !

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற மருத்துவ முகாமினை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்…

திருச்சி தெற்கு மாவட்டதி.மு.க மருத்துவர் அணி மற்றும் அப்பல்லோ மருத்துவமனை இணைந்து இலவச மருத்துவ முகாம் ஞாயிறு காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், இந்திரா காந்தி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

திருச்சியில் மருத்துவமுகாம்
திருச்சியில் மருத்துவமுகாம்

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தி.மு.க மருத்துவர் அணி மாநில செயலாளர் எழிலன் நாகநாதன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று இந்த மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தனர்.. திருச்சி தெற்கு மாவட்ட திமுக மருத்துவர் அணி மாவட்ட தலைவர் டாக்டர் தமிழரசன், மாவட்ட அமைப்பாளர் டாக்டர் சுரேஷ் பாபு, நிர்வாகிகள் டாக்டர்கள் பால்வண்ணன், முகமது மன்சூர் ,சந்தோஷ் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்பாட்டில் நடைபெற்றது.

திருச்சியில் மருத்துவமுகாம்
திருச்சியில் மருத்துவமுகாம்

இந்த மருத்துவ முகாமில் திருச்சி அப்பல்லோ மருத்துவமனையின் பொது மருத்துவர், நுரையீரல், இருதய நோய், சர்க்கரை நோய் ,சிறுநீரக நோய் ,எலும்பியல், குழந்தைகள் நலம், காது, மூக்கு, தொண்டை உள்ளிட்ட 15 வகையான மருத்துவ நிபுணர்கள் மற்றும் 60 மருத்துவ பணியாளர்கள் பங்கேற்று மருத்துவ பரிசோதனை செய்தனர். முகாமில் ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு, ஹீமோகுளோபின் ரத்த அளவு சரிபார்த்தல், இ.சி.ஜி ,எக்கோ கார்டியோ கிராம் ,நுரையீரல் PFT சோதனை, LIVER FIBRO Scan ,Bone Mineral Dencity உள்ளிட்ட பல்வேறு வகையான பரிசோதனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. இம்முகாமில் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்று பயனடைந்தனர்.தொடர்ந்து KALAINGAR KARUNANITHY an Intellectual Statesman என்ற தலைப்பில் ஆங்கில கருத்தரங்கம் நடைபெற்றது.

Leave A Reply

Your email address will not be published.