மதுரை மத்திய சிறையில் நியோமேக்ஸ் இயக்குநர்கள் ! 

0

இங்கே கிளிக் பண்ணுங்க.. - வேலை பெறுவது எளிது..

மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நியோமேக்ஸ் இயக்குநர்கள் !  போலீசு கஸ்டடியில் எடுக்க போலீசார் தீவிரம் !

நியோமேக்ஸ் வழக்கில் அந்நிறுவனத்தின் முன்னணி இயக்குநர்கள் தலைமறைவாக இருந்துகொண்டே முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தனர். முன்ஜாமீன் வழங்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றக் கிளை, முறையாக விசாரணைக்கு போலீசில் ஆஜர் ஆக சொல்லி அறிவுறுத்தியிருந்தது.

செம்ம சூப்பரான திரைப்படம்..

ஒருபக்கம் முன்ஜாமீன் மனு மற்றொரு பக்கம் தனிநீதிபதியை நியமிக்க வேண்டுமென்ற கோரிக்கையுடன் ரிட் மனுவையும் தாக்கல் செய்திருந்தனர். தங்களுக்கு தெரிந்த மேல்மட்ட தொடர்புகளை அணுகி எப்படியேனும் நீதிமன்ற நடவடிக்கையின் வாயிலாகவே கைது நடவடிக்கையிலிருந்து தப்பிவிட தொடர்ந்து முயற்சித்து வந்தனர்.

ஜோஸ் தங்கையா ஐபிஎஸ்
ஜோஸ் தங்கையா ஐபிஎஸ்

தற்போது விற்பனையில் அங்குசம் இதழ்...

இந்த பின்னணியில்தான், மதுரை பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசு சிறப்பு டி.எஸ்.பி. மனிஷா அர்ஜூனன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜ நளாயினி, எஸ்.ஐ.க்கள் ராமகிருஷ்ணன், மலர்விழி, கணேஷ்பாபு மற்றும் தலைமை காவலர் கோபி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் அதிரடியாக செயல்பட்டு நியோமேக்ஸ் நிறுவனத்தின் முன்னணி இயக்குநர்களான கமலக்கண்ணன் (எதிரி-6) மற்றும் சிங்காரவேலன் (எதிரி-12) ஆகியோரை நேற்றிரவு (17.09.2023) சென்னை கேளம்பாக்கத்தில் வைத்து கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட இருவரையும் மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் பொருட்டு மதுரைக்கு அழைத்து வந்தனர். கைது நடவடிக்கைகளின் ஒரு அங்கமாகவும் கட்டாய நடைமுறையாகவும் பின்பற்றப்படும் முறையான மருத்துவ பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போலீசார், இதயநோய் சிறப்பு மருத்துவர் உள்ளிட்ட அடிப்படை மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

செல்வி மனிஷா அர்ஜீன்
செல்வி மனிஷா அர்ஜீன்
7

மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு நீதிமன்ற நீதிபதி ஜோதியம்மாள் விடுமுறையில் சென்றுவிட, பொறுப்பு நீதிபதி தமிழரசி முன்னிலையில் ஆஜர்படுத்தியுள்ளனர். இருவரையும் செப்டம்பர்-29 ஆம் தேதி வரையில் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து கமலக்கண்ணன் மற்றும் சிங்காரவேலன் ஆகியோரை மதுரை மத்திய சிறையில் அடைப்பதற்காக அழைத்து சென்றனர்.

5

கடந்த செப்டம்பர்-8 அன்று மதுரையில் மூன்றாவது மனுமேளாவை நடத்தி 117 மனுக்களை பெற்ற கையோடு இந்த கைது நடவடிக்கையை நடத்தி காட்டியிருக்கின்றனர். நியோமேக்ஸ் வழக்கில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மொத்தம் 552 பேரிடமிருந்து 105 கோடி ரூபாய் மோசடிக்கான புகார்கள் வந்திருப்பதாக பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசாரின் செய்திக்குறிப்பில் தெரிவித்திருக்கிறார்கள்.

பத்திரிகைகளுக்கு போலிஸ் கொடுத்த செய்தி !
பத்திரிகைகளுக்கு போலிஸ் கொடுத்த செய்தி !

நியோமேக்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் வளைத்துப் போட்டிருக்கும் சொத்துக்களின் விவரம்; வங்கிக் கணக்குகள்; நியோமேக்ஸில் பணத்தை போட்டு ஏமாந்து நிற்கும் பாதிக்கப்பட்டவர்களின் முழுமையான எண்ணிக்கை மற்றும் மோசடி செய்த தொகை பற்றிய விவரம் ஆகியவற்றை கண்டறிய கைது செய்யப்பட்டவர்களை போலீசு கஸ்டடியில் எடுத்து புலன் விசாரணையை மேற்கொள்ள இருப்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

கமலக்கண்ணன் - சிங்காரம்
கமலக்கண்ணன் – சிங்காரம்

பொருளாதாரக்குற்றப்பிரிவில் கூடுதல் காவல் துறை இயக்குநர் திருமதி பாலநாகதேவி ஐ.பி.எஸ். மற்றும் காவல்துறை தலைவர் திருமதி சத்தியபிரியா ஐ.பி.எஸ். ஆகியோர் பொறுப்பேற்றதிலிருந்து நியோமேக்ஸ் வழக்கை விரைந்து முடிக்க முடுக்கிவிட்டிருப்பதாக சொல்கிறார்கள்.

அவர்களின் வேகத்திற்கு ஈடு கொடுக்கும் வகையிலும் இவ்வழக்கில் தனிக்கவனம் கொடுப்பதற்கென்றே, வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளர் ஜோஷ் தங்கையா மற்றும் டி.எஸ்.பி. மனிஷா அர்ஜூனன் ஆகியோர் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட நிலையில்தான் இவ்வழக்கில் அடுத்தடுத்து அதிரடிகளை காண முடிகிறது.

குறிப்பாக, ஏற்கெனவே ரூபி ஜூவல்லர்ஸ் மற்றும் ஐ.எஃப்.எஸ். மோசடி வழக்குகளை கையாண்ட அனுபவம் கொண்ட சிறப்பு டி.எஸ்.பி. மனிஷா தலைமையிலான போலீசாரின் சாதுர்யமான நடவடிக்கை மற்றும் எஸ்.பி. ஜோஸ் தங்கையா உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு காரணமாகத்தான் பக்காவாக ஸ்கெட்ச் போட்டு கமலக்கண்ணனை தூக்க முடிந்தது என போலீசு வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.

அரசியல் அழுத்தங்களுக்கு இடம் கொடுக்காமல், சிறப்பாக செயல்படும் துடிப்பான அதிகாரிகளை ’தூக்கியடிக்காமல்’, அவர்களை சுதந்திரமாக செயல்பட விட்டாலே வெகுவிரைவில் நியோமேக்ஸ் வழக்கில் முடிவை எட்டிவிடலாம் என்கிறார்கள்.

– வே.தினகரன், ஷாகுல் படங்கள்: ஆனந்த்.

6
Leave A Reply

Your email address will not be published.